For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்கொலைக்கு தூண்டும் மனச்சோர்வு ஒரு ஆணுக்கு இருந்தால் வெளிப்படும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

பல ஆண்கள் கண்டறியப்படாத மனச்சோர்வு நிலையை அடைந்துள்ளனர். மேலும் இந்த நிலை பற்றி அவர்கள் வெளிப்படுத்த விரும்புவதில்லை மற்றும் இதற்கான சிகிச்சையும் அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை என்பது சமீபத்தில் கண்டறி

|

பெண்கள் மனதில் தோன்றும் எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படுத்துவதில் அசௌகரியம் கொள்வதில்லை. இயற்கையாகவே பெண்களின் வெளிப்படைத்தன்மை ஆண்களை விட மேலானதாக உள்ளது. அதனால் அவர்கள் மனச்சோர்வுக்கு ஆட்படும் நிலையை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் இயற்கையாகவே ஆண்கள் சற்று மெளனமாக இருப்பார்கள். தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்தி வைத்திருப்பார்கள். அதனால் அவர்கள் மனச்சோர்வுக்கு ஆட்பட்டால் அதனை அறிந்து கொள்வது கடினம்.

Possible Symptoms of Depression in Men

பல ஆண்கள் கண்டறியப்படாத மனச்சோர்வு நிலையை அடைந்துள்ளனர். மேலும் இந்த நிலை பற்றி அவர்கள் வெளிப்படுத்த விரும்புவதில்லை மற்றும் இதற்கான சிகிச்சையும் அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை என்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. உணர்வு ரீதியாக, உடல் ரீதியாக, குணநலன் அடிப்படையில் ஒரு ஆண் மனச்சோர்வுக்கு ஆளாவதற்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் குறித்து நாம் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண் மற்றும் அவரின் மன அழுத்தம்

ஆண் மற்றும் அவரின் மன அழுத்தம்

அமெரிக்க உளவியல் நிறுவனத்தின் படி, ஆண்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவது பொதுவானது. 30% ஆண்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் ஒரு முறையாவது மனச்சோர்வை அனுபவிக்கின்றனர். இந்த மனநிலை கோளாறு, ஒரு மனிதனின் உணர்ச்சி, சிந்தன , குணநலன் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. டிப்ரசிவ் டிஸார்டர் (Depressive Disorder), க்ளினிக்கல் டிப்ரஷன் (Clinical Depression) போன்றவை மனச்சோர்விற்கான மருத்துவ பெயர்கள் ஆகும். மனசோர்வினால் பாதிக்கப்படும் பெரும்பாலான பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை ஆண்களில் குறைவாக உள்ளது. ஆண்களுக்கு கண்டறியப்படாத மனச்சோர்வு இருப்பது இதற்கான காரணமாகும்.

மனச்சோர்விற்கான அறிகுறிகள்

மனச்சோர்விற்கான அறிகுறிகள்

மனச்சோர்விற்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது என்பது அதற்கான சிகிச்சையை நோக்கி செல்வதற்கான முதல் நிலையாகும். கூடுதலாக , பெண்கள் மற்றும் ஆண்களுக்கான மனச்சோர்வு அறிகுறிகள் வேறுபடுகின்றன.

ஆண்களுக்கான மனச்சோர்வு குறித்த குணநலன் ரீதியிலான அறிகுறிகள்:

ஆண்களுக்கான மனச்சோர்வு குறித்த குணநலன் ரீதியிலான அறிகுறிகள்:

மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைதியான நிலைக்கு செல்லும் போது, ஆண்கள் தங்கள் அதீத கோபமான பக்கத்தை வெளிப்படுத்துகின்றனர். மனச்சோர்விற்கான சில குணநலன் மாற்றங்களை தற்போது காணலாம்.

* அதிக மது அருந்துதல்

* போதை மருந்து பயன்படுத்துதல்

* குடும்ப மற்றும் சமூக சேர்க்கைகளை புறக்கணித்தல்

* இடைவேளை இல்லாமல் உழைத்தல்

* தனது துணையிடம் ஆதிக்கத்துடன் நடந்து கொள்வது அல்லது தவறான முறையில் நடந்து கொள்வது

* அபாயகரமான செயல்களில் ஈடுபடுவது

* தனிப்பட்ட மற்றும் வேலை தொடர்பான பொறுப்புகளை சரிவர செய்ய முடியாமல் போவது

* தற்கொலைக்கு முயற்சிப்பது

ஆண்களுக்கு மனச்சோர்வு இருப்பதற்கான உணர்ச்சி ரீதியிலான அறிகுறிகள்:

ஆண்களுக்கு மனச்சோர்வு இருப்பதற்கான உணர்ச்சி ரீதியிலான அறிகுறிகள்:

உடலும் மனமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டுளள்து. மனச்சோர்வு உள்ள மனிதன் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சில அறிகுறிகளை வெளிப்படுத்துகிறார். மனச்சோர்வு என்பது உணர்ச்சிகளில் பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது. இதனால் மனநிலை மாற்றங்கள் உண்டாகிறது. ஆனால் பெண்களை போலல்லாமல் ஆண்கள் எதையும் வெளிப்படுத்த விரும்புவதில்லை. தங்கள் துன்பங்களை தனக்குள்ளேயே அடக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர். சில தொடக்க கால அறிகுறிகள் இதோ:

* எரிச்சல் உணர்வு

* கோபம்

* முரட்டுத்தனமான குணநலன்

* விரக்தி

* தவறான தீர்ப்பு வழங்கப்படுவோமோ என்ற பயத்தில், ஆண்கள் பெரும்பாலும் தங்கள் சோகத்தை வெளிப்படுத்துவதில்லை.

ஆண்களின் மனச்சோர்வு குறித்த உடலியல் ரீதியிலான அறிகுறிகள்:

ஆண்களின் மனச்சோர்வு குறித்த உடலியல் ரீதியிலான அறிகுறிகள்:

மனச்சோர்வு என்பது மனநலன் குறித்த கோளாறு என்றாலும், இதற்கான சில உடலியல் சார்ந்த அறிகுறிகள் ஆண்களுக்கான மனச்சோர்வு குறித்து வெளிப்படுத்துகின்றன. அவை:

* நாட்பட்ட தலைவலி

* சோர்வு

* தூக்க கோளாறு அல்லது ஒழுங்கற்ற தூக்கம்

* தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி

* மார்பு பகுதியில் இறுக்கம்

* அமைதியின்மை

* திடீரென்று அதிகரித்த அல்லது குறைந்த பசியுணர்வு

* செரிமான கோளாறுகள்

* குறிப்பற்ற எடை இழப்பு

நோர்பைன்ப்ரைன் மற்றும் செரோடோனின் அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தான் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. மனச்சோர்வு இந்த மூளை ரசாயனங்களை பாதித்து வலி மற்றும் மனநிலை கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

ஆரம்ப நிலையில் மனச்சோர்வை தடுப்பதற்கான சில குறிப்புகள்:

ஆரம்ப நிலையில் மனச்சோர்வை தடுப்பதற்கான சில குறிப்புகள்:

ஆரம்ப கட்டத்தில் மனச்சோர்வை நிர்வகிக்க சில உத்திகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை கையாளலாம். அவற்றில் சில:

* தியானம் மூலம் மனநிறைவைப் பெறுவதால், மனச்சோர்வு குறித்த எண்ணங்கள் அழிக்கப்படுகின்றன.

* பூங்காக்களில் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வதால், அங்குள்ள பச்சை நிறம் மனஆரோக்கியத்தில் நேர்மறை பாதிப்புகளை உண்டாக்கலாம்.

* குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வெளியில் சென்று வரலாம். இதனால் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வை எதிர்த்து போராடும் கட்டமைப்பு உருவாகலாம்.

* மது அருந்தும் பழக்கத்தை குறைத்துக் கொள்வது அல்லது முற்றிலும் நிறுத்துவது நல்லது.

* பெண்களைப் போல ஆண்களும் வெளிப்படையாக பேசுவதால் மனச்சோர்விற்கான அபாயம் குறையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Possible Symptoms of Depression in Men

Here are some possible symptoms of depression in men. Read on to know more...
Story first published: Thursday, March 26, 2020, 18:25 [IST]
Desktop Bottom Promotion