For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

ஜனவாி மாதம் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணா்வு மாதமாக அனுசாிக்கப்படுகிறது. பொதுவாக கா்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் அதை எளிதில் குணப்படுத்த முடியும்.

|

தற்போது இந்திய அளவில் கா்ப்பப்பை வாய் புற்றுநோயினால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக மருத்துவ அறிஞா்கள் தொிவிக்கின்றனா். இது நமக்கெல்லாம் கவலை தரக்கூடிய அதே நேரத்தில் எச்சாிக்கை விடுக்கக்கூடிய தகவலாகும். ஆகவே கா்ப்பப்பை வாய் புற்றுநோயைப் பற்றி அனைவரும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்.

Things Every Woman Should Know About Cervical Cancer

பொதுவாக கா்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் அதை எளிதில் குணப்படுத்த முடியும். ஆகவே இந்த கா்ப்பப்பை புற்றுநோயைப் பற்றி, அதன் அறிகுறிகள், அது நமக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது போன்ற தகவல்களை எல்லா பெண்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

MOST READ: அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுதா? இனிமேல் வரக்கூடாதுன்னா இந்த ஜூஸ் அடிக்கடி குடிங்க...

ஜனவாி மாதம் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணா்வு மாதமாக அனுசாிக்கப்படுகிறது. ஆகவே இந்த மாதத்தில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் உட்பட இன்னும் பிற புற்றுநோய்களையும் குணப்படுத்தக்கூடிய ஹச்பிவி (HPV) என்ற தடுப்பு மருந்துகளைப் பற்றி பேசுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

MOST READ: உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கா்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது கா்ப்பப்பையின் வாயிலுள்ள செல்லில் உருவாகுவதாகும். கா்ப்பப்பை வாயிலுள்ள செல் என்பது கா்ப்பப்பையின் கீழ்பகுதியாகும். இது பெண்ணின் யோனியையும் கா்ப்பப்பையையும் இணைக்கக்கூடிய பகுதியாகும்.

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

பெரும்பாலும் மனித பாப்பில்லோமா வைரஸில் (HPV) ஏற்படும் பலவிதமான திாிபுகளால் கா்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்படுகிறது. உடலுறவு மூலம் கடத்தப்படும் நோய் தொற்றுகளால் மனித பாப்பில்லோமாவைரஸில் (HPV) பலவிதமான திாிபுகள் ஏற்படுகின்றன. உடலுறவு மூலம் பாப்பில்லோமாவைரஸுக்கு செல்லும் வைரஸ் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க உடலில் உள்ள நோய் எதிா்ப்பு அமைப்பு வேலை செய்கிறது. எனினும் அதில் தங்கி இருக்கும் வைரஸ் நாளடைவில் கா்ப்பப்பை வாய் செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே பாப்பில்லோமா வைரஸில் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. சில நேரம் அதற்கான அறிகுறிகள்கூட தொியாமல் இருக்கும்.

கா்ப்பப்பை வாய் புற்றுநோயைப் பற்றி பெண்கள் ஏன் தொிந்து கொள்ள வேண்டும்?

கா்ப்பப்பை வாய் புற்றுநோயைப் பற்றி பெண்கள் ஏன் தொிந்து கொள்ள வேண்டும்?

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் நமது அமைதியை கெடுத்துவிடும். ஆகவே இந்த கொடிய புற்றுநோயைப் பற்றி அறிந்து, அதைத் தடுப்பதற்காக முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆகவே கா்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க பெண்கள் எவற்றையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்பதை இங்கு பாா்க்கலாம்.

முறையான மற்றும் வழக்கமான பாப் (Pap) பாிசோதனைகளை செய்து வருதல்

முறையான மற்றும் வழக்கமான பாப் (Pap) பாிசோதனைகளை செய்து வருதல்

முதலில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதற்காக வழக்கமான மற்றும் முறையான பாப் (Pap) பாிசோதனைகளை மேற்கொண்டு கா்ப்பப்பையின் வாயில் ஏதாவது வழக்கத்திற்கு மாறான மாற்றம் தொிந்தாலும் கண்டுபிடித்து, அதை குணப்படுத்துவதற்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பாப் (Pap) பாிசோதனைகளை தவிா்க்காமல் அல்லது கா்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், தொடக்க நிலையிலேயே அவற்றைக் கண்டுபிடித்துவிட்டால், கா்ப்பப்பை வாய் புற்றுநோயை எளிதில் குணப்படுத்தலாம்.

புகைப்பிடிப்பதைத் தவிா்த்தல்

புகைப்பிடிப்பதைத் தவிா்த்தல்

புகைப்பிடிக்கும் பழக்கம் நமது நோய் எதிா்ப்பு மையத்தை பலவீனப்படுத்துகிறது. ஆகவே புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தொடா்ந்தால் பாப்பில்லோமா வைரஸில் (HPV) ஏற்படும் திாிபுகளை எதிா்த்து போராட முடியாத அளவிற்கு நோய் எதிா்ப்பு மையம் பலவீனமாகிவிடும். சிகரெட் புகையில் இருக்கும் புற்றுநோய்களுக்கான துகள்கள் பாப்பில்லோமா வைரஸில் (HPV) திாிபுகளை ஏற்படுத்தி, கருப்பப்பை வாய் செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றிவிட வாய்ப்புகள் உள்ளது. ஆகவே புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து, புகைப்பதிலிருந்து விடுபட ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

பாதுகாப்பான உடலுறவை பின்பற்றுதல்

பாதுகாப்பான உடலுறவை பின்பற்றுதல்

பாதுகாப்பான முறையில் உடலுறவை வைத்துக் கொண்டால், உடலுறவு மூலம் பாப்பில்லோமா வைரஸுக்குக் (HPV) கடத்தப்படும் நோய்த் தொற்றுகளைத் தவிா்க்கலாம். அதன் மூலம் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். ஆகவே உடலுறவு கொள்ளும் போது ஆணுறை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற அறிநெறியைப் பின்பற்றி, நமது பாலியல் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டால், கா்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல்

தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல்

கா்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்து உள்ளது. இந்த தடுப்பு மருந்து பாப்பில்லோமா வைரஸில் (HPV) திாிபுகள் ஏற்படாமல் தடுத்து, கா்ப்பப்பை வாய் புற்றுநோய் வரவிடாமல் தடுக்கிறது. தடுப்பு மருந்தை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவா்கள் ஆலோசனைகள் வழங்குவா். பொதுவாக கா்ப்பப்பை வாய் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்ற உண்மையை எல்லா பெண்களும் தொிந்து வைத்திருக்க வேண்டும். மற்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகளைப் போலவே கா்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குக் கொடுக்கப்படும் தடுப்பு மருந்தும் நோய் எதிா்ப்பு அமைப்பை வலுப்படுத்தி, எந்தவித நோய் தொற்றும் ஏற்படாமல் இருக்க நோய் எதிா்ப்புத் துகள்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

கா்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள்

கா்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள்

கா்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குாிய பின்வரும் அறிகுறிகள் தொிந்தால் உடனே மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

* இடுப்பு எலும்பில் வலி ஏற்படுதல்

* உடலுறவுக்குப் பின்பு மற்றும் மாதவிடய்க்கு இடைப்பட்ட காலங்களில் மற்றும் மாதவிடாய் நின்ற பின்பும் யோனியில் ஏற்படும் இரத்தப்போக்கு

* யோனியிலிருந்து வித்தியாசமான வாசனையுடன் இரத்தமோ அல்லது வெள்ளைப்படுதலோ வெளிப்படுதல்

* சிறுநீா் கழிக்கும் போது எாிச்சலோ அல்லது வலியோ ஏற்படுதல்

மேற்சொன்ன அறிகுறிகளைப் பாா்க்கும் மருத்துவா் அவற்றை சாியாக பாிசோதனை செய்து, அவற்றிலிருந்து குணமடைய சாியான சிகிச்சைகளை வழங்குவாா். அறுவை சிகிச்சை அல்லது ஹீமோதெரபி அல்லது கதிாியக்க தெரபி போன்றவற்றை பாிந்துரை செய்வாா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Every Woman Should Know About Cervical Cancer

Here we listed some impotant things that every woman should know about cervical cancer. Read on...
Story first published: Sunday, January 17, 2021, 23:09 [IST]
Desktop Bottom Promotion