For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலாந்தில் அசுர வேகத்தில் பரவும் 'நோரோ வைரஸ்' - இது எப்படி பரவுகிறது மற்றும் இதன் அறிகுறிகள் என்ன?

|

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்கனவே ஏராளமான உயிர்களை இங்கிலாந்து இழந்துள்ளது. இந்நிலையில் அங்கு புதிதாக நோரோ வைரஸ் மக்களிடையே வேகமாக பரவி வருவதாக இங்கிலாந்து பொது சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின், அதன் பல உருமாற்றங்களுடன், கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டது. அதன் பின் ஜிக்கா வைரஸ், குரங்கு பி வைரஸ் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வைரஸ் பரவல் குறித்த தகவல் வெளிவந்தது. அவ்வளவு தானா, இன்னும் உள்ளதா என்று நினைப்பதற்குள், இங்கிலாந்தில் நோரோ வைரஸ் அதிவேகமாக பரவி வருவதைக் கூறி இங்கிலாந்து பொது சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

MOST READ: கொரோனாவை அடுத்து சீனாவில் பரவும் புதிய குரங்கு பி வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன?

நோரோ வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்ன, அதற்கான தடுப்பு வழிகள் மற்றும் சிகிச்சைகள் என்னவென்பதை இப்போது விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எத்தனை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

எத்தனை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

2021 ஆம் ஆண்டு மே மாத இறுதி முதல் கடந்த 5 வாரங்களில், இங்கிலாந்தில் சுமார் 154 நோரோ வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளதாக இங்கிலாந்து பொது சுகாதார மையம் தெரிவித்துள்ளன. இந்த புள்ளிவிவரமானது முந்தைய 5 வருடங்களில் இதே காலகட்டத்தில் 3 மடங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த வைரஸ் தொற்று கல்வி நிறுவனங்கள், குறிப்பாக குழந்தைப் பராமரிப்பு மையங்களில் அதிகம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

போராடும் சிறுவன்.. சாப்பிடவும் முடியாமல், மூச்சு விடவும் முடியாமல்.. ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்

நோரோ வைரஸ் என்றால் என்ன?

நோரோ வைரஸ் என்றால் என்ன?

நோரோ வைரஸ் என்பது மிகவும் வேகமாகவும், தீவிரமாகவும் தொற்றும் தன்மை கொண்ட வைரஸ் ஆகும். இது பொதுவாக நோயாளிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பில்லியன் கணக்காக வைரஸ் துகள்களை வெளியிட முடியும் மற்றும் அவற்றில் சில மட்டுமே மற்றவர்களை நோய்வாய்ப்படுத்தும் என்றும் சி.டி.சி கூறுகிறது.

இது எவ்வாறு பரவுகிறது?

இது எவ்வாறு பரவுகிறது?

நோரோ வைரஸ் ஒருவரை பின்வருமாறு தாக்கலாம். அவையாவன:

* பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பு கொண்டிருத்தல்

* அசுத்தமான உணவு அல்லது நீரைப் பருகுதல்

* அசுத்தமான மேற்பரப்புகளைத் தொட்டு, பின் உங்கள் வாய், மூக்கு போன்ற பகுதிகளைத் தொடுதல்

அறிகுறிகள் என்ன?

அறிகுறிகள் என்ன?

சி.டி.சி வழங்கிய தகவல்களின் படி, நோரோ வைரஸின் பொதுவான அறிகுறிகள் வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி ஆகியவை ஆகும். காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலி போன்றவை அதன் பிற அறிகுறிகளாகும். இந்த வைரஸ் வயிறு அல்லது குடல் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது இரைப்பை குடல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக அறிகுறிகளானது தொற்று ஏற்பட்ட 12 முதல் 48 மணிநேரங்களில் தெரிய ஆரம்பித்து, ஒன்று முதல் மூன்று நாட்களுக்கு நீடித்திருக்கும்.

இதற்கு ஏதேனும் சிகிச்சைகள் உள்ளதா?

இதற்கு ஏதேனும் சிகிச்சைகள் உள்ளதா?

நோரோ வைரஸுக்கு இன்னும் குறிப்பிட்ட மருந்து அல்லது சிகிச்சை ஏதும் இல்லை. வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு காரணமாக இழந்த திரவங்களை மீண்டும் பெறவும், நீரிழப்பைத் தடுக்கவும், நிறைய தண்ணீர் குடிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் காய்ச்சல் மற்றும் உடல் வலியை நிர்வகிக்க மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

நோரோ வைரஸை தடுப்பது எவ்வாறு?

நோரோ வைரஸை தடுப்பது எவ்வாறு?

* நோரோ வைரஸ் தாக்குதலில் இருந்து தடுக்க ஒரே சிறந்த வழி, சரியான கை சுகாதாரத்தை கடைப்பிடிப்பது தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

* அடிக்கடி சோப்பு மற்றும் நீரைக் கொண்டு கைகளை சுத்தம் செய்வது தவிர, ஆல்கஹால் கலந்த சானிடைசரைப் பயன்படுத்தலாம்.

* இது தவிர, பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு சுத்தம் செய்த பின்னரே சாப்பிடவோ அல்லது சமையலுக்கு பயன்படுத்தவோ வேண்டும்.

* உடல்நலம் சரியில்லாவிட்டால், அறிகுறிகள் போனப் பின் குறைந்தது 2 நாட்கள் கழித்து மற்றவர்களுக்கு உணவு சமைக்க சமையலறைக்குள் செல்லுங்கள். அதுவரை யாருக்கும் சமைத்து கொடுக்காதீர்கள்.

* முக்கியமாக வீட்டின் மேற்பரப்புக்களை தினமும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Norovirus Outbreak: Know Norovirus Symptoms, How it is Transmitted, Treatment and Prevention in Tamil

Norovirus is a highly infectious virus that causes vomiting and diarrhoea. While it passes in a couple of days, it is easily transmissible.