For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்துல உங்கள வாட்டிவதைக்கும் ஜலதோஷம் வருவதற்கு முன்னே தடுக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

|

குளிக்காலம் என்றாலே சளி, இருமல், ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் ஏற்படும் என்ற பயம் பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும். குளிக்காலம் தொடங்கி விட்டதால், ஜலதோஷம் அதிகமாக உள்ளது. மூக்கு ஒழுகுதல், தலைவலி, உடல்வலி மற்றும் தொண்டை வலி ஆகியவை நமது அன்றாட பணிகளைச் செய்வதில் மிகவும் சங்கடமாக இருக்கும். மேலும் நாம் செய்ய விரும்புவது படுக்கையில் சுருண்டு சிறிது சூடான பானத்தைப் பருகுவதுதான். அதற்கு மேல், குளிர்ந்த காற்று இந்த அறிகுறிகளை இன்னும் மோசமாக்குகிறது. பல நாட்களுக்கு நம் அன்றாட வேலைகளை செய்ய விடாமல் இது தடுக்கிறது.

நோய்வாய்ப்பட்டு, நாள் முழுவதும் படுக்கையில் இருப்பதை யாரும் விரும்புவதில்லை. எனவே, மூக்கடைப்புக்கு நிவாரணம் பெற மாத்திரைகள் மற்றும் நீராவி எடுத்துக்கொள்வதை விட, சளி தொடங்கும் முன்பே அதை நிறுத்துவது நல்லது. இந்த குளிர்காலத்தில் ஜலதோஷம் வராமல் தடுக்கவும், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும் சில குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொடர்ந்து கைகளை கழுவவும்

தொடர்ந்து கைகளை கழுவவும்

கொரோனா தொற்று பரவலின் காரணமாக நம் கைகளை நன்றாக கழுவுகிறோம். நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க, உணவு உண்ணுவதற்கு முன் அல்லது முகத்தைத் தொடும் முன் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்ற முக்கியமான பாடத்தை தொற்றுநோய் நமக்கு கற்றுத் தந்ததுள்ளது. குளிர்காலத்திலும் நாம் அதைத் தொடர வேண்டும். ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ்கள் பாதிக்கப்பட்ட நபரின் இருமல் மற்றும் தும்மலில் இருந்து வைரஸ் பரவுகின்றது. அவை 24 மணி நேரம் கைகளிலும் பரப்பிலும் உயிர்வாழும். எனவே, உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது, நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு முன் அல்லது முகத்தைத் தொடுவதற்கு முன் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.

நீரேற்றத்துடன் இருங்கள்

நீரேற்றத்துடன் இருங்கள்

பொதுவாக குளிர்காலத்தில், உங்கள் தினசரி நீர் உட்கொள்ளும் அளவு குறைகிறது. குளிர் காலநிலையால் தாகம் எடுப்பதில்லை. அதனால் நாம் யாருமே தண்ணீர் அதிகம் அருந்துவதில்லை. இது மிகவும் தவறானது. நாம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலில் நீரிழப்பு ஏற்படும். மேலும், இந்த காலநிலையில் வாய்ப்புண் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், நோய் வராமல் தடுக்கவும் தண்ணீர் உதவுகிறது. எனவே, நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் , ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்கவும். உங்கள் திரவ உட்கொள்ளல் அளவை அதிகரிக்க நீங்கள் சூப் மற்றும் மூலிகை தேநீர் அருந்தலாம்.

ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்

ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்

அந்தந்த பருவத்தில் ஆரோக்கியமான மற்றும் நன்கு சமநிலையான உணவை உண்ணுங்கள். இது போதுமான அளவு ஊட்டச்சத்துக்களைப் பெறவும் , உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். துத்தநாகம் மற்றும் வைட்டமின் டி உட்கொள்ளும் அளவுகளில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்வாய்ப்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. கீரைகள், முழு தானியங்கள், நட்ஸ்கள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்.

போதுமான தூக்கம்

போதுமான தூக்கம்

ஜலதோஷத்தை எதிர்த்துப் போராடவும், தடுக்கவும் போதுமான தூக்கம் நமக்கு அவசியம். தூக்கமின்மை பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மோசமான தூக்கத்தின் விளைவு வைரஸ்கள் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதை உடலுக்கு கடினமாக்குகிறது. இரவில் தரமான தூக்கத்தைப் பெறும்போது, ​​​​நமது உடல் சைட்டோகைன்களை உற்பத்தி செய்து வெளியிடுகிறது. தொற்று மற்றும் வீக்கத்தை குறிவைக்கும் புரதங்களின் வகைகள். எனவே, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்க தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் குறைக்க அல்லது தசைகளை வலிமைப்படுத்துவதற்கு மட்டும் இன்றியமையாதது அல்ல. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சளி பிடிக்காமல் தடுக்கவும் உதவுகிறது. உடற்பயிற்சி செய்வது நமது நோயெதிர்ப்பு செல்கள் உங்கள் உடலைச் சுற்றி விரைவாகப் பயணிக்க உதவுகிறது . இது உங்கள் சுழற்சியை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வழியில், இது உடலை சிறந்த முறையில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. நடைபயிற்சி, யோகா, தியானம், ஓட்டம் மற்றும் வலிமை பயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சிகளை பின்பற்றுவதன் மூலம் சுறுசுறுப்பாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

ways to prevent cold before it starts in tamil

Here we are talking about the ways to prevent cold before it starts in tamil.
Story first published: Tuesday, December 7, 2021, 13:10 [IST]