For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழங்களை சாப்பிடும் போது 90% மக்கள் செய்யும் தவறுகள் இதாங்க.. நீங்களும் அதை செய்யாதீங்க..

பெரும்பாலானோர் பழங்களை சாப்பிடும் போது சில தவறுகளை செய்கிறார்கள். இந்த தவறுகளால் ஆரோக்கியமான பழங்கள் கூட உடலுக்கு கேடு விளைவிக்க ஆரம்பிக்கின்றன.

|

நாம் உண்ணும் உணவுகளில் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் சுவையானவையும் கூட. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் பழங்களில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் பழங்கள் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸாகவும் விளங்கும். இவற்றில் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், பிற கனிமச்சத்துக்களும் வளமான அளவில் உள்ளதால், உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க பெரிதும் உதவி புரிகிறது.

Mistakes To Avoid While Eating Fruits In Tamil

பழங்களை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் வடிவிலும் உட்கொள்ளலாம். ஆனால் பழங்கள் என்ன தான் ஆரோக்கியமான இயற்கை உணவாக இருந்தாலும், இவற்றில் சுக்ரோஸ், ஃபுருக்டேஸ் மற்றும் க்ளுக்கோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் நிறைந்துள்ளன. ஆனால் இந்த சர்க்கரைகளை அளவாக உட்கொண்டால் எவ்வித ஆபத்தும் இல்லை. அதுவே அளவுக்கு அதிகமானால் பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

எனவே பழங்களை சாப்பிடுவதாக இருந்தாலும், அந்த பழங்களை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் பழங்களை சாப்பிடும் போது சில தவறுகளை செய்கிறார்கள். இந்த தவறுகளால் ஆரோக்கியமான பழங்கள் கூட உடலுக்கு கேடு விளைவிக்க ஆரம்பிக்கின்றன. இப்போது பழங்களை சாப்பிடும் போது எந்த தவறுகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறு #1 பழங்களை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடுவது

தவறு #1 பழங்களை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடுவது

பழங்கள் மற்ற உணவுப் பொருட்களை விட வேகமாக உடைக்கப்படக்கூடியவை. அப்படிப்பட்ட பழங்களை மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் போது, அது உடலில் நச்சுக்களை உருவாக்கும். பொதுவாக ஒரு உணவுப் பொருளை மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்க்கும் போது அது செரிமானத்தை மெதுவாக்கும். பழங்களை கடினமான உணவுகளுடன் சேர்த்து எடுக்கும் போது, அது விரைவில் செரிமானமாகால் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பதோடு, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கடினமாக்குகிறது. அதோடு இது செரிமான சாறுகளில் நொதிக்க ஆரம்பித்து, நஞ்சாகி உடலினுள் பலவிதமான பிரச்சனைகளை உருவாக்க தொடங்கும். எனவே பழங்களை எப்போதும் தனியாக சாப்பிடுவதே நல்லது.

தவறு #2 பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவது

தவறு #2 பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவது

பலர் பழங்களை இரவு தூங்கும் முன்பு சாப்பிடுவார்கள். பொதுவாக எப்பேற்பட்ட உணவுப் பொருளாக இருந்தாலும், இரவு தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன்னரே சாப்பிட்டு விட வேண்டும். இல்லாவிட்டால், அது செரிமான மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தும். இது பழங்களுக்கும் பொருந்தும். பழங்களை ஒருவர் தூங்குவதற்கு முன்பு உட்கொண்டால், அது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஏனெனில் தூங்கும் முன்பு பழங்களை சாப்பிடும் போது, அந்த பழங்கள் ஓய்வு நேரத்தில் உடலில் நிறைய சர்க்கரையை வெளியிட்டு, உடலின் ஆற்றல் அளவை உயர்த்தும். இரவு நேரத்தில் உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் குறைவாக இருக்கும். இது தவிர, இரவு நேரத்தில் பழங்களை சாப்பிடுவதால், அது அசிடிட்டியை உண்டாக்கும். எனவே பழங்களை சாப்பிடுவதாக இருந்தால், மாலை வேளையிலேயே சாப்பிடுங்கள்.

தவறு #3 உடனே தண்ணீர் குடிப்பது

தவறு #3 உடனே தண்ணீர் குடிப்பது

நிறைய பேர் பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீரைக் குடிப்பார்கள். ஆனால் அப்படி செய்வது மிகவும் தவறு. பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் போது, செரிமான மண்டலத்தின் pH அளவு அதிகரித்து, சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். குறிப்பாக நீர்ச்சத்துள்ள பழங்களான தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரிக்காய், ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை உண்டதும் நீர் குடிக்கும் போது செரிமான மண்டலத்தின் pH அளவு பாதிக்கப்படுகிறது. ஏனெனில் நீர்ச்சத்துள்ள பழங்களை உண்டதும் நீரைக் குடிக்கும் போது, அது வயிற்றின் அமிலத்தன்மையைக் குறைத்து pH சமநிலையை மாற்றும். இதன் விளைவாக வயிற்றுப் போக்கு அல்லது காலரா போன்ற தீவிர பிரச்சனையால் அவதிப்பட நேரிடும்.

தவறு#4 தோலை நீக்கிவிட்டு பழங்களை சாப்பிடுவது

தவறு#4 தோலை நீக்கிவிட்டு பழங்களை சாப்பிடுவது

பழங்களை எடுத்துக் கொண்டால், அதன் பெரும்பாலான சத்துக்கள் அவற்றின் தோல் பகுதியில் தான் உள்ளது. குறிப்பாக வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை தோல் பகுதியில் தான் உள்ளது. உதாரணமாக, ஆப்பிளின் தோலில் தான் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்றவை உள்ளது. ஆனால் பலர் ஆப்பிளை சாப்பிடும் போது அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. எனவே தோலுடன் சாப்பிடக்கூடிறவாறான பழங்களை தோலுடன் சாப்பிடுங்கள். அப்படி சாப்பிடும் போது உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றின் அபாயம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mistakes To Avoid While Eating Fruits In Tamil

Here are some common mistakes to avoid while eating fruits, Read on to know more...
Story first published: Friday, December 9, 2022, 10:23 [IST]
Desktop Bottom Promotion