Latest Updates
-
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்!
O வகை இரத்தப் பிரிவினருக்கு ஓர் நற்செய்தி: கொரோனா இவங்கள தாக்காதாம் - உண்மை என்ன?
சமீபத்திய ஆய்வின் ஆரம்ப முடிவுகளின் படி, O வகை இரத்த பிரிவினருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று தாக்கம் குறைவாக இருப்பது தெரிய வந்தது.
கோவிட்-19 தொற்றுநோயை உண்டாக்கும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு பாலினத்திற்கும், வயதிற்கும் பாகுபாடு காட்டாதது. வயதானவர்கள், இளைஞர்கள் என்று வைரஸால் அனைவருமே பாதிக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது. இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடிந்த ஒரே பாகுபாடு இரத்த பிரிவினரின் அடிப்படையில் மட்டுமே.

அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான 23andMe இன் சமீபத்திய ஆய்வின் ஆரம்ப முடிவுகளின் படி, O வகை இரத்த பிரிவினருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று தாக்கம் குறைவாக இருப்பது தெரிய வந்தது. ஆனால் இந்த ஆய்வு இன்னும் வெளியிடப்படவில்லை. இதுக்குறித்த தலைப்பில் மேலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இந்த ஆய்வில் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் மரபணுக்களின் உறவு குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். இது ஒரு பெரிய ஆய்வு. இந்த ஆய்வானது 7.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. மே மாத இறுதியில், கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட 10,000 பேரை சேர்த்து இந்த ஆய்வு மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

AB வகை இரத்தப் பிரிவினர் அதிக ஆபத்தில் உள்ளனர்
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களை ஆராய்ச்சியாளர்கள் மூன்று குழுக்களாகப் பிரித்தனர். ஒரு குழுவில் கோவிட்-19 நோய்த்தொற்றை சுயமாக அறிக்கை செய்தவர்களும், மற்றொரு குழுவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும், மூன்றாவது குழுவில் அறியப்பட்ட வெளிப்பாட்டிற்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களுமாக பிரிக்கப்பட்டனர். பின் அவர்களின் இரத்த மாதிரிகள், மரபணு வடிவமைப்பு ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. வயது, பாலினம், உடல் நிறை குறியீட்டு எண், இனம் மற்றும் இணை நோயுற்ற தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தனிநபர்களை சரிசெய்த பின்னரும் முடிவுகள் அப்படியே இருந்தன. இருப்பினும், இந்த ஆய்வின் போது அவர்களின் ப்ளஸ் அல்லது மைனஸ் வகை இரத்த குழுக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

#1
ஆய்வின் முதற்கட்ட முடிவின் படி, O வகை இரத்த பிரிவினருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தின் ஆபத்து மிகக் குறைவு என்பது தெரிய வந்தது. அதோடு இந்த ஆய்வில் மற்ற வகை இரத்த பிரிவினர்களை விட O வகை இரத்த பிரிவினர்களுக்கு COVID-19 சோதனையில் பாசிட்டிவ்-க்கான வாய்ப்பு 9-18 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

#2
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற முன்னணித் தொழிலாளர்கள் போன்ற நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின், O வகை இரத்தப் பிரிவினர் மற்ற இரத்த பிரிவினர்களைக் காட்டிலும், கோவிட்-19 சோதனையில் பாசிட்டிவ்வாக காட்டுவதற்கான வாய்ப்பு 13-26 சதவீதம் குறைவாக இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

#3
AB வகை இரத்தப் பிரிவினர்களுக்கு கோவிட்-19 சோதனையில் பாசிடிவ்வாக காட்ட அதிக வாய்ப்புள்ளது என்றும், அதைத் தொடர்ந்து B வகை இரத்த பிரிவினர் மற்றும் A வகை இரத்த பிரிவினருக்கு உள்ளது என்றும் ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

புரிந்து கொள்ள கடினமான நோய்
கோவிட்-19 என்பது முன்னர் அறியப்படாத கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இதனால் தான் விஞ்ஞானிகளுக்கு நோயின் சிக்கல்களைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே, முதியவர்கள் மற்றும் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு கடுமையான சிக்கல்கள் மட்டுமின்றி, இறப்பு கூட ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதைக் கண்டோம். அதோடு இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளுக்கு லேசான அறிகுறிகள் தெரிந்தது.

முந்தைய சீன ஆய்வு
முன்னதாக ஒரு சீன ஆய்வில், இரத்த வகைக்கும் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராயப்பட்டது. அதில் A வகை இரத்தப் பிரிவு உள்ளவர்கள் மற்ற இரத்த பிரிவினர்களைக் காட்டிலும் அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கும் அபாயம் அதிகம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தனர். இந்த ஆய்வானது சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள தெற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் இருந்து வந்ததாகும்.

நினைவில் கொள்ள வேண்டியவை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வு இன்னும் முடிவுக்கு வராத ஒன்று. எனவே நீங்கள் O வகை இரத்த பிரிவினராக இருந்தால், முழுமையாக சந்தோஷப்படாதீர்கள். அதேப் போல் AB வகை இரத்த பிரிவினர் விரக்தி அடைய வேண்டிய அவசியமும் இல்லை.
ஏனென்றால், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளுடன் உடன்படாத சில விஞ்ஞானிகள், ‘COVID-19 மற்றும் ABO இரத்தக் குழு ஆன்டிஜென்களுக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்தாமல், இந்த முடிவைப் புரிந்து கொள்வது கடினம். இது முற்றிலும் தற்செயலானதாக இருக்கலாம்' என்று கூறுகிறார்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட இரத்த குழுவின் பரவலும் முக்கியமானது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதை ஆராயவில்லை. இருப்பினும், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளை சரிபார்ப்பது புதிய வைரஸ் தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய ஆபத்தில் உள்ளவர்களை அடையாளம் காண ஓரளவு உதவும் என்று அனைத்து நிபுணர்களும் ஒருமனதாக ஒப்புக் கொள்கிறார்கள்.



Click it and Unblock the Notifications











