For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவை அடுத்து சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு புதிய வைரஸ்!

கொரோனா வைரஸை அடுத்து, மற்றொரு பெருந்தொற்றாக மாறக்கூடிய ஒரு புதிய காய்ச்சல் சீனாவில் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

|

சீனாவில் தோன்றி பெருந்தொற்றாக மாறி உலகெங்கிலும் பரவி ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்ட கொரோனா வைரஸை அடுத்து, மற்றொரு பெருந்தொற்றாக மாறக்கூடிய ஒரு புதிய காய்ச்சல் சீனாவில் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Recommended Video

China-விலிருந்து பரவும் புதிய Swine Flu..Corona-வே முடியலயே!

New Swine Flu Virus With Pandemic Potential Found in China

இந்த வைரஸ் பன்றிகளால் சுமக்கப்படுகிறது. ஆனால் இது மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீன விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதோடு இந்த வைரஸ் மேலும் மாற்றமடையக்கூடும் என்பதால் அது எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடும். மேலும் உலகளவில் பரவி பெரும் வெடிப்பை உண்டாக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய வகை பன்றி காய்ச்சல் வைரஸ்

புதிய வகை பன்றி காய்ச்சல் வைரஸ்

புதிய வகை பன்றி காய்ச்சல் வைரஸ் உடனடியாக பரவக்கூடியது இல்லை என்றாலும், இந்த வைரஸ் மனிதர்களைப் பாதிக்கக்கூடியது என்பதற்கான அனைத்து அடையாளங்களும் உண்டு என்பதால் மிகவும் நெருக்கமான கண்காணிப்பு அவசியமாக உள்ளது.

இந்த வைரஸ் புதியது என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்களை எளிதில் தாக்கலாம். பன்றிகளில் வைரஸைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், பன்றித் தொழிலாளர்களை மிகவும் நெருக்கமாக கண்காணிப்பதை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் தேசிய அறிவியல் அகாடமியின் புரோசிடிங்ஸ் இதழில் சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பெருந்தொற்று அச்சுறுத்தல்

பெருந்தொற்று அச்சுறுத்தல்

தற்போதைய கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை முடிவுக்கு கொண்டு வர உலகம் முயற்சித்துக் கொண்டிருக்கும் போதும், பன்றி காய்ச்சல் வைரஸின் புதிய திரிபு நிபுணர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய முக்கிய நோய் அச்சுறுத்தல்களில் ஒன்றாகவும் உள்ளது.

உலகம் சந்தித்த கடைசி பெருந்தொற்று, மெக்ஸிகோவில் தொடங்கிய 2009 ஆம் ஆண்டின் பன்றிக் காய்ச்சல். இது ஆரம்பத்தில் அஞ்சியதை விட சற்று குறைவான ஆபத்தைக் கொண்டது. ஏனெனில் இதை எதிர்கொள்வதற்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தி வயதானவர்களுக்கு இருந்தது. இந்த வைரஸ் தான் A / H1N1pdm09. தற்போது இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புடன் இருப்பதற்கு வருடாந்திர ஃப்ளூ தடுப்பூசி போடப்படுகிறது.

மாற்றங்களைக் கொண்ட பன்றிக் காய்ச்சல் வைரஸ்

மாற்றங்களைக் கொண்ட பன்றிக் காய்ச்சல் வைரஸ்

தற்போது சீனாவில் அடையாளம் காணப்பட்ட புதிய பன்றி காய்ச்சல் வைரஸ், 2009 ஆம் ஆண்டு பரவிய பன்றிக் காய்ச்சலைப் போன்றது. ஆனால் சில புதிய மாற்றங்களுடன் காணப்படுகிறது.

இதுவரை இந்த வைரஸ் ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. ஆனால் பேராசிரியர் கின்-சோ சாங் மற்றும் அதை ஆராய்ந்து வரும் சகாக்கள், இதன் மீது ஒரு கண் வைத்திருப்பதாக கூறுகிறார்கள். G4 EA H1N1 என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கும் இந்த வைரஸ், மனிதனின் சுவாசப் பாதைகளில் உள்ள உயிரணுக்களில் சேர்ந்து வளர்ந்து பெருக்கமடையலாம்.

பன்றித் தொழில்

பன்றித் தொழில்

சமீபத்தில் இந்த வைரஸ் தொற்றுநோய்க்கான ஆதாரங்களை சீனாவில் பன்றித் தொழிலில் பணியாற்றியவர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதே சமயம் தற்போதைய ஃப்ளூ தடுப்பூசிகளால் இந்த வைரஸிடம் இருந்து பாதுகாப்பு கிடைப்பது போல் தெரியவில்லை.

இங்கிலாந்து பேராசிரியர் கூற்று

இங்கிலாந்து பேராசிரியர் கூற்று

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் கின்-சோ சாங் பிரபல பத்திரிக்கையிடம் இதுக்குறித்து கூறியதாவது: "தற்போது நாங்கள் கொரோனா வைரஸால் எதையும் கவனிக்க முடியாமல் திசை திருப்பப்பட்டிருக்கிறோம். ஆனால் ஆபத்தான புதிய வைரஸ்களையும் கட்டாயம் கவனிக்காமல் விடமாட்டோம். இந்த வைரஸ் உடனடியாக பரவி பிரச்சனையை உண்டாக்கக்கூடியவை அல்ல என்றாலும், அதை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம்" என்றும் கூறினார்.

கால்நடை மருத்துவ துறை தவைலர் கூற்று

கால்நடை மருத்துவ துறை தவைலர் கூற்று

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கால்நடை மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் வூட், "நோய்க்கிருமிகளின் புதிய திரிபு காரணமாக நாம் தொடர்ந்து ஆபத்தில் உள்ளோம் மற்றும் வன விலங்குகளை விட பண்ணை விலங்குகள் மனிதர்களுடன் அதிக தொடர்பு கொண்டவை என்பதால் முக்கியமான பெருந்தொற்று வைரஸ்களுக்கு இம்மாதிரியான விலங்குகள் ஆதாரமாக செயல்படலாம்" என்று கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

New Swine Flu Virus With 'Pandemic Potential' Found in China

The new strain, scientists say, is carried by pigs but can infect humans and requires close monitoring.
Desktop Bottom Promotion