For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த டைம்ல முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவது பாதுகாப்பானதா? சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?

கோடையில் முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் என்று நிரூபிக்கப்பட்ட அறிவியல் தரவுகள் எதுவும் இல்லை.

|

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான உணவு முட்டை. பொதுவாக மிகவும் ஆரோக்கியமான, சத்தான மற்றும் மலிவான உணவாக முட்டை உள்ளது. இதில் வைட்டமின் டி, வைட்டமின் பி, துத்தநாகம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. அதன் ஊட்டச்சத்து மதிப்பைத் தவிர, அதன் சல்பர் மற்றும் அமினோ அமில உள்ளடக்கம் காரணமாக முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கோடை காலத்தில் முட்டை சாப்பிடுவதால், உடல் வெப்பநிலையை உயர்த்தும் தன்மை இருப்பதால் முட்டைகளை தவிர்க்க வேண்டும் என்ற தவறான கருத்து பரவலாக உள்ளது. இது நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Should we avoid eating egg yolks during summers in tamil?

மற்றொரு கட்டுக்கதை என்னவென்றால், முட்டைகளை. உட்கொள்வது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக இந்த பருவத்தில். கோடை காலத்தில் முட்டைகளை சாப்பிடுவது அல்லது தவிர்ப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை

முட்டை

முட்டை சாப்பிடுவதற்கு ஆரோக்கியமான உணவுத் தேர்வாகும். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம் நிறைந்துள்ளது மற்றும் கொழுப்பு இல்லை. முட்டையின் மஞ்சள் கருவில், ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் ஏ, டி மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மஞ்சள் கருக்களில் கோலின் உள்ளது, இது உங்களுக்கு பல நன்மைகளை தருகிறது.

கோடையில் சாப்பிடலாமா?

கோடையில் சாப்பிடலாமா?

கோடையில் முட்டைகளை சாப்பிட வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். ஏனெனில் அவை இயற்கையில் சூடாக இருப்பதால் அவை நல்லதை விட தீங்கு விளைவிக்கும் என்று பலர் கூறலாம். சிலர் கோடையில் ஏற்படும் முகப்பரு மற்றும் வயிற்று நோய்களுக்கு முட்டைகளை காரணம் கூறுகின்றனர். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இதில் எந்த அறிவியல் உண்மையும் இல்லை. கோடையில் முட்டையைத் தவிர்க்க வேண்டும் என்பது கட்டுக்கதை.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்

கோடையில் முட்டைகளை உட்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது. ஆனால் மிதமான அளவில் சாப்பிடுவது பாதுகாப்பானது என்று ஆராய்ச்சியாளர்களும் உணவியல் நிபுணர்களும் கூறுகின்றனர். முட்டைகள் உடலில் வெப்பத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை என்பது உண்மைதான் என்றாலும், மிதமான அளவு உட்கொள்வது ஆரோக்கியமானது. அப்போதுதான், இந்த சூப்பர்ஃபுட்டின் அனைத்து நன்மைகளையும் பெற முடியும். ஒரு ஆய்வின் படி, கோடை காலத்தில் கூட முட்டைகளை சாப்பிடுவது, நீரிழிவு நோய்க்கு முந்தைய அல்லது வகை 2 நீரிழிவு நோயாளிகளிடையே கூட இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்காது என்று கூறப்படுகிறது.

முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவது பாதுகாப்பானதா?

முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவது பாதுகாப்பானதா?

ஆரோக்கிய ஆர்வலர்களிடையே உள்ள மற்றொரு பெரிய குழப்பம், முட்டையின் மஞ்சள் கரு உட்பட முழு முட்டையையும் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பதுதான். முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் முட்டையின் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து 90 சதவீதம் உள்ளது. அதே சமயம் வெள்ளைப் பகுதியில் முட்டையின் புரதத்தில் பாதி உள்ளது. பல உடற்பயிற்சி ஆர்வலர்கள் முட்டையின் மஞ்சள் கருவை விட வெள்ளைப் பகுதியை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று பரிந்துரைக்கின்றனர்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

குறிப்பாக கோடை காலத்தில் முட்டையின் மஞ்சள் கரு ஆரோக்கியமானவை என்று சொன்னால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் நிறைந்துள்ளது. மேலும், முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் உடலுக்குத் தேவையான பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ஆரோக்கியமான கண் மற்றும் மூளை

ஆரோக்கியமான கண் மற்றும் மூளை

சில ஆரோக்கிய ஆர்வலர்கள் முட்டையின் மஞ்சள் கரு ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்று கூறுகின்றனர். குறிப்பாக, இது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. முட்டையின் மஞ்சள் கரு உணவுக் கொழுப்பின் மூலமாகும். இருப்பினும், உணவுக் கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் அதிகளவு கொழுப்பைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மஞ்சள் கருவில் இரும்பு, ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் போன்ற முட்டைகளின் பெரும்பாலான நல்ல பொருட்கள் உள்ளன. இதில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உள்ளது. இவை ஆரோக்கியமான கண்கள் மற்றும் மூளைக்கு நல்லது.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

கோடையில் முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் என்று நிரூபிக்கப்பட்ட அறிவியல் தரவுகள் எதுவும் இல்லை. ஆதலால், முட்டையை நீங்கள் தராளாமாக எடுத்துக்கொள்ளலாம். மேலும், சுகாதார ஆர்வலர்களின் கவனம் ஆரோக்கியமான உணவு முறைகளில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட உணவு அல்லது ஊட்டச்சத்துக்கள் மீது அல்ல என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Should we avoid eating egg yolks during summers in tamil?

Researchers and dietitians have repeatedly cleared it out the air that it is completely safe to consume eggs in summer, but in moderation.
Story first published: Tuesday, June 14, 2022, 12:21 [IST]
Desktop Bottom Promotion