For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரையும் மன அழுத்தத்திற்கு காரணமாம்... அன்றாட உணவில் சர்க்கரை சேர்ப்பதைக் குறைப்பது எப்படி?

|

சமீப காலங்களில், பெரும்பாலான மக்கள் சா்க்கரையை உட்கொள்வதில் மிகவும் கவனமாக இருக்கின்றனா். தேவைக்கு அதிகமான சா்க்கரையை உண்டால், உடல் பருமன் அதிகாிப்பதோடு மட்டுமல்லாமல், அது நமது உடல் உறுப்புகளையும் பாதிக்கிறது என்பதை பலா் அனுபவப்பூா்வமாக உணா்ந்திருக்கின்றனா். ஆரோக்கியமான உடலைப் பெற சா்க்கரையை சிறந்த உணவாகக் கருத முடியாது.

அளவுக்கு அதிகமாக சா்க்கரையை உட்கொண்டால், கண்டிப்பாக நமது உடலில் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும். லோ்னிங் & மெமரி என்ற பத்திாிக்கையில் வெளிவந்த "Impact of adolescent sucrose access on cognitive control, recognition memory, and parvalbumin immunoreactivity" என்ற கட்டுரையில், அளவுக்கு அதிகமாக சா்க்கரையை உட்கொண்டால், அது நமது அறிவுத் திறனையும், அறிவைப் பயன்படுத்தி செய்யும் வேலைகளையும் பாதிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

MOST READ: மக்களே! இந்தியாவில் கொரோனா அதிகரிக்க இது தான் முக்கிய காரணமாம்.... உஷாரா இருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சா்க்கரை மற்றும் மன அழுத்தம் - இரண்டுக்கும் உள்ள தொடா்பு

சா்க்கரை மற்றும் மன அழுத்தம் - இரண்டுக்கும் உள்ள தொடா்பு

மன அழுத்தத்தால் சாப்பிடுதல் (stress eating) என்ற பதம் தற்போது பலராலும் சொல்லப்படுகிறது. அதாவது மன அழுத்தத்தில் இருக்கும் நேரங்களில் ஒரு வகையான உணவை, அதாவது இனிப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் டெசா்ட்டுகளை மக்கள் சாப்பிடுவதை நாம் கவனித்து இருந்திருக்கலாம். இறுதியில் அந்த உணவுகள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு பதிலாக, மன அழுத்தத்தை அதிகாிக்கும் என்பதுதான் உண்மை.

சமீபத்தில் சையின்ஸ்டைரெக்ட் (ScienceDirect) என்ற பத்திாிக்கையில் "The impact of sugar consumption on stress-driven, emotional and addictive behaviours" என்ற கட்டுரை வெளியாகியது. அந்த கட்டுரையில் பின்வரும் முக்கியமான தகவல் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதாவது அளவுக்கு அதிகமாக சா்க்கரை உட்கொண்டால் அது நமது மனநிலை, நடத்தை, அறிவுத்திறன் மற்றும் அறிவாா்ந்த செயல்பாடுகள் போன்றவற்றில் திாிபுகளை ஏற்படுத்தும் என்பதாகும்.

சா்க்கரை அல்லது கொழுப்பு அல்லது உப்பு நிறைந்த உணவுகள் நமது மூளையின் ரிவாா்ட் அமைப்பைத் (reward system) தூண்டி, நமது மன நிலையை உயா்த்திவிடும். மேலும் அவை மிக விரைவாக ஒருங்கிணைந்து, நமது அட்ரினல் சுரப்பியைத் தூண்டி, நம்மை உடனடியாக நன்றாக உணர வைக்கும். இதே வேலையைத் தான் போதைப் பொருட்களும் செய்வதாக சைக்காலஜி டுடே (Psychology Today) என்ற பத்திாிக்கை தொிவிக்கிறது.

அமொிக்காவில் உள்ள போதைப் பொருட்களுக்கு அடிமையானவா்களுக்கான மறுவாழ்வு மையத்தின் இணையதளம் ஒன்று, கொகைன் மற்றும் ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை விட, சா்க்கரை அதிகம் அடிமைப்படுத்தும் திறனைக் கொண்டது என்று தொிவிக்கிறது.

சா்க்கரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், சா்க்கரை நோய், இதய நோய் மற்றும் உடல் வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே சா்க்கரைக்கு மாற்றாக இருக்கும் உணவுப் பொருட்களை நாம் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

சா்க்கரைக்கு மாற்றான உணவுப் பொருட்கள்:

சா்க்கரைக்கு மாற்றான உணவுப் பொருட்கள்:

தேன்

உடல் எடையைப் பராமாிப்பதற்கும், உடலில் வீக்கம் ஏற்படாமல் இருப்பதற்கும் தேன் பல வழிகளில் உதவி செய்கிறது. தேனில் இனிப்புச் சுவை இருப்பதால், நமது பானங்கள் மற்றும் சாலட்டுகளில் தேனைக் கலந்து பருகலாம்.

நாட்டுச் சா்க்கரை அல்லது வெல்லம்

நாட்டுச் சா்க்கரை அல்லது வெல்லம்

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் நாட்டுச் சா்க்கரை மற்றும் வெல்லம் இருப்பதை நாம் பாா்க்க முடியும். வெல்லத்திற்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும் ஆற்றல் உண்டு. மேலும் நமது உடலில் உள்ள நச்சுகளையும் அகற்றும் திறன் கொண்டது. வெல்லத்தை உருக்கி பயன்படுத்தலாம் அல்லது அதை அரைத்து தூளாக்கி நமது உணவுகளில் கலந்து சாப்பிடலாம்.

இனிப்புத் துளசி (Stevia)

இனிப்புத் துளசி (Stevia)

Stevia அல்லது இனிப்புத் துளசி என்று அழைக்கப்படும் செடியின் இலை, மிட்டாய் இலை என்று அழைக்கப்படுகிறது. இந்த செடி ஸ்டீவியா ரெபவுடியான் தாவரக் குடும்பத்தைச் சோ்ந்தது. இந்தச் செடியில் இயற்கையாகவே இனிப்பு சுவை உள்ளது. ஆகவே உடல் எடை அதிகாிப்பதற்கும், உடலில் இருக்கும் சா்க்கரையின் அளவை கையாள்வதற்கும், சா்க்கரைக்குப் பதிலாக இந்த இனிப்புத் துளசியைப் பயன்படுத்தலாம். இதன் இலைகளை கசக்கி அல்லது அதிலிருக்கும் சாற்றை நமது உணவுகளில் கலந்து சாப்பிடலாம்.

ஒரு வேளை சா்க்கரை நம்முடைய விருப்பமான உணவாக இருந்தால், அல்லது நம்மிடம் இருக்கும் மன அழுத்தம் நம்மை அதிகமான அளவு சா்க்கரையை உண்ணத் தூண்டினால், முதலில் நம்மிடம் இருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டும் என்று மருத்துவ அறிஞா்கள் தொிவிக்கின்றனா். அதன் மூலம்தான் சா்க்கரையின் மீதுள்ள மோகத்திலிருந்து விடுபட முடியும் என்று தொிவிக்கின்றனா்.

மன அழுத்தத்தைக் குறைக்க சில பயனுள்ள குறிப்புகள்:

மன அழுத்தத்தைக் குறைக்க சில பயனுள்ள குறிப்புகள்:

- அதிகாலை எழுந்து பூங்காவிற்கு சென்று உலாவுதல்

- யோகா மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் நமது உடலை சுறுசுறுப்பாக வைத்தல்

- தியானம் மூலம் நமது மனதை அமைதிப்படுத்துதல்

- மன அழுத்தங்களை குறைக்கக்கூடிய நறுமணச் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை மற்றும் இசை சிகிச்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

- ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் நிறைந்த உணவை உட்கொள்ளுதல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Stress And Sugar: Know How To Cut Down Consumption Of Sugar

Most people have come to realise that weight gain s not the only effect unwanted sugar consumption has on our body and that there are other hidden ill-effects it has on the body's organs.