Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
Potato White Kurma Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் பூரி செய்ய போகிறீர்களா? பெரும்பாலும் பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா அல்லது உருளைக்கிழங்கு குருமாவைத் தான் செய்வீர்களா? அதுவும் ஒரே ஸ்டைலில் தான் செய்வீர்களா? அப்படியானால் இன்று உருளைக்கிழங்கு குருமாவை சற்று வித்தியாசமான ஸ்டைலில் செய்யுங்கள்.
இந்த வெள்ளை உருளைக்கிழங்கு குருமா ஒரு வித்தியாசமான ருசியுடன் இருப்பதோடு, 2 பூரியை எக்ஸ்ட்ரா சாப்பிட வைக்கும். முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பெரிய துண்டுகளாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டது)
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 மூடி (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 5-6
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்ப)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்கி,
கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு பெரிய துண்டுகளாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு குலைய
வதக்காமல், ஓரளவு வதக்க வேண்டும்.
* பின் அதில் குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
* நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட
உருளைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, கசகசா, சோம்பு, பச்சை
மிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாகும் வரை
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் குருமாவுடன் சேர்த்து
கிளறி, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான வெள்ளை உருளைக்கிழங்கு குருமா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











