For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் புழுக்கள் அதிகம் இருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

ஒவ்வொரு குடல் புழுக்களும் பல வடிவங்களில், அளவுகளில் இருக்கும் மற்றும் அது பல்வேறு பிரச்சனைகளையும் உண்டாக்கும்.ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட்10 ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க நாள் கொண்டாடப்படுகிறது.

|

ஒட்டுண்ணிகள் என்பது எந்தவொரு உயிரினத்தையும் சார்ந்து, அதன் உடலில் உள்ள சத்துக்களை உறிஞ்சி உயிர் வாழக்கூடியது. உலகில் மனித உடலை சார்ந்து வாழும் ஏராளமான ஒட்டுண்ணிகள் உள்ளன. அதில் உருளைப்புழுக்கள், நாடாப்புழுக்கள், ஊசிப்புழக்கள், கொக்கிப்புழுக்கள் போன்றவை மனிதனின் குடலில் வாழும் ஒட்டுண்ணி புழுக்களாகும். இவற்றில் ஒவ்வொரு புழுக்களும் பல வடிவங்களில், அளவுகளில் இருக்கும் மற்றும் அது உடலில் பல்வேறு பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

Signs You May Have A Parasite

அதில் சில நாம் உண்ணும் உணவுகளை உட்கொண்டு, நமக்கு அதிக பசியை ஏற்படுத்தும் மற்றும் உடல் எடையை அதிகரிக்கவிடாமல் தடுக்கும். இன்னும் சில இரத்த சிவப்பணுக்களை உட்கொண்டு, இரத்த சோகையை உண்டாக்கும். மேலும் சில முட்டைகளை இட்டு அரிப்பு, எரிச்சல் மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்தும். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 10 ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க நாள் கொண்டாடப்படுகிறது. எனவே இந்நாளில் குடல் புழுக்கள் அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் மற்றும் அவற்றை அழிக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒட்டுண்ணிகள் எவ்வாறு உடலுக்குள் நுழைகிறது?

ஒட்டுண்ணிகள் எவ்வாறு உடலுக்குள் நுழைகிறது?

ஒட்டுண்ணிகள் நமது உடலினுள் நுழைவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் மிகவும் பொதுவான வழிகளாவன பின்வருமாறு:

* அசுத்தமான நீர் மற்றும் உணவுகளை உண்பது

* சரியாக சமைக்கப்படாத இறைச்சிகள்

* அசுத்தமான பழங்கள் மற்றும் காய்கறிகள்

குடல் ஒட்டுண்ணிகளின் ஆபத்தை உயர்த்தும் விஷயங்கள்:

குடல் ஒட்டுண்ணிகளின் ஆபத்தை உயர்த்தும் விஷயங்கள்:

* அசுத்தமான பகுதியில் வசிப்பது அல்லது செல்வது

* மோசமான சுகாதாரம்

* குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் ஒட்டுண்ணியால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்

* பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்

* எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ்

குடல் ஒட்டுண்ணிகள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்

குடல் ஒட்டுண்ணிகள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்

* வயிற்று உப்புசம்

* வயிற்றுப் போக்கு

* களைப்பு அல்லது பலவீனம்

* வாய்வுத் தொல்லை

* குமட்டல்

* மலத்தில் புழுக்கள் வருவது

* வயிற்று வலி

* வாந்தி

* எடை இழப்பு

* மலப்புழையில் குடைச்சல்

இப்போது குடல் புழுக்களை அழிக்க மற்றும் வெளியேற்ற உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

பப்பாளி காய்

பப்பாளி காய்

வெதுவெதுப்பான பாலில், ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்த பப்பாளி காயின் விழுது மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, ஒரு வாரம் தொடர்ந்து காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இதனால் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது அனைத்து வகையான குடல் புழுக்களையும் நீக்க உதவும். அதற்கு ஒரு டம்ளர் மோரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருந்து புழுக்கள் வெளியேறிவிடும்.

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் விதைகள்

பூசணி விதைகளில் குகூர்பிடாசின் என்னும் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது புழுக்களை முடக்கி, உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த பூசணி விதையில் அரை கப் நீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் பின்பற்றினால் நல்ல பலன் கிட்டும்.

வேப்பிலை

வேப்பிலை

சிறிது வேப்பிலையை அரைத்து விழுது போன்று செய்து கொள்ளவும். பிள் ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் வேப்பிலை விழுதை சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், உடலில் இருந்து புழுக்கள் வெளியேறிவிடும்.

பூண்டு

பூண்டு

பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வயிற்றில் இருந்து புழுக்களை வெளியேற்ற உதவும். அதற்கு நற்பதமான பூண்டு பல்லை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது பூண்டு டீ தயாரித்து வெறும் வயிற்றில் ஒரு வாரத்திற்கு குடித்தும் வரலாம்.

தேங்காய்

தேங்காய்

தேங்காய் குடல் புழுக்களை வெளியேற்றும் திறன் கொண்டது. அதற்கு காலை உணவில் ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள். பின் 3 மணிநேரம் கழித்து, 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கலந்து குடியுங்கள். இப்படி ஒரு வாரத்திற்கு குடித்தால், அனைத்து வகையான குடல் புழுக்களும் உடலில் இருந்து வெளியேறிவிடும்.

கிராம்பு

கிராம்பு

கிராம்பில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது குடல் புழுக்களும், அவற்றின் முட்டைகளையும் அழிக்கும். அதற்கு 2-3 கிராம்புகளை ஒரு டம்ளர் நீரில் போட்டு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 2-3 முறை என ஒரு வாரம் குடித்து வர வேண்டும்.

கேரட்

கேரட்

கேரட்டில் பீட்டா-கரோட்டீன் வளமான அளவில் உள்ளது. இது குடல் புழுக்களின் முட்டைகளை அழிக்கும். எனவே உங்கள் உடலில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற நினைத்தால், ஒரு வாரத்திற்கு தினமும் கேரட்டை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

ஓமம்

ஓமம்

ஓம விதைகள் குடல் புழுக்களை வெளியேற்றுவதில் சிறந்தது. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து, 1/2 டீழுன் ஓம விதைகளை நீரில் போட்டு குடியுங்கள். இப்படி தினமும் ஒரு முறை என 2 வாரத்திற்கு மேற்கொள்ள வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொண்டு குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs You May Have A Parasite

National Deworming Day 2021: Parasites can live in the intestines for years without causing symptoms. The signs of a parasite are often caused by the toxins that it releases into the human bloodstream.
Story first published: Wednesday, February 10, 2021, 12:47 [IST]
Desktop Bottom Promotion