For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன? எதனால் இது ஏற்படக்கூடும்?

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும். எலும்புகள் பலவீனமாகவும் உடையக்கூடியதாகவும் மாறக்கூடிய ஒரு நிலைக்கு பெயர் தான் ஆஸ்டியோபோரோசிஸ்.

|

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும். எலும்புகள் பலவீனமாகவும் உடையக்கூடியதாகவும் மாறக்கூடிய ஒரு நிலைக்கு பெயர் தான் ஆஸ்டியோபோரோசிஸ். இத்தகைய பிரச்சனை ஒருவருக்கு ஏற்பட்டால் அவர்களுக்கு மிக எளிதில் எலும்புகள் உடைய வாய்ப்புள்ளது. பொதுவாக, உடல் எலும்பு திசுக்களை உறிஞ்சி, அவற்றை மாற்றி அமைக்கும் பணி செய்யும். ஆனால், இந்த கோளாறில், பழைய எலும்பு அகற்றலுக்குப் பிறகு புதிய எலும்பு உருவாக்கம் என்பது நடைபெறாது. இது உங்களது எலும்புகளை பலவீனப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றை மெல்லியதாகவும் ஆக்குகிறது.

Osteoporosis: Causes, Symptoms, What Food Items To Eat And Avoid?

இதுப்போன்ற பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள், நிற்பது, குதிப்பது போன்ற எளிய செயல்களைச் செய்வதில் கூட சிரமத்தை சந்திக்க நேரிடும். எலும்பு முறிவு அல்லது எதுவும் உடைந்து போவதற்கான ஆபத்து ஆஸ்டியோபோரோசிஸில் அதிகம் என்றே சொல்ல வேண்டும். பொதுவாக இந்த பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும் எலும்புகள் என்றால், விலா எலும்புகள், இடுப்பு மற்றும் மணிகட்டு மற்றும் முதுகெலும்புகளில் உள்ள எலும்புகள் ஆகியவையாகும்.

MOST READ: நுரையீரலில் இருக்கும் அழுக்கை வெளியேற்றணுமா? இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க போதும்...

இன்று உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் என்பதால், நீங்கள் ஆஸ்டியோபோரோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் அதற்கான அறிகுறிகள், காரணங்கள், என்ன உணவுப் பொருட்கள் சாப்பிட வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி தற்போது சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

உங்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால் அவற்றை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று வலி. அதுவும் தாங்கவே முடியாத அளவிற்கு வலி உண்டாகக்கூடும். ஆரம்ப கட்டங்களில் அதிக அறிகுறிகள் இருப்பதில்லை. ஆனால், எலும்பு முறிவு ஏற்படும் போது தெரியவந்துவிடும். ஆஸ்டியோபோரோசிஸ் அறிகுறிகள் சிலவற்றை தெரிந்து கொள்வோம்:

* விவரிக்கப்படாத மூட்டு வலி

* தொடுவதால் வலி

* உடற்பயிற்சி செய்வதில் சிரமம்

* உடையக்கூடிய நகங்கள்

* பலவீனமான பிடியும் வலிமையும்

ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான காரணம்

ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான காரணம்

ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, "இது நிச்சயமாக வயது தொடர்பான பிரச்சனை தான். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, எலும்புகள் சிதைந்துபோகும் செயல்முறையைத் தொடங்குகின்றன. எலும்புகள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பலவீனமடையத் தொடங்குகின்றன. மேலும், வைட்டமின் டி அல்லது கால்சியம் குறைபாடு இருந்தாலும் கூட, இந்த செயல்முறை முன்கூட்டியே தொடங்கிவிடக்கூடும். "இளையவர்களுக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் இருப்பது கண்டறியப்படுவதற்கும் இதுவே காரணமாக அமைகிறது." புகைபிடித்தல், மோசமான உணவுப்பழக்கம் மற்றும் குடும்ப வரலாறு போன்ற காரணங்களாலும் கூட ஆஸ்டியோபோரோசிஸ் உண்டாகக்கூடும்.

ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால் என்ன சாப்பிட வேண்டும்?

ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால் என்ன சாப்பிட வேண்டும்?

உங்கள் எலும்புகளை வலுப்படுத்த, வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த ஊட்டச்சத்துக்கள் நம் எலும்புகளை வலிமையாக்க உதவுகின்றன. மருத்துவரின் பரிந்துரையின் கீழ் கூடுதல் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதோடு, சூரிய ஒளியில் அவ்வபோது வெளிப்படுதலும் மிக அவசியம். ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையில் இருந்து உங்கள் உடலை காப்பாற்ற நீங்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகள் உள்ளன. அவற்றை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்:

* பால் பொருட்கள்

* விதைகள்

* நட்ஸ்

* பச்சை இலை காய்கறிகள்

* நட் மில்க் (லாக்டோஸ் சகிப்புத்தன்மைக்கு)

* காளான்

* மீன்

ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய மிக முக்கிய மூலப்பொருள் காஃப்பைன் என்பது தான். வயதாக வயதாக அதை குறைவாக உட்கொள்ள வேண்டியதன் அவசியம் உள்ளது. சரியான நேரத்தில் நீங்கள் காஃப்பைன் உட்கொள்வதைக் குறைத்தால், பிற்காலத்தில் உங்கள் உடல் பாதிக்கப்படாமல் தடுத்திடலாம். ஒருவருக்கு ஏற்கனவே ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால், அதிகப்படியான காஃப்பைன் அவர்களின் எலும்புகளுக்கு நிச்சயம் உதவாது. உங்கள் பாலில் காபியைச் சேர்த்து குடிப்பது, பால் நுகர்வாக என்றுமே கருதப்படாது. மற்ற உணவுகள் உண்மையில் தீங்கு விளைவிப்பவை அல்ல.

மருந்துகளை உட்கொள்வது அவசியமா அல்லது உணவுப் பொருட்கள் ஆஸ்டியோபோரோசிஸுக்கு உதவுமா?

மருந்துகளை உட்கொள்வது அவசியமா அல்லது உணவுப் பொருட்கள் ஆஸ்டியோபோரோசிஸுக்கு உதவுமா?

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது நீங்கள் உணவு மற்றும் மருந்துகளை இணைக்க வேண்டிய ஒரு நிலை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். சரியான டயட் மட்டுமே நூறு சதவீத தேவைகளையும் பூர்த்தி செய்துவிட முடியாது. எனவே, ஆஸ்டியோபோரோசிஸ் நோயைக் கண்டறியப்பட்டதும், உணவிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் தான். ஆனால், அதனோடு சரியான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். ஆஸ்டியோபோரோசிஸை ஒருவர் முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால், தேவையான முன்னெச்சரிக்கைகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முறையான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Osteoporosis: Causes, Symptoms, What Food Items To Eat And Avoid?

Osteoporosis: Causes, Symptoms, What Food Items To Eat And Avoid? Read on...
Desktop Bottom Promotion