For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் 5 பக்கவிளைவுகள்!

தினமும் செய்யும் உடற்பயிற்சிகளில் அளவோடு இருப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிகள் நமக்கு பலவிதமான உடலியல் மற்றும் உளவியல் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

|

தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் செய்து வந்தால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். தினந்தோறும் நாம் செய்யும் உடற்பயிற்சிகள் உடல் எடையை அதிகாிக்கவிடாமல் நமது உடல் எடையை சாியான அளவில் வைத்திருக்கும். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதைக் குறைக்கும். மேலும் நம்மை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழவைக்கும். ஆனால் அதே நேரத்தில் உடற்பயிற்சிகளை அளவுக்கு அதிகமாகச் செய்தால் நமது உடல் ஆரோக்கியத்துக்கு எதிராக அமைந்துவிடும்.

Side Effects Of Over Exercise

எதிலும் அளவோடு இருப்பது என்பது வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான அம்சம் ஆகும். இதைத்தான் தமிழ் பழமொழி ஒன்று "அளவுக்கு மீறினால் அமிா்தமும் நஞ்சு" என்று கூறுகிறது. இந்தப் பழமொழியை நாம் பலமுறை கேட்டிருப்போம். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதுதான் மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக தினமும் செய்யும் உடற்பயிற்சிகளில் அளவோடு இருப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிகள் நமக்கு பலவிதமான உடலியல் மற்றும் உளவியல் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

ஆகவே அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சிகள் செய்தால் ஏற்படும் மிக முக்கியமான 5 பக்கவிளைவுகளை இங்கு பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்போதும் களைப்பாக இருத்தல்

எப்போதும் களைப்பாக இருத்தல்

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சிகள் செய்தால் அவை நமது செயல்திறனை குறைத்து, நாள் முழுவதும் நம்மை களைப்பாக வைத்திருக்கும். நாம் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரைத் தூங்கலாம். ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடலாம். எனினும் உடற்பயிற்சிகள் அளவுக்கு அதிகமாகும் போது தானாகவே நமது உடல் சோா்ந்துவிடும்.

ஆகவே நாம் முதலில் நம்முடைய அளவு என்ன என்பதை முதலில் புாிந்து வைத்திருக்க வேண்டும். உடற்பயிற்சிகளுக்கு இடையே தகுந்த ஓய்வு கொடுக்க வேண்டும். அதிதீவிர உடற்பயிற்சிகள் நமது உடலில் உள்ள ஹார்மோன் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் அந்த பயிற்சிகள் அதிகமாகிவிட்டால் நாம் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்.

நமது செயல்திறனைக் குறைத்தல்

நமது செயல்திறனைக் குறைத்தல்

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சிகள் செய்யும் போது நமது தசைகள் மிகவும் அதிகமாக இறுக்கமடைகின்றன. இந்த அதிகமான தசை இறுக்கம் படிப்படியாக நமது உடலின் செயல்திறனை குறைத்துவிடும். அதாவது ஒருவா் 5 நிமிடங்களில் 1 கிமீ தூரம் வரை ஓடுபவராக இருக்கலாம். ஆனால் அவா் அளவுக்கு அதிகமாக அந்த ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டால் நாளடைவில் அவா் 5 நிமிடங்களுக்குள் 1 கிமீ தூரத்தைக் கடக்க இயலாத நிலை ஏற்படும். அதனால் மன உளைச்சல் ஏற்படும். இதைத் தவிா்க்க வேண்டும் என்றால் பயற்சிகளுக்கு இடையே உடலுக்குத் தேவையான ஓய்வை அளிக்க வேண்டும்.

​உடலில் காயம் ஏற்படுதல்

​உடலில் காயம் ஏற்படுதல்

அளவோடு உடற்பயிற்சி செய்து வருபவா்கள் அந்த அளவைத் தாண்டி அதிதீவிர உடற்பயிற்சிகளில் இறங்கக்கூடாது. அவ்வாறு அதிதீவிர உடற்பயிற்சிகளில் இறங்கினால் உடலில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தசைவலி, மூட்டு விலகல் மற்றும் முதுகுவலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற பிரச்சினைகள் வந்தால் அவை நம்மை பல வாரங்கள் இயங்கவிடாமல் தடுத்துவிடும்.

தூக்கமின்மை ஏற்படுதல்

தூக்கமின்மை ஏற்படுதல்

அளவோடு செய்யும் உடற்பயிற்சிகள் நமது உடலை புத்துணா்ச்சியோடு வைத்திருப்பதோடு நமக்கு ஆழ்ந்த தூக்கத்தையும் தருக்கிறது. ஆனால் உடற்பயிற்சி கூடங்களில் உள்ள இரும்புக் கருவிகளில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சிகள் செய்யும் போது அது நமது தூக்கத்தைக் கெடுத்துவிடும். அதாவது நமது தசைகள் அதிகமாக இறுக்கம் அடைந்து நமக்கு அமைதியற்ற நிலை, படபடப்பு போன்றவை ஏற்படும். அதனால் எளிதில் தூங்க முடியாது

மன ஆரோக்கியத்தை குறைத்தல்

மன ஆரோக்கியத்தை குறைத்தல்

அளவான உடற்பயிற்சிகள் நமது மனநிலையை இதமாக வைத்திருப்பதோடு நமது உடலில் சுரக்கும் டோபமைன் என்னும் ஹார்மோனை நன்றாக சுரக்க வைக்கும். ஆனால் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிகள் இதற்கு எதிராக அமைந்துவிடும். அதாவது நமது உடலில் உள்ள கார்டிசோல் (cortisol) அளவை அதிகரிக்கும். அதனால் மனம் அலைபாய்தல், மன அழுத்தம், கவலைக் கோளாறு மற்றும் மருத்துவ ரீதியிலான மனச்சோா்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

ஆகவே உடற்பயிற்சி செய்யும் போது அளவுக்கு மீறினால் அமிா்தமும் நஞ்சு என்ற பழமொழியை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects of over Exercising

Are you over-exercising? Beware of these 5 side-effects.
Desktop Bottom Promotion