Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
பெண்களே! மாதவிடாய் கப் யூஸ் பண்றீங்களா? அதை சரியான வழியில் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா?
Menstrual Hygiene Day 2023: ஒவ்வொரு ஆண்டும் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்த மே 28 ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் மாதவிடாய் கால சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த விஷயத்தில் பெண்கள் சற்று போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.
சொல்லப்போனால் பல பெண்களுக்கு இன்னும் இதுகுறித்து தெரியாமல் உள்ளது. எனவே மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, பெண்களிடையே தற்போது பிரபலமாகிக் கொண்டிருக்கும் மாதவிடாய் கப் பற்றிய சில முக்கியமான அடிப்படை விஷயங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பெரும்பாலும் சானிட்டரி பேடுகளை தான் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது சானிட்டரி பேடுகளுக்கு பதிலாக, டம்பான்கள், மாதவிடாய் கப் போன்ற மாதவிடாய் சுகாதார பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு வகையான மாதவிடாய் சுகாதார பொருள் தான் மாதவிடாய் கப்.
இது ரப்பர் அல்லது சிலிகானால் செய்யப்பட்ட சிறிய மற்றும் நெகிழ்வான புனல் வடிவ கப் ஆகும். இது மாதவிடாய் காலத்தில் வெளியேறும் இரத்தத்தை சேகரிக்க யோனியில் செருக வேண்டும். இந்த கப் மற்ற முறைகளை விட அதிகளவு இரத்தத்தை சேகரிக்கும்.
மேலும் இது சானிட்டரி பேடுகள் மற்றும் டாம்பான்கள் போன்று திடக்கழிவுகளை ஏற்படுத்தாது என்பதால், நிறைய பெண்கள் இதை பயன்படுத்த விரும்புகிறார்கள். முக்கியமாக இரத்தப்போக்கைப் பொறுத்து, இந்த கப்பை 12 மணிநேரம் வரை அணியலாம்.
இவ்வளவு விஷயங்களை கேட்ட பின், உங்களுக்கும் மாதவிடாய் கப் பயன்படுத்த வேண்டுமென்ற ஆசை வந்துள்ளதா? அதை எப்படி பயன்படுத்த வேண்டும், அதை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும், செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
மாதவிடாய் கப்பை எப்படி பயன்படுத்த வேண்டும்?
* முதலில் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மாதவிடாய் கப்பையும் சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* மாதவிடாய் கப் நெகிழ்வுத்தன்மை கொண்டதால், எளிதில் மடக்கும் வகையில் இருக்கும். எனவே அதை மேலே படத்தில் காட்டப்பட்டவாறு மடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் மடித்த மாதவிடாய் கப்பை யோனியில் செருக வேண்டும்.
* யோனியில் செருகிய பின், கப்பின் தண்டுப்பகுதியைப் பிடித்து சுற்ற வேண்டும். மாதவிடாய் கப் சரியான நிலையில் பொருந்திவிட்டது என்றால், கப்பானது எளிதில் சுற்றும். சரியான நிலையில் இல்லாவிட்டால் சுற்றாது.
* உள்ளே செருகிய கப்பை, இரத்தப்போக்கைப் பொறுத்து 12 மணிநேரம் வரை பயன்படுத்தலாம்.
* மாதவிடாய் காலத்தின் முதல் 2 நாட்கள் இரத்தப்போக்கு சற்று அதிகமாக இருக்கும் என்பதால், 4 மணிநேரத்திற்கு ஒருமுறை கப்பை சுத்தம் செய்வது சரியாக இருக்கும்.
* கப் வெளியே எடுக்கும் போது, கைகளை மீண்டும் கழுவி விட்டு, யோனியில் இருந்து மாதவிடாய் கப்பை வெளியே எடுத்து, கப்பை காலி செய்து கழுவிய பின் மீண்டும் யோனியில் செருகி பயன்படுத்தலாம்.
மாதவிடாய் கப்பை எப்படி சுத்தம் செய்வது?
மாதவிடாய் கப்பை சரியான முறையில் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதனால் தொற்றுக்களின் அபாயம் குறையும்.
* அதற்கு முதலில் மாதவிடாய் கப்பை தொடும் முன், கைகளை நன்கு சோப்பு பயன்படுத்தி கழுவிக் கொள்ள வேண்டும்.
* மாதவிடாயின் முதல் நாளில் பயன்படுத்தும் முன் கப்பை கொதிக்க வைத்த நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதேப் போல் மாதவிடாய் முடிந்த பின் அதேப் போல் கொதிக்க வைத்த நீரில் 10 நிமிடம் ஊற வைத்து பின் உலர்த்தி, எடுத்து வைக்க வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் எப்படி சுத்தம் செய்வது?
மாதவிடாய் கப்பை இரத்தப்போக்கைப் பொறுத்து 6-12 மணிநேரத்திற்கு ஒருமுறை வெளியே எடுத்து கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அப்படி சுத்தம் செய்யும் போது மைல்டு லிக்விட் சோப்பை பயன்படுத்தி கழுவிய பின், மீண்டும் யோனியில் செருக வேண்டும். முக்கியமாக மாதவிடாய் கப்பில் உள்ள துளைகள் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை அந்த துளையில் அழுக்கு இருந்தால், அதை ஒரு மென்மையான டூத்பிரஷ் கொண்டு சுத்தம் செய்யலாம்.
வெளி இடங்களில் எப்படி சுத்தம் செய்வது?
வீட்டில் இருக்கும் போது நம்மால் மைல்டு லிக்விட் சோப்பைக் கொண்டு மாதவிடாய் கப்பை சுத்தம் செய்ய முடியும். ஆனால் வெளியிடங்களுக்கு சென்றால் அது முடியாது என்பதால், இந்நிலையில் கப்பை காலி செய்த பின் ஒரு சுத்தமான துணி அல்லது வாசனையல்லாத டிஷ்யூ கொண்டு துடைத்துவிட்டு, பின்னர் யோனியில் செருகலாம்.
செய்யக்கூடாதவைகள்
* மாதவிடாய் கப்பை சுத்தம் செய்ய வாசனைமிக்க சோப்புகள் மற்றும் டிடர்ஜென்ட்டுகளை பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால், அது யோனி பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.
* சோப்பு ஆயில் பயன்படுத்தி மாதவிடாய் கப்பை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் மாதவிடாய் கப்பை போடும் போது, கவனமாக இருக்க வேண்டும். அதுவும் கப்பானது பாத்திரத்தின் அடிப்பகுதியில் தொடாமல் மிதக்கும் வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
* மாதவிடாய் கப்பில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கினால், அதுவும் சுடுநீரில் போட்டு சுத்தம் செய்த பின்னரும் துர்நாற்றம் வீசினால், மாதவிடாய் கப்பை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













