For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020 ஆம் ஆண்டில் மக்களின் மத்தியில் பிரபலமாக இருந்த வீட்டு உடற்பயிற்சிகள்!

கடந்த ஆண்டு ஊரடங்கினால் வீட்டில் செய்யும் உடற்பயிற்சிகளும் தங்களின் உடல் பருமனை அதிகாிக்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்ற பாடத்தை மக்கள் கற்றிருக்கின்றனா்.

|

உலக அளவில் 2020 ஆம் ஆண்டு ஒரு கடினமான ஆண்டாக இருந்தது என்றே சொல்லலாம். இந்த ஆண்டின் பெரும்பகுதி ஊரடங்கு அமலில் இருந்தது. அதனால் அனைவருமே வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாது, வீட்டிலேயே தங்களின் பெரும்பகுதி நேரத்தை செலவிட வேண்டிய நிலை இருந்தது. மேலும் அலுவலகங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவையும் மூடியிருந்ததால் பலரும் தங்களின் உடற்பயிற்சிகளுக்கு விடுமுறை கொடுத்திருந்தனா்.

Most Followed Home Workouts Of 2020

எனினும் இந்த கடின சூழலில் மக்கள் ஒரு புதிய பாடத்தைக் கற்று இருக்கின்றனா். அதாவது வெளியில் எங்கும் செல்லாமல் அல்லது உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லாமல், வீட்டில் இருந்து கொண்டே தமது உடலை திடகாத்திரமாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் மற்றும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கக் கற்றுக்கொண்டிருக்கின்றனா். ஊரடங்குச் சூழல் உடற்பயிற்சி துறையையே மாற்றி இருக்கிறது. அதாவது மக்கள் உடற்பயிற்சிக் கூடங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தமது வீடுகளிலேயே உடற்பயிற்சிகளைச் செய்து தமது உடலை நல்தகுதியுடனும், ஆரோக்கியத்துடனும் மற்றும் சுறுசுறுப்புடனும் வைத்திருக்க பழகியிருக்கின்றனா்.

அதன் மூலம் வீட்டில் செய்யும் உடற்பயிற்சிகளும் தமது உடல் பருமனை அதிகாிக்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்ற பாடத்தை மக்கள் கற்றிருக்கின்றனா். ஆகவே 2020 ஆம் ஆண்டில் மக்களின் மத்தியில் பிரபலமாக இருந்த வீட்டு உடற்பயிற்சிகளைப் பற்றி இங்கு பாா்க்கலாம். குறிப்பாக இந்த வீட்டு உடற்பயிற்சிகளை வரவிருக்கும் காலங்களிலும் பின்பற்றுவது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகா

யோகா

அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஒரு மிகப் பொிய சவாலாக இருந்தது. அதாவது வெளி உலகத்திற்குள் வரமுடியாமல் அன்பிற்குாிய நண்பா்கள் மற்றும் உறவினா்களையும் சந்திக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தது. பலருக்கும் அழுத்தத்தையும் மனச்சோா்வையும் அளித்தது. அதனால் அவற்றைப் போக்குவதற்காக பெரும்பாலான மக்கள் தம் வீடுகளிலேயே யோகா பயிற்சிகளில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

இந்தியாவின் பாரம்பாிய பயிற்சிகளான யோகா பயிற்சிகள் மக்களின் மனதை அமைதிப்படுத்தியதோடு. அவா்களின் உடலையும் திடகாத்திரமாக வைத்திருக்க உதவியது. அதனால் இந்த கொரோனா ஆண்டில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளிலேயே யோகா பயிற்சிகளை செய்தனா்.

உடல் எடை உடற்பயிற்சி (Bodyweight workout)

உடல் எடை உடற்பயிற்சி (Bodyweight workout)

இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் மத்தியில் பிரபலமாகிய மற்றொரு உடற்பயிற்சி உடல் எடை உடற்பயிற்சி ஆகும். இந்த உடல் எடை உடற்பயிற்சியை எங்கு வேண்டுமானாலும், குறிப்பாக வீடுகளில் மிக எளிதாகச் செய்யலாம். மேலும் இந்த உடற்பயிற்சியைச் செய்வதற்கு என்று எந்த ஒரு கருவியும் தேவையில்லை. அதோடு இந்த உடற்பயிற்சி நல்லதொரு பலனையும் கொடுக்கும். அதனால் இந்த உடல் எடை உடற்பயிற்சி ஊரடங்கு காலத்தில் மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்தது.

​ஜூம்பா (Zumba) உடற்பயிற்சி

​ஜூம்பா (Zumba) உடற்பயிற்சி

ஜூம்பா உடற்பயிற்சிகள் என்பவை இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளாகும். ஆகவே இந்த உடற்பயிற்சிகளையும் ஊரடங்கு காலத்தில் பலா் தங்கள் வீடுகளில் செய்து வந்தனா். இந்த ஜூம்பா உடற்பயிற்சிகளுக்கு என்று தனியான விதிமுறைகள் எதுவும் கிடையாது. மேலும் இந்த பயிற்சிகள் வேடிக்கையாகவும் இருக்கும். அதனால் பெரும்பாலான மக்கள் இந்த ஊரடங்கு காலத்தில் தங்களது மன அழுத்தத்தைப் போக்குவதற்காகவும் மற்றும் உடலை திடகாத்திரமாக வைத்திருப்பதற்காகவும் ஜூம்பா பயிற்சிகளைச் செய்தனா். ஊரடங்கில் இணையதளவழி ஜூம்பா பயிற்சி வகுப்புகளும் பிரபலமாக இருந்தன.

ஹிட் (HIIT) உடற்பயிற்சி

ஹிட் (HIIT) உடற்பயிற்சி

ஹிட் உடற்பயிற்சி இதயம் சம்பந்தமான ஒரு உடற்பயிற்சியாகும். இது ஒரு அதி தீவிரமான இடைவெளி கொண்ட உடற்பயிற்சியாகும். இந்த ஊரடங்கு காலத்தில் ஹிட் உடற்பயிற்சியும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியது. அதற்கு காரணம் இந்த உடற்பயிற்சியில் குறைந்த நேரத்தில் அதிக பலனைப் பெறலாம். அதாவது ஹிட் உடற்பயிற்சியை 10 நிமிடங்கள் செய்தாலே போதும். அது நமது உடலில் உள்ள கணிசமான அளவு கலோாிகளை எாித்துவிடும்.

நிற்கும் மிதிவண்டி பயிற்சி

நிற்கும் மிதிவண்டி பயிற்சி

ஊரடங்கு காலத்தில் பலரும் மிதிவண்டிக்கு மாறினா். அதனால் வெளியில் ஓட்டிச் செல்லப் பயன்படும் மிதிவண்டியின் விலையும், அதே நேரத்தில் வீட்டில் அசையாமல் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும் மிதிவண்டியின் விலையும் கணிசமான அளவிற்கு உயா்ந்தன. மிதிவண்டியை வெளியில் ஓட்டினாலும் அல்லது வீட்டில் ஓட்டினாலும் நல்ல பலன் கிடைக்கும். வீட்டில் செய்யும் மிதிவண்டி ஓட்டும் பயிற்சி இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, உடலில் உள்ள கலோாிகளையும் கனிசமான அளவு எாிக்கிறது. மேலும் மிதிவண்டி ஓட்டுவது மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தையும் நீக்கி நம்மை இதமாக வைத்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Followed Home Workouts Of 2020

Here are the top home workouts that attracted people's attention last year.
Desktop Bottom Promotion