குளிர்காலத்தில் கிடைக்கும் இந்த 'ஒரு' காய் உங்க இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை குறைக்க உதவுமாம்!

அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் நிறைந்த டர்னிப் காய்கறி, உங்களை நீண்ட காலத்திற்கு நிறைவாக வைத்திருக்கும் மற்றும் உடல் எடையை குறைக்கவும்.

ஒவ்வொரு சீசனும் அந்தந்த பருவகால காய்கறி மற்றும் பழங்களுக்கு பெயர் பெற்றதாக இருக்கும். பொதுவாக குளிர்காலத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகம் சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்த வகையில், முள்ளிங்கி போல இருக்கும் டர்னிப் காய்கறி இந்த பருவத்திற்கு சிறந்தது. ஆனால், குளிர்கால உணவுகளைப் பற்றி நாம் பேசும்போது, டர்னிப் காய்கறியை பற்றி நாம் அதிகமாக பேசுவதில்லை, எடுத்துக்கொள்வதும் இல்லை. டர்னிப் கோசுக்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. வேர் காய்கறிகள் வகையைச் சார்ந்த இது, குழாய் வடிவ வேர் கொண்ட கிழங்கு ஆகும். இது அடியில் கிரீமி வெள்ளை நிறம் மற்றும் மேல் பகுதியில் ஊதா நிறத்தில் இருக்கும்.

Why you should eat Turnips during the winter season in tamil

டர்னிப்பில் கால்சியம், ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சுவாரஸ்யமாக நீங்கள் காய்கறியின் வேர் மற்றும் இலை கீரைகள் இரண்டையும் உண்ணலாம். உங்கள் குளிர்கால உணவில் டர்னிப்ஸை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடல் பிரச்சனைகளை போக்குகிறது

குடல் பிரச்சனைகளை போக்குகிறது

டர்னிப்பில் நார்ச்சத்து நிறைந்தது, இது பெருங்குடலில் அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, அதிக நார்ச்சத்து உணவுகள், டைவர்டிகுலிடிஸ் (செரிமானப் பாதையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய பைகளில் ஏற்படும் அழற்சி அல்லது தொற்று) உள்ளிட்ட குடல் பிரச்சனைகளின் குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

2013 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் பார்மகாலஜியின் ஆய்வின்படி, டர்னிப்பில் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவு நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. அதிக அளவு பொட்டாசியம் உடலில் இருந்து சோடியத்தை வெளியிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் தமனிகள் விரிவடைவதற்கு உதவுகிறது. இந்த காய்கறியை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் உங்க இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

நீரிழிவு எதிர்ப்பு பண்புகள்

நீரிழிவு எதிர்ப்பு பண்புகள்

தேசிய மருத்துவ நூலகத்தில் உள்ள ஆய்வுகளின்படி, டர்னிப் சாறுகள் நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன. இன்சுலின் அல்லது குளுகோகன் விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த காய்கறி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது

ஆய்வுகளின்படி, டர்னிப்ஸ் போன்ற சிலுவை காய்கறிகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறிகளில் சில புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பல கலவைகள் உள்ளன. ஆதலால், இது புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும்.

எடை இழப்புக்கு உதவுகிறது

எடை இழப்புக்கு உதவுகிறது

அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் நிறைந்த டர்னிப் காய்கறி, உங்களை நீண்ட காலத்திற்கு நிறைவாக வைத்திருக்கும் மற்றும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இது எடையை இழக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கலையும் தடுக்கிறது.

டர்னிப் பயன்படுத்த குறிப்புகள்

டர்னிப் பயன்படுத்த குறிப்புகள்

பிசைந்த உருளைக்கிழங்கிற்கு சுவையான மாற்றாக வேகவைத்த மற்றும் பிசைந்த டர்னிப்ஸைப் பயன்படுத்தலாம். நீங்கள் டர்னிப்ஸை சூப் அல்லது சாலட்களில் சேர்க்கலாம். நீங்கள் டர்னிப் துண்டுகளை வறுத்து, அவற்றை உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஆரோக்கியமான சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion