For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீரியட் உள்ளாடை என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது, அதன் நன்மை, தீமைகள் என்ன?

நீங்கள் உங்கள் வழக்கமான மாதவிடாய் கால பொருட்களில் இருந்து விலகி புதிய பொருட்களை முயற்சிக்க நினைத்தால், அதற்கு பீரியட் உள்ளாடை சிறந்ததாக இருக்கும்.

|

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் குறித்த விவாதங்கள் எப்போதுமே இருக்கக்கூடிய ஒன்று. குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்துவதற்கு பேடுகள், டாம்பான்கள் மற்றும் மாதவிடாய் கோப்பைகள் என பல உள்ளன. இவையே பெண்களை மாதவிடாய் காலத்தில் சங்கடமின்றி கழிக்க உதவுகின்றன. இதில் பெரும்பாலான பெண்கள் டாம்பான்களையும், சானிடரி பேடுகளையும் தான் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகின்றனர். என்ன தான் இவற்றைப் பயன்படுத்தினாலும், இவை உள்ளாடைகளில் இரத்தக் கறைகளை உண்டாக்க செய்து கஷ்டப்படுத்துகின்றன.

ஒவ்வொரு வருடமும் சுமார் 20 பில்லியனுக்கும் அதிகமான சானிட்டரி நேப்கின்கள் மற்றும் டாம்பான்கள் போன்ற மாதவிடாய் கால பொருட்கள் ஒரு நாட்டின் நிலப்பரப்பில் கொட்டப்படுகின்றன. அப்படியானால் ஒட்டுமொத்த உலகத்தின் நிலைமையை சற்று யோசித்துப் பாருங்கள். நமது கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்பின் காரணமாக, பெண்கள் இயற்கையாகவே நேப்கின்கள் அல்லது டாம்பான்களை தேர்வு செய்து பயன்படுத்தி வருகின்றனார்கள். மேலும் தொலைக்காட்சி விளம்பரங்களும், ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் போது பயன்படுத்த சிறந்ததாக நேப்கின்களையே கூறுகின்றன.

ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்துவதற்கு பல்வேறு சுகாதாரப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் வழக்கமான மாதவிடாய் கால பொருட்களில் இருந்து விலகி புதிய பொருட்களை முயற்சிக்க நினைத்தால், அதற்கு பீரியட் உள்ளாடை சிறந்ததாக இருக்கும்.

சரி, பீரியட் உள்ளாடை என்றால் என்ன? இது ஒரு அற்புதமான மாற்றுப் பொருள். இது அதீத இரத்தப் போக்கையும் தாங்கக்கூடியது மற்றும் இதை மீண்டும் பயன்படுத்தலாம். இவை சுற்றுச்சூழலைப் பாதிக்காத ஒரு சிறப்பான தயாரிப்பு. மொத்தத்தில் இது மீண்டும் பயன்படுத்தக்கூடியவை மற்றும் திறம்பட உறிஞ்சக்கூடியவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீரியட் உள்ளாடை எவ்வாறு வேலை செய்கிறது?

பீரியட் உள்ளாடை எவ்வாறு வேலை செய்கிறது?

பீரியட் உள்ளாடையானது நேப்கின்களைப் போன்றே செயல்படுகின்றன. ஆனால் இது உள்ளாடையுடன் சேர்ந்து இருப்பதால், சௌகரியமாக இருக்கும் என்று பயனர்கள் கூறுகின்றனர். பீரியட் உள்ளாடை பார்ப்பதற்கு வழக்கமான உள்ளாடைகளில் இருந்து வேறுபட்டதாக தெரியாது. ஆனால் இதை வேறுபடுத்துவது இந்த உள்ளாடையைத் தயாரிக்கப் பயன்படுத்திய துணி தான். இப்போது பீரியட் உள்ளாடை எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காண்போம்.

* இந்த உள்ளாடையில் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு கூடுதல் அடுக்குகளைக் கொண்ட மைக்ரோஃபைபர் பாலியஸ்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

* இதில் உள்ள அடுக்குகள் ஈரப்பதத்தை சருமம் மற்றும் யோனியுடன் தொடர்பு கொள்ளாமல் தடுப்பதுடன், உடுத்தும் உடைகளிலும் இரத்தக் கறைகளை படிவதைத் தடுக்கிறது.

* பீரியன் உள்ளாடையின் முதன்மையான நோக்கம் திரவங்களை திறம்பட உறிஞ்சுவது, இரத்தக் கசிவுகளைத் தடுப்பது மற்றும் ஈரப்பதத்தை சருமத்துடன் தொடர்பு கொள்ளாமல் தடுப்பது தான்.

* ஒவ்வொரு பிராண்டிற்கும் துணி தொழில்நுட்பம் (Fabric Technology) வேறுபடலாம். ஆனால் இதன் முழு நோக்கமும் ஒரு சௌகரியமான மாதவிடாய் காலத்தைக் கொண்டிருப்பது தான்.

* பொதுவாக பீரியட் உள்ளாடை லேசானது முதல் மிதமான இரத்தப்போக்கை திறம்பட உறிஞ்சுகின்றன. அதாவது 1-2 டாம்பான்கள் உறிஞ்சக்கூடிய அளவை ஒரு பீரியட் உள்ளாடையானது உறிஞ்சும்.

பீரியட் உள்ளாடையை எவ்வாறு பயன்படுத்துவது?

பீரியட் உள்ளாடையை எவ்வாறு பயன்படுத்துவது?

பீரியட் உள்ளாடையை வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடையைப் போன்றே பயன்படுத்தலாம். ஆனால் துர்நாற்றத்தைத் தவிர்க்க வேண்டுமானால், குறைந்தபட்சம் ஒவ்வொரு 12 மணிநேரத்திற்கும் உள்ளாடையை மாற்றி, துவைக்க வேண்டும்.

* பயன்பாட்டின் பின், பீரியட் உள்ளாடையை குளிர்ந்த நீரில் ஊற வைத்து அலச வேண்டும்.

* வாஷிங் மிஷிசில் பயன்படுத்துபவரானால், மென்மையான சுழற்சியில் போட்டு துவைக்கவும்.

* முக்கியமாக பீரியட் உள்ளாடையை வெயிலில் நன்கு உலக வைக்க வேண்டும்.

* எக்காரணம் கொண்டும் ட்ரையரில் போட்டு உலர்த்தக்கூடாது.

பீரியட் உள்ளாடையை பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்

பீரியட் உள்ளாடையை பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்

மற்ற மாதவிடாய் கால பொருட்களுடன் ஒப்பிடும் போது, பீரியட் உள்ளாடை பின்வரும் காரணங்களால் தனித்து நிற்கின்றன.

* இது சுற்றுச்சூழலை பாதிக்காதவை.

* பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டைக் குறைக்கிறது.

* லேசான மற்றும் அதிகமான இரத்தப்போக்கையும் திறம்பட உறிஞ்சுவதில் சிறந்தது.

* பைக் ரேசிங் அல்லது உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளின் போது பயன்படுத்த சிறந்தது.

* நச்சு அதிர்ச்சி நோய்க்குறியின் (Toxic Shock Syndrome) ஆபத்து இல்லை.

* எளிதில் சுத்தம் செய்யக்கூடியது மற்றும் கசிவு பிரச்சனை இல்லை.

யாரெல்லாம் பீரியட் உள்ளாடை பயன்படுத்தலாம்?

யாரெல்லாம் பீரியட் உள்ளாடை பயன்படுத்தலாம்?

பீரியட் உள்ளாடையை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். முக்கியமாக இந்த பீரியட் உள்ளாடை பின்வரும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளாத இருக்கும்.

* அதிக இரத்தப்போக்கு

* ஒழுங்கற்ற இரத்தப்போக்கு

* வழக்கமான மாதவிடாய் தயாரிப்புகளால் திருப்தி இல்லாதவர்கள்

பீரியட் உள்ளாடையின் தீமைகள் என்ன?

பீரியட் உள்ளாடையின் தீமைகள் என்ன?

பீரியட் உள்ளாடைகளால் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை என்றாலும், சிலருக்கு இந்த மாதவிடாய் கால இரத்தப்போக்கால் உள்ளாடையில் இருந்து வீசும் துர்நாற்றம் தொந்தரவாக இருக்கலாம். மற்றொரு தீமை என்றால், இது குறிப்பிட்ட ஸ்டைல்களை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் சானிட்டரி நேப்கின்கள் மற்றும் டாம்பான்களை விட சற்று விலை அதிகமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Period Underwear : How it Works, Pros, Cons and How to Use it in Tamil

Period underwear is a sustainable alternative that promotes free-bleeding and can be reused. These are an eco-friendly period product that is both reusable and absorbable.
Desktop Bottom Promotion