Latest Updates
-
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
Menstrual Hygiene: மாதவிடாய் கப் யூஸ் பண்ண பயமா இருக்கா? அப்ப மிஸ் பண்ணாம முதல்ல இத படிங்க...
Menstrual Hygiene In Tamil: மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் காலத்தில் பெரும்பாலான இந்திய பெண்கள் சானிட்டரி பேடுகளை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் சில பெண்கள் சானிட்டரி பேடுகளுக்கு பதிலாக, டம்பான்கள் மற்றும் மாதவிடாய் கப்புகளை (Menstrual Cup) பயன்படுத்துகிறார்கள்.
இவற்றில் டம்பான்கள் பயன்படுத்தினால் பலவிதமான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். ஆனால் மாதவிடாய் கப்புகளில் இம்மாதிரியான பக்கவிளைவுகள் மிகவும் குறைவு. சொல்லப்போனால் சானிட்டரி பேடுகள் மற்றும் டம்பான்களை விட மாதவிடாய் கப் மிகவும் சிறந்தது.

மாதவிடாய் கப் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?
மாதவிடாய் கப் என்பது மாதவிடாய் காலத்தில் இரத்தத்தை சேகரிக்க யோனிக்குள் சொருகப்படும் ஒரு கப் வடிவ சிலிகான் சாதனமாகும். இந்த கப் மருத்துவ தர சிலிகானால் செய்யப்பட்டவை மற்றும் இது உள்ளே செருகவும், வெளியே எடுக்கவும் உதவும் வகையிலான மணி வடிவ தண்டுகளைக் கொண்டிருக்கும்.
இந்த மாதவிடாய் கப்பை ஒருமுறை யோனிக்குள் செருகினால், இரத்தப்போக்கின் அளவைப் பொறுத்து சுமார் 4-8 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். பின் கப்பின் தண்டு பகுதியை பிடித்து இழுப்பதன் மூலம் கப்பை வெளியே எடுக்கலாம். பின்பு கப்பில் உள்ள இரத்தத்தை வெளியேற்றிவிட்டு, நீரால் கழுவி விட்டு மீண்டும் யோனிக்குள் செருக வேண்டும்.
ஏன் சானிட்டரி பேடுகளை விட மாதவிடாய் கப் சிறந்தது?
மாதவிடாய் கப்புகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. ஏனெனில் இது சானிட்டரி பேடுகள் மற்றும் டம்பான்கள் போன்று திடக்கழிவுகளை உருவாக்குவதில்லை. மேலும் இந்த மாதவிடாய் கப் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. சொல்லப்போனால் இது பெண்களுக்கான மாதவிடாய் கால சுகாதார பொருட்களுள் மிகச்சிறந்த பொருளாகும்.
ஆனால் இந்த மாதவிடாய் கப் குறித்த சில கட்டுக்கதைகள் மக்களிடையே உலாவி வருகின்றன. இதன் காரணமாக நிறைய பெண்கள் மாதவிடாய் கப்பை பயன்படுத்த தயக்கம் கொள்கிறார்கள். இப்போது மாதவிடாய் கப் குறித்த கட்டுக்கதைகளையும், உண்மைகளையும் காண்போம்.
கட்டுக்கதை #1 மாதவிடாய் கப்புகள் கடினமானவை மற்றும் மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும்
உண்மை: ஆரம்ப காலத்தில் எந்த ஒரு மாதவிடாய் சுகாதார பொருட்களும் சற்று அசௌகரியமாகத் தான் இருக்கும். ஆனால் அதை எப்படி உள்ளே செருகுவது மற்றும் எப்படி வெளியே எடுப்பது என்பதை அறிந்து, சரியான அளவை தேர்ந்தெடுத்து பயன்படுத்தத் தொடங்கினால், ஈஸியாக இருக்கும். சொல்லப்போனால் ஒருமுறை மாதவிடாய் கப் பயன்படுத்த தொடங்கிவிட்டால், சானிட்டரி பேடு மற்றும் டம்பான்களை விட இதுவே மிகவும் சௌகரியமாக இருக்கும்.
கட்டுக்கதை #2 மாதவிடாய் கப்புகள் சுகாதாரமற்றவை
உண்மை: மாதவிடாய் கப்புகளால் தொற்று ஏற்படாமல் இருக்க, அவற்றைப் பயன்படுத்தும் முன் கைகளை நன்க கழுவிக் கொள்ள வேண்டும். அதோடு, மாதவிடாய் கப்புகளை மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவி விட்டு அல்லது நன்கு கொதிக்கும் நீரில் போட்டு கழுவி விட்டு, பின்னரே பயன்படுத்த வேண்டும். மாதவிடாய் கப்புகள் மருத்துவ தர சிலிகானால் ஆனது என்பதால், இது பாதுகாப்பானது.
கட்டுக்கதை #3 மாதவிடாய் கப்புகள் கசிவை ஏற்படுத்தும்
உண்மை: மாதவிடாய் கப்பை யோனியில் இருந்து அகற்றும் போது அதன் தண்டு பகுதியைப் பயன்படுத்தி அகற்றினால், கசிவுகளின்றி எளிதில் கப்பில் உள்ள இரத்தத்தை வெளியேற்றலாம்.
கட்டுக்கதை #4 மாதவிடாய் கப்புகள் உடலினுள் காணாமல் போகும்.
உண்மை: மாதவிடாய் கப்புகள் உடலினுள் சென்று காணாமல் போக சிறிதும் வாய்ப்பில்லை. சொல்லப்போனால், இம்மாதிரியான நிகழ்வு நடக்க 1% கூட வாய்ப்பில்லை.
கட்டுக்கதை #5 மாதவிடாய் கப்புகளை குழந்தை பெற்றெடுத்த பெண்களால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
உண்மை: மாதவிடாய் கப்புகளை அனைத்து பெண்களுமே பயன்படுத்தலாம். அதற்கு சரியான அளவு கப்பை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கட்டுக்கதை #6 மாதவிடாய் கப்புகளை வைத்திருக்கும் போது சிறுநீர் அல்லது மலம் கழிக்க முடியாது.
உண்மை: மாதவிடாய் கப் வைத்திருக்கும் போது சிறுநீர் மற்றும் மலம் கழிக்க முடியும். வேண்டுமானால் சற்று அசௌகரியமாக இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications