Latest Updates
-
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!
நீங்கள் அதிகமாக எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டால், அதனால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க ஒருசில செயல்களை மேற்கொண்டால் போதும்.
எவ்வளவு தான் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்தாலும், மழைப் பெய்யும் போது அல்லது மாலை வேளைகளில் நல்ல சூடான சமோசா, பக்கோடா, பஜ்ஜியை சாப்பிட ஆசை எழும், என்ன எஉண்மை தானே? சில சமயங்களில், நம்மை அறியாமலேயே எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து கொள்வோம். அதிலும் எப்பேற்பட்ட டயட்டில் இருந்தாலும், சில உணவுகளைக் கண்டதும் கட்டுப்படுத்த முடியாமல் அதை சாப்பிட்டும் விடுவோம். விருப்பமான உணவை சுவைப்பதில் தவறேதும் இல்லை. இருப்பினும், அளவுக்கு அதிகமானால் தான் அது தீங்கு விளைவிக்கும்.

குறிப்பாக எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது, உடலின் முக்கிய உறுப்புக்களின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் அதிகமாக எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டால், அதனால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க ஒருசில செயல்களை மேற்கொண்டால் போதும்.
இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து தான். ஆகவே அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

செய்ய வேண்டியவை...
எண்ணெயில் பொரித்த உணவுகளை எப்படி எளிதில் செரிமானமடையச் செய்வது என்பதை அறிய விரும்பினால், அந்த உணவுகளை உட்கொண்ட பின் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்போது அவை என்னவென்று காண்போம்.

வெதுவெதுப்பான நீர் குடிக்கவும்
பலரும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்ட பின் வெதுவெதுப்பான பானங்களான பால் அல்லது டீயைக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால் வெதுவெதுப்பான நீர் தான் சிறந்தது. அதோடு, இது வாயில் உள்ள சுவையையும் பாழாக்காது. தண்ணீர் செரிமான மண்டலத்தை செயல்படுத்தி உடலை நச்சுத்தன்மையற்றதாக்க உதவும் என்பது அனைவரும் அறிந்ததே. உடலில் இருந்து அனைத்து எண்ணெயையும் வெளியேற்ற, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள். இதனால் உடல் வறட்சி தடுக்கப்படுவதோடு, மலச்சிக்கலும் ஏற்படாமல் இருக்கும்.

நச்சுக்களை அகற்றும் பானத்தைக் குடிக்கவும்
வெற்று நீர் அமுதம் என்றாலும், மிகச்சிறந்த பலனைப் பெறுவதற்காக அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம். இது உடலில் சேர்ந்துள்ள அனைத்து எண்ணெயையும், கொழுப்பையும் வெளியேற்றும். மேலும் நச்சுக்களை அகற்றும் பானங்கள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை வெளியேற்ற உதவி புரிந்து, உடல் பருமனாவதைத் தடுக்கும்.

நடைப்பயிற்சி
எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்டதும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைப் பருகிய பின், சுறுசுறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். பலருக்கு வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து தெரியாது. எண்ணெயில் பொரித்த மற்றும் கொழுப்புள்ள உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவற்றை எளிதில் ஜீரணிப்பதற்கு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

புரோபயோடிக்குகளை எடுக்கவும்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்ட பின் புரோபயோடிக்குகள் நிறைந்த உணவுகளான தயிர் அல்லது யோகர்ட்டை உட்கொள்ளுங்கள். இவை எண்ணெயில் பொரித்த உணவுகளால் ஆரோக்கியத்திற்கு தீங்கு நேராமல் இருக்க, குடல் தாவரங்களை ஊக்குவித்து எண்ணெய் மற்றும் கொழுப்புக்களை செரிமானமடையச் செய்யும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணவும்
நீங்கள் ஒரு நாளில் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டால், அந்நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவறாமல் உட்கொள்ளுங்கள். இதனால் அதில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மற்றும் கொழுப்புமிக்க உணவுகளால் வயிற்றில் ஏற்படும் அசௌகரியங்கள் தடுக்கப்படும்.

செய்யக்கூடாதவை...
குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ளக்கூடாது
எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டதும் செய்யக்கூடாத முக்கியமான ஒரு செயல் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ளக்கூடாது. குளிர்பானங்கள், ஐஸ் க்ரீம் என்று எதுவாயினும் சாப்பிடக்கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகள் செரிமானமாவது என்பது சற்று கடினமான செயல். அத்துடன் குளிர்ச்சியான உணவுகளை உட்கொண்டல், இன்னும் சிரமமாகிவிடும். எனவே இம்மாதிரியான உணவுகளை அறவே தொடக்கூடாது.

சாப்பிட்டதும் தூங்கக்கூடாது
முக்கியமாக எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டதும், உடனேயே தூங்க செல்லக்கூடாது. அவ்வாறு படுத்தால், அது வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகளால் அவஸ்தைப்படச் செய்துவிடும்.



Click it and Unblock the Notifications