For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி கல்லீரலை சுத்தம் செய்வதால் உடலினுள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். கல்லீரலை சுத்தம் செய்வதற்கு முன், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

|

நாம் மாசடைந்த உலகில் வாழ்ந்து வருகிறறோம். அதோடு கெமிக்கல் கலந்த உணவுகளை சாப்பிடுகிறோம், மன அழுத்தத்துடனும் இருக்கிறோம். இப்படிப்பட்ட வாழ்க்கை முறை கல்லீரலை நேரடியாக தாக்கி ஆபத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? என்ன தான் நாம் நவீன வாழ்க்கை முறையை வாழ்ந்தாலும், நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ வேண்டுமானால் உடலை, உள்ளுறுப்புக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள முயல வேண்டும்.

What Happens When You Detoxify Your Liver

மனித உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான பணியை செய்கிறது. அத்தகைய கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் சேர்வதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். கல்லீரலை சுத்தம் செய்வதற்கு முன், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். கல்லீரலை சுத்தம் செய்ய மேற்கொள்ளும் செயல்முறையால், திசுக்கள், கொழுப்பு, மூளை மற்றும் மூட்டுக்களில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படுகிறது. ஆகவே ஒட்டு மொத்த உடலும் புத்துணர்ச்சி அடைந்து, புத்துயிர் பெற்றது போன்று இருக்கும்.

MOST READ: உங்க வாயில் இருந்து எப்பவும் துர்நாற்றம் வீசுதா? இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் சுத்திகரிப்புக்கு பின் சந்திக்கும் பிரச்சனைகள்

கல்லீரல் சுத்திகரிப்புக்கு பின் சந்திக்கும் பிரச்சனைகள்

கல்லீரலை சுத்தம் செய்யும் செயலை மேற்கொண்ட பின்னர், சிலர் தலைவலி, எரிச்சலுணர்வு, குமட்டல், மூட்டு வலி அல்து சோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாக கூறினாலும், அது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதும் கூட. ஆனால் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். இப்போது, கல்லீரலை சுத்தம் செய்வதால் உடலினுள் என்னவெல்லாம் நிகழும் என்பதைக் காண்போம்.

ஆற்றல்

ஆற்றல்

கல்லீரலில் உள்ள நச்சுக்கள் உடலில் இருந்து வெளியேறிய பின்பு, மிகவும் ஆற்றலுடன் இருப்பதை உணர்வீர்கள். இத்தனை நாட்கள் நீங்கள் ஆற்றலின்றி இருந்ததற்கு காரணம், கல்லீரலில் உள்ள அதிகப்படியான நச்சுக்கள் தான். எனவே நீங்கள் உங்கள் ஆற்றலை அதிகரிக்க நினைத்தால், கல்லீரலை சுத்தம் செய்யும் முயற்சியில் இறங்குங்கள்.

சுத்தமான சருமம்

சுத்தமான சருமம்

உடலில் நச்சுக்கள் அதிகமாக இருந்தால், அது சருமத்தில் பிரதிபலிக்கும். அதுவும் முகப்பரு மற்றும் சரும வறட்சி போன்ற சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கல்லீரல் சுத்திகரிப்பால் உடலில் இருந்து நச்சுக்களான ப்ரீ-ராடிக்கல்கள் மற்றும் பிற கடினமான மெட்டல்கள் போன்றவை வெளியேற்றப்படுகின்றன. இதன் விளைவாக சருமம் பிரகாசமாகவும், சுத்தமாகவும், பொலிவோடும் காணப்படும்.

செரிமானம்

செரிமானம்

செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுவதற்கான சிறந்த வழி கல்லீரலை சுத்தம் செய்வது. இந்த செயல்முறையால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, உள்ளுறுப்புக்களை சிறப்பாக செயல்பட வைக்கும். அதோடு இது செரிமான மண்டலத்தில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது.

வீக்கம்/அழற்சியைக் குறைக்கும்

வீக்கம்/அழற்சியைக் குறைக்கும்

உடலில் நச்சுக்கள் அதிகமாக தேங்கியிருந்தால், அது அழற்சியைத் தூண்டிவிட்டு, மூட்டுக்கள் மற்றும் தசைகளில் வலியை உண்டாக்கும். ஆகவே நீங்கள் உங்கள் உடலில் ஏதேனும் வலியை அனுபவித்தால், கல்லீரலை சுத்தம் செய்ய முயலுங்கள்.

மன ஆரோக்கியம் மேம்படும்

மன ஆரோக்கியம் மேம்படும்

உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே கல்லீரல் சுத்திகரிப்பு உடல், மனம் என ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதோடு, இது மூளையில் நச்சுக்களை அகற்றி, ஆரோக்கியமான மற்றும் சந்தோஷமான மனநிலையை அளிக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens When You Detoxify Your Liver

Did you know what happens when you detoxify your liver? Read on...
Desktop Bottom Promotion