For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா?

கலோரி குறைவான மற்றும் கொழுப்பு குறைவான ஊட்டச்சத்துள்ள உணவுகளுடன், ஒருசில ஆரோக்கியமான பானங்களைக் குடிப்பதன் மூலம், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் உடலில் மாயங்கள் நிகழலாம்.

|

உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர்டென்சன் என்பது தொடர்ச்சியாக இரத்த அழுத்தமானது இரத்த குழாய் சுவர்களுக்கு எதிராக இருக்கும் நிலையாகும். பொதுவாக சாதாரண நிலையில் ஒருவரது இரத்த அழுத்த அளவானது 120/90 ஆகும். ஆனால் எப்போது ஒருவரது இரத்த அழுத்த அளவானது 140/90 ஆக உள்ளதோ, அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தமாக கருதப்படுகிறது.

This Amazing Drink May Help To Manage Hypertension

ஒவ்வொரு வருடமும் பல மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஒருவருக்கு சில வருடங்கள் இருக்கலாம் அல்லது வாழ்நாள் முழுவதும் கூட இருக்கலாம். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் தீவிரமாக உள்ளது என்பதற்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை. ஆனால் உயர் இரத்த அழுத்தத்தை நீண்ட நாட்களாக கண்டு கொள்ளாமல் இருந்தால், அதனால் பல தீவிர ஆரோக்கிய பிரச்சனைகளான இதய நோய் மற்றும் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவில் கவனம் அவசியம்

உணவில் கவனம் அவசியம்

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அன்றாடம் உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் உணவில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு ஓர் அற்புதமான பானம் உள்ளது. இது உலகம் முழுவதும் கிடைக்கக்கூடிய, இயற்கை தந்த ஓர் வரப்பிரசாதம் என்றும் கூறலாம். அது தான் இளநீர்.

மதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா?

உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் டயட்

உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் டயட்

உயர் இரத்த அழுத்த நோயாளிகள் சோடியம் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவான, அதே சமயம் நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். மேலும் கலோரி குறைவான மற்றும் கொழுப்பு குறைவான ஊட்டச்சத்துள்ள உணவுகளுடன், ஒருசில ஆரோக்கியமான பானங்களைக் குடிப்பதன் மூலம், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் உடலில் மாயங்கள் நிகழலாம். அப்படி ஓர் மாயத்தை ஏற்படுத்தக்கூடிய ஓர் பானம் தான் இளநீர்.

இளநீர்

இளநீர்

இளநீர் கோடைக்காலத்தில் மட்டுமின்றி, அனைத்துக் காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஓர் ஆரோக்கியமான பானமாகும். உலகம் முழுவதும் மக்கள் தாகத்தைத் தணிப்பதற்கும், உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கும் இளநீரை வாங்கிப் பருகுவார்கள். ஆனால் இளநீரில் உள்ள ஓர் ஸ்பெஷல், உயர் இரத்த நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பானம். இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால், ஸ்பெஷலான நன்மைகளைப் பெறலாம். அவையாவன....

காலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா?

கலோரிகள் குறைவு

கலோரிகள் குறைவு

100 மிலி இளநீரில் 19 கலோரிகள் தான் உள்ளது. மேலும் இளநீரில் கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை. எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்க நினைப்போரும், இந்த அற்புத பானத்தைப் பருகலாம்.

பொட்டாசியம் அதிகம்

பொட்டாசியம் அதிகம்

உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமான கனிமச்சத்து பொட்டாசியம். இந்த பொட்டாசியம் தான் உப்பினால் ஏற்படும் தாக்கத்தைத் தடுக்கிறது. இளநீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. 100 மிலி இளநீரில் சுமார் 250 மிகி பொட்டாசியம் உள்ளது.

தினமும் இரவில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்த சீரக டீயைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இரத்த கொலஸ்ட்ரால் குறையும்

இரத்த கொலஸ்ட்ரால் குறையும்

இரத்த கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரண்டிற்குமே தொடர்புள்ளது. தமனிகள் தடிமனாவதால், இதயம் இரத்தத்தை அழுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகும். இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இளநீரைக் குடித்தால், அது ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இரத்த கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி, உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

ஆய்வுகள்

ஆய்வுகள்

பல்வேறு ஆய்வுகளிலும் இளநீர் வெறும் சுவையான பானம் மட்டுமல்ல, எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்தவை மற்றும் உயர் இரத்த நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், தினமும் தவறாமல் இளநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Amazing Drink May Help To Manage Hypertension

Want to know how coconut water helps to manage hypertension/ high blood pressure? Read on to know more...
Desktop Bottom Promotion