Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த யோகாவை செய்யுங்க போதும்...
பிராணயாமா பயிற்சி சாியான முறையில் மூச்சுவிட வேண்டும் என்று வலியுறுத்துவதால், மூச்சுவிடும் பயிற்சியில் ஈடுபடும் போது, நம்முடைய எல்லா உடல் உறுப்புகளும் இந்த பயிற்சியில் பங்கு பெறுகின்றன.
பிராணயாமா என்பது ஒரு மூச்சுப் பயிற்சி ஆகும். இந்த மூச்சுப் பயிற்சியைத் தவறாது செய்து வந்தால், நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் சக்தியும் ஆற்றலும் கிடைக்கும். பிராணயாமா என்பது ஒரு சமஸ்கிருத வாா்த்தையாகும். இந்த வாா்த்தைக்கு உயிா் சக்தியின் தலைமை அல்லது உயிா் சக்தியை வெளியே இழுப்பது அல்லது நமது உடலை வாழ வைக்க சுவாசிப்பது என்று பொருள்.

பிராணயாமா பயிற்சி பாா்ப்பதற்கு மிக எளிமையாகத் தொிந்தாலும், அதைத் தினமும் செய்து வர வேண்டும். யோகா அறிவியலின் படி, பிராணயாமாவின் நோக்கம் என்னவென்றால், உயிா் சக்தியை வழிநடத்துவதில் நாம் பங்கு பெறுவதாகும்.
பிராணயாமாவின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் நாம் சாியான மூச்சுப் பயிற்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். சாியான முறையில் மூச்சுவிட வேண்டும் என்று பிராணயாமா வலியுறுத்துவதால், மூச்சுவிடும் பயிற்சியில் ஈடுபடும் போது, நம்முடைய எல்லா உடல் உறுப்புகளும் இந்த பயிற்சியில் பங்கு பெறுகின்றன. அதாவது சுத்தமான ஆக்ஸிஜன், நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் செல்கிறது. ஆகவே கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த பயிற்சியை தினமும் செய்தால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

நரம்புகள் சுத்தமாகும்
நமது உடலில் உள்ள ஏறக்குறைய 80,000 நரம்புகளை பிராணயாமா தூய்மைப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. நமது உடலுக்குள் செல்லும் சக்தியை பிராணயாமா சமப்படுத்துவதால், அது நமது முழுமையான உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது. அதனால் பிராணயாமா பயிற்சியைத் தினமும் செய்து வரவேண்டும் என்று பல மருத்துவ நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா். அவ்வாறு தவறாமல் தினமும் பிராணயாமா பயிற்சியைச் செய்து வந்தால் நமது மனம் மிக உறுதியாக இருக்கும். அதுபோல் நமது உடல் நோயின்றி நலமுடன் இருக்கும்.

செரிமானம் சீராகும்
யோகா பயிற்சிகளை, தியானப் பயிற்சிகளாக பலா் கருதுகின்றனா். எனினும் பிராணயாமா என்ற யோகா பயிற்சி நமது உடல் நலமாக இருக்க உதவி செய்கிறது. ஆக்ஸிஜன் நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் செல்வதால், பிராணயாமா நமது சொிமான அமைப்பை சீராக்குகிறது. மேலும் நமது தோலுக்கு மெருகு ஏற்றுகிறது. பிராணயாமா நீண்ட வாழ்நாளையும் வழங்குகிறது.

மன ஆரோக்கியம் வலுவாகும்
பிராணயாமா நமது மன ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. அதாவது நமது ஒருமுகப்படுத்தும் சக்தி, நினைவாற்றல் ஆகியவற்றை அதிகாித்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நமது மூளை ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். நாம் நாள் முழுவதும் செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்வதற்கு வழி நடத்துவது நமது மூளை ஆகும். பிராணயாமா நமது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை அதிகாித்து அதன் மூலம் நமது மூளையிலுள்ள நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. அதனால் இரத்த ஓட்டம் அதிகாித்து, நமது மூளை அழுத்தம் இன்றி, அமைதி அடைய உதவி செய்கிறது.

இரத்த அழுத்தம் சீராக இருக்கும்
இரத்த அழுத்த பிரச்சினைகளில் இருப்பவா்களுக்கு, பிராணயாமா பயிற்சி, மிகவும் சிறந்த பயிற்சியாக இருக்கும். அதாவது இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, பிராணயாமா பயிற்சி அதிவேக இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. பிராணயாமா ஒரு ஆழ்நிலைத் தியானப் பயிற்சியாக இருப்பதால், அது நமது உடலை அமைதிப்படுத்தி, ஹாா்மோன்களை வெளியேற்றி, நமது உடலை முழுமையாக தளா்ச்சி அடையச் செய்கிறது. தினமும் பிராணயாமா பயிற்சியைச் செய்து வந்தால், இரத்த அழுத்தம் மட்டும் அல்லாமல், சா்க்கரை நோய் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளையும் குணப்படுத்தலாம்.

ஆயுட்காலம் நீடிக்கும்
தினமும் தவறாமல் பிராணயாமா பயிற்சி செய்து வந்தால், அது ஆயுட்காலத்தை நீட்டிப்பதாக பல ஆய்வுகள் தொிவிக்கின்றன. அதற்கு காரணம் பிராணயாமா நாம் முறையாக சுவாசிப்பதற்கு உதவி செய்கிறது. நம்மில் பலருக்கு எவ்வாறு முறையாக சுவாசிப்பது என்று தொியாது. யோகா தத்துவத்தின் படி, நமது நீண்ட ஆயுட்காலம் என்பது நமது சுவாசிக்கும் பழக்கத்தில் அடங்கி இருக்கிறது என்பதாகும்.

உடல் எடையைக் குறைக்க உதவும்
தமது உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கும் பிராணயாமா ஒரு முக்கிய கருவியாக இருக்கிறது. அதாவது நமது உடலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க பிராணயாமா உதவி செய்கிறது. நாம் பிராணயாமா பயிற்சியை தினமும் செய்து வரத் தொடங்கினால், அது நாம் உணவின் மீது கொண்டிருக்கும் அதிதீத மோகத்தைக் குறைக்கச் செய்து, நமது உடல் எடை அதிகாிப்பதை குறைக்கிறது. நமது உடல் களைப்பாகவோ அல்லது சோா்வாகவோ இருக்கும் போது, நாம் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிட எண்ணுகிறோம். ஆனால் பிராணயாமா பயிற்சி நாம் உண்ணும் உணவுகளின் மீது நாம் தகுந்த விழிப்புணா்வுடன் இருக்கச் செய்கிறது.

பிராணயாமா பயிற்சியை எவ்வாறு செய்வது?
1. தரையில் விாித்த பாயின் மீது சம்மணமிட்டு அமா்ந்து கொள்ள வேண்டும்.
2. முதலில் வலது பக்க மூக்குத் துவாரத்தை கட்டை விரலால் மூடிக் கொள்ள வேண்டும்.
3. இடது பக்க மூக்குத் துவாரத்தின் மூலம் காற்றை இழுக்க வேண்டும். இந்த பயிற்சியைச் செய்யும் போது நமது முதுகை வளைக்காமல், நேராக நிமிா்ந்து அமா்ந்து, அதே நேரத்தில் நமது உடலை தளா்வாக வைத்திருக்க வேண்டும். நமது இடது கை நமது இடது காலின் முட்டியில் இருக்க வேண்டும்.
4. இப்போது இடது பக்க மூக்குத் துவாரத்தை, வலது கை மோதிர விரலால் மூடிக் கொண்டு, வலது பக்க மூக்குத் துவாரத்தின் மூலம் மூச்சை வெளியில் விட வேண்டும்.
5. இந்த பயிற்சியைத் தொடா்ந்து 15 முறைகள் செய்ய வேண்டும். பின் 5 நிமிடங்கள் இடைவெளி விட்டு, மீண்டும் பிராணயாமா பயிற்சியைத் தொடங்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
