For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூங்கும் போது ஏன் ஒரு கால் மட்டும் போர்வைக்கு வெளியே இருக்கணும் தெரியுமா?

தூக்க பிரச்சனையை எளிதில் சமாளிப்பதற்கு வித்தியாசமான ஒரு வழி உள்ளது. அது என்னவென்றால் தூங்கும் போது ஒரு பாதத்தை மட்டும் போர்வைக்கு வெளியே வைத்துக் கொண்டு தூங்குவது.

|

நம்மில் பலரும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு போராடுவோம். சில நேரங்களில் தூக்கமின்மை என்ற நீண்ட கால தூக்க பிரச்சனையையும் எதிர்கொள்கிறோம். இருப்பினும், இந்த தூக்க பிரச்சனையை எளிதில் சமாளிப்பதற்கு வித்தியாசமான ஒரு வழி உள்ளது. அது என்னவென்றால் தூங்கும் போது ஒரு பாதத்தை மட்டும் போர்வைக்கு வெளியே வைத்துக் கொண்டு தூங்குவது. ஆம், நீங்கள் சரியாகத் தான் படித்தீர்கள்!

Unable To Sleep At Night? Put One Foot Out Of The Blanket

சில நேரங்களில் நாம் இரவில் நன்கு போர்த்திக் கொண்டு தூங்கி இருப்போம். ஆனால் தூங்கி எழும் போது கவனித்தால், நமது ஒரு பாதம் மட்டும் போர்வையில் இருந்து வெளியே இருப்பதை காண்போம். அது எப்படி மற்றும் எதனால் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரியான வெப்பநிலை

சரியான வெப்பநிலை

இரவு ஒரு நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான ஒரு சிறந்த வெப்பநிலை என்றால் அது 60-67°F ஆக இருக்கும். மேலும் நமது பாதங்கள் சரியான வெப்பநிலையில் உடலை வைத்துக் கொள்ள உதவுகின்றன. பொதுவாக தூக்கத்தைத் தூண்டுவதற்கு, நம் உடல் வெப்பநிலை வழக்கத்தை விட 1 முதல் 2 டிகிரி வரை குறைய வேண்டும். அதனால் தான் உடல் சூடாக இருக்கும் போது தூங்க போராடுகிறோம். ஆகவே உடலைக் குளிர்விப்பது முக்கியம் மற்றும் அதற்கு ஒரு பாதத்தை போர்வையில் இருந்து ஒரு அடி வெளியே நீட்டி தூங்குவது ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

காரணம்

காரணம்

நம் பாதங்களில் மிகவும் சிறப்பான வாஸ்குலர் கட்டமைப்புகள் உள்ளன. அவை உடல் வெப்பத்தை வெளியேற்றும் இடமாக அமைகின்றன. மேலும், பாதங்கள் முடி இல்லாதவை. எனவே இரவு முழுவதும் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், உடலின் வெப்பநிலையை சரியான சமநிலையில் பராமரிக்கவும் ஒரு பாதத்தை போர்வைக்கு வெளியே நீட்டி தூங்குவது சிறந்த தந்திரமாக இருக்கும்.

உளவியல் பேராசிரியர் கூற்று

உளவியல் பேராசிரியர் கூற்று

தேசிய தூக்க அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளரும், அலபாமா பல்கலைகழகத்தின் உளவியல் பேராசிரியருமான நடாலி டோவிச் கூறுகையில், "நமது பாதங்கள் உடலின் வெப்பநிலையைக் குறைக்க மிகச்சிறந்த கருவியாகும். ஏனெனில் அவை முடி இல்லாதவை மற்றும் வெப்பத்தை வெளியேற்ற உதவும் சரியான வாஸ்குலர் கட்டமைப்புகள் உள்ளன". மேலும் பாதங்களை போர்வைக்கு வெளியே நீட்டித் தூங்குவது, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும் என்றும் கூறினார்.

கால்களில் சாக்ஸ்

கால்களில் சாக்ஸ்

அதேப் போல் குளிர்காலங்களில் உடல் வெப்பநிலையை சரியாக வைத்திருக்க ஒரு ஜோடி சாக்ஸை இரவு தூங்கும் போது அணிவது நல்ல தூக்கத்தைப் பெற உதவும். மேலும் குளிர்காலத்தில் நாம் ஏன் அதிக நேரம் தூங்குகிறோம் என்றால், காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பது தான் காரணம்.

ஆய்வு

ஆய்வு

பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மேற்கொண்ட ஒரு ஆய்வில் பங்கு கொண்ட தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் குளிரூட்டும் தொப்பியை அணிந்து கொண்டு தூங்கியதில், தூக்கமின்மை இல்லாதவர்களைப் போன்று நன்கு தூங்க முடிந்தது என்பது தெரிய வந்தது.

ஆகவே எப்போது ஒருவரது உடல் வெப்பநிலை குறைகிறதோ, அப்போது மனித உடலின் தூக்க நேர அமைப்புகள் செயல்படுத்தப்படுவதாக சுவிட்சர்லாந்தில் உள்ள காலவரிசை மையம் தீர்மானித்தது.

அதிகாலையில் ஏன் நல்ல தூக்கம் கிடைக்கிறது தெரியுமா?

அதிகாலையில் ஏன் நல்ல தூக்கம் கிடைக்கிறது தெரியுமா?

பல ஆய்வுகள் அதிகாலை 5 மணியளவில் உடலுக்கு தேவையான மிகச்சிறந்த வெப்பநிலை இருப்பதாக தெரிவிக்கின்றன. அதனால் தான், அதிகாலையில் 5 மணியளவில் கட்டுப்படுத்த முடியாத தூக்கத்தைப் அனைவரும் பெறுகின்றனர்.

சூடான காலங்களில் இரவு நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான பிற வழிகள்:

சூடான காலங்களில் இரவு நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான பிற வழிகள்:

* சாட்டின், பட்டு அல்லது பாலியஸ்டர் பொருட்களை விட காட்டன் பெட்சீட்டுக்கள் மற்றும் தலையணை உறைகளைப் பயன்படுத்தவும்.

* படுக்கைக்கு சில நிமிடங்களுக்கு முன் காட்டன் பெட்சீட்டுக்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து பயன்படுத்தலாம்.

* சூடான வாட்டர் பாட்டில்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து, தூங்குவதற்கு சிறிது நேரம் வைத்து எடுத்து பயன்படுத்தலாம்.

* ஐஸ் பேக்கை கழுத்து, கணுக்கால் மற்றும் மணிக்கட்டு போன்ற பகுதிகளில் ஐஸ் பேக்கை வைக்கலாம்.

* இறுதியாக படுக்கைக்கு செல்வதற்கு முன் குளிர்ச்சியான நீரில் குளித்து விட்டு தூங்குங்கள். இது அதிகமான உடலின் வெப்பநிலையைக் றைக்குகும்,

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unable To Sleep At Night? Put One Foot Out Of The Blanket

Many of us struggle to fall asleep and some times we also face a chronic sleep issue called insomnia. However, strangely there is one super-easy way ...
Desktop Bottom Promotion