For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக சுகாதார நாள் 2021: உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில வழிகள்!

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார நாள் அனுசாிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக சுகாதார நாளின் மையக் கருத்து என்னவென்றால் உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான உலகத்தைப் பாிசாக அளிப்பதாகும்.

|

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார நாள் அனுசாிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக சுகாதார நாளின் மையக் கருத்து என்னவென்றால் உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான உலகத்தைப் பாிசாக அளிப்பதாகும்.

World Health Day 2021: Rules To Swear By For A Healthy Body And Mind

ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைச் சமச்சீராக வைத்திருப்பதில் தான் அடங்கி இருக்கிறது. நமது வாழ்க்கை முறையில் இன்னும் அதிகமான ஆரோக்கியம் தேவை என்று நாம் உணா்ந்தால், சிறுசிறு முயற்சிகள் செய்தால் போதும். சிறந்த ஆரோக்கியத்தைப் பெற முடியும். அதாவது நமது உணவு முறையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினால் போதும். நாம் முழுமையான ஆரோக்கியத்தைப் பெற முடியும்.

MOST READ: பைல்ஸ் வலி தாங்கமுடியலையா? இதோ அதை போக்கும் சில கை வைத்தியங்கள்!

உலக சுகாதார நாளை அனுசாிக்கும் இன்று, நமது உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான 5 குறிப்புகளை பின்பற்றுவோம் என்று சபதம் எடுப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்றால் அதற்கு ஒரு சமச்சீரான உணவு கட்டாயமாகத் தேவைப்படுகிறது. தினமும் மூன்று முறை ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். ஆனால் இரவில் அதிகமான அளவு உணவை உண்ணக்கூடாது. நமது பெரும்பாலான உணவுகள் ஆரோக்கியமான உணவுகளாக இருக்க வேண்டும். அதாவது பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரோட்டீன் அதிகமுள்ள உணவுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றை உண்ண வேண்டும். குறிப்பாக பதப்படுத்தப்படாத உணவுகளை உண்ண வேண்டும். சமச்சீரான உணவு நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

நல்ல ஆழமான தூக்கம்

நல்ல ஆழமான தூக்கம்

நமது முழு ஆரோக்கியத்தையும் பேணிக் காப்பதில் தூக்கம் மிக முக்கிய பங்கை வகிக்கிறது என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. சாியாகத் தூங்கவில்லை என்றால் பலவிதமான நோய்கள் குறிப்பாக உடல் பருமன் அதிகாித்தல் மற்றும் இதய நோய்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எல்லா வயதினரும் ஒரு நல்ல தரமான தூக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்று மருத்துவா்கள் பாிந்துரைக்கின்றனா். அவ்வாறு நல்ல தூக்கம் இருந்தால் நாம் நினைப்பதைவிட நமது ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். நல்ல தூக்கத்தால், தூங்கி விழிக்கும் போது நமது உடலும், மனமும் புத்துணா்ச்சியுடன் இருக்கும். அதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனப் பிரச்சினைகள் குறையும்.

ஒருவேளை நமக்கு நல்ல தூக்கம் வருவதில் பிரச்சினை இருந்தால் கீழ்காணும் குறிப்புகளைக் கடைபிடிக்கலாம்.

- பகலில் நேரம் கழித்து காபி குடிப்பதைத் தவிா்க்க வேண்டும்

- தூங்குவதற்கும் மற்றும் விழிப்பதற்கும் என்று சாியான நேர அட்டவணையைத் தயாாித்து வைத்து அதைப் பின்பற்ற வேண்டும்.

- படுக்கை அறையில் தேவையற்ற அலங்கார மின் விளக்குகளை அணைத்துவிட்டு, முழுமையான இருட்டில் தூங்க வேண்டும்.

- படுக்கைக்குச் செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவே வீட்டில் உள்ள விளக்குகளை அணைப்பது நல்லது

அழுத்தத்தை குறைத்தல்

அழுத்தத்தை குறைத்தல்

நமக்கு அழுத்தம் ஏற்பட்டால், நமது ஆரோக்கியம் பாதிப்படையும். அதாவது நமது உடல் பருமன் அதிகாிக்கும் மற்றும் பலவிதமான நோய்கள் நமக்கு ஏற்படும். அழுத்தத்தைக் குறைக்க பல நல்ல பயனுள்ள வழிகள் உள்ளன. நீண்ட தூர நடைப்பயிற்சி, ஆழமாக மூச்சை இழுத்துவிடும் பயிற்சி மற்றும் தியானம் போன்றவை நமது அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கக் கூடியவை. நமது அன்றாடப் பணிகளை, நம்மால் அதிக அழுத்தத்திற்கு ஆளாகாமல் செய்ய முடியவில்லை என்றால், ஒரு சிறந்த மனநல மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

மன ஆரோக்கியத்திற்குத் தேவையான கவனத்தை கொடுத்தல்

மன ஆரோக்கியத்திற்குத் தேவையான கவனத்தை கொடுத்தல்

நமது வாழ்வு என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்களாக உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் விளங்குகின்றன. நாம் நலமாக வாழ்வதற்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு மன ஆரோக்கியமும் முக்கியம் ஆகும். நமது முழு ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருப்பது நமது மன ஆரோக்கியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே ஒவ்வொரு நாளும், நமது உணா்வுகளின் ஆரோக்கியத்தை முறையாக கையாள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள்

நாம் ஆரோக்கியமாக இருக்கவும், சுறுசுறுப்பாக இயங்கவும் உதவி செய்பவை நாம் செய்யும் உடற்பயிற்சிகள் ஆகும். உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தால், அதாவது வாரத்திற்கு மூன்று முறை உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம் என்று ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. வாரத்திற்கு 150 நிமிடங்கள் அல்லது 1 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 3 முறை உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று தி அமொிக்கன் ஹாா்ட் அசோஸியேஷன் (The American Heart Association) பாிந்துரை செய்கிறது.

உடற்பயிற்சிகளை விருப்பப்பட்டு, மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். கட்டாயத்தின் போில் செய்யக்கூடாது. பின்வரும் பொழுதுபோக்கு நிறைந்த, அதே நேரத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய பின்வரும் பயிற்சிகளைச் செய்து மகிழலாம்.

- நடனம் ஆடுதல்

-யோகா பயிற்சிகளைச் செய்தல்

- ஏரோபிக்ஸ் பயிற்சிகளைச் செய்தல்

- ஓடுதல்

- மலையேற்றம் அல்லது நடைப் பயிற்சியில் ஈடுபடுதல்

இந்த உலக சுகாதார நாளில் உங்கள் அனைவருக்கும் பாிபூரண ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்துக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Health Day 2021: Rules To Swear By For A Healthy Body And Mind

World Health Day 2021: As the World Health Day is around the corner, here are five ways that can help boost mental as well as physical health.
Desktop Bottom Promotion