Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
கீல்வாதத்தால் கஷ்டப்படுறீங்களா? சீக்கிரம் குணமாக, இந்த பயிற்சிகளை தினமும் செய்யுங்க...
கீல்வாதம் என்பது எலும்புகளுக்கு இடையில் உராய்வை ஏற்படுத்தி , இதன் காரணமாக கடுமையான வலி, பிடிப்பு, எலும்பு துருத்திக் கொள்வது போன்ற பாதிப்புகள் உண்டாகலாம்.
கீல்வாதம் என்பது குருத்தெலும்பு திசு பாதிக்கப்படுவதால் உண்டாகும் ஒரு சீரழிவு நோயாகும். குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு உண்டாகிறது. கீல்வாதம் என்பது எலும்புகளுக்கு இடையில் உராய்வை ஏற்படுத்தி , இதன் காரணமாக கடுமையான வலி, பிடிப்பு, எலும்பு துருத்திக் கொள்வது போன்ற பாதிப்புகள் உண்டாகலாம்.

ஒருவேளை உங்களுக்கு இடுப்பு பகுதியில் கீல்வாதம் ஏற்படுவதால் உங்களால் உடற்பயிற்சி செய்ய முடியாது மற்றும் சரியாக நடக்க முடியாது. இருப்பினும் உங்கள் தசைகளை பராமரிக்கவும், சமநிலையை மேம்படுத்தவும், இடுப்பு மூட்டுகள் நிலையாக இருக்கவும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதுடன் சேர்த்து உங்கள் தினசரி செயல்பாடுகளையும் அதிகரிக்க வேண்டும். மேலும் கீழே குறிப்பிட்ட சில உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் ஒருவரின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். ஆனால் இத்தகைய எந்த ஒரு பயிற்சியையும் தொடங்குவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இப்போது கீல்வாதத்தால் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் சில எளிய உடற்பயிற்சிகளைக் காண்போம்.

நடைபயிற்சி
குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அருமையான பயிற்சி நடைப்பயிற்சி ஆகும். நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உங்கள் உடல் ஒரு குறிப்பிட்ட சமநிலையை அடைய முடிகிறது. சாய்வு இல்லாமல் ஒரு டிரெட்மில்லைப் பயன்படுத்த முயற்சியுங்கள், இதனால் நீங்கள் வெளியில் நடந்தாலும் சரியான சமநிலை கிடைக்கும். இதனால் உங்கள் உடலுக்கு போதுமான செயல்பாடு கிடைப்பது மட்டுமல்லாமல் உங்கள் தசை வலிமையும் மெல்ல வளர்கிறது.

ஸ்டேஷனரி பைக்
உங்கள் உடல் வலிமை மெதுவாக அதிகரிக்கும் வகையில் குறைந்த அளவு அமைப்பைக் கொண்ட ஒரு ஸ்டேஷனரி பைக் பயன்படுத்தலாம். இதனை போக்குவரத்து. நெரிசல் இருக்கும் இடங்களில் பயன்படுத்துவதை விட, உங்கள் வீட்டில் மட்டும் பயன்படுத்துவதால், சோர்வாக இருக்கும் போது சற்று இடைவேளை எடுத்துக் கொள்ளலாம். இந்த வகை பைக் ஜிம்மில் காணப்படும் சைக்கிளிங் மெஷினை ஒத்து காணப்படும். தினமும் இந்த பைக்கில் இரண்டு மணி நேரம் சைக்கிளிங் பயிற்சி செய்வதனால் உங்கள் உடல் வலிமை அதிகரிக்கும். ஆனால் நீண்ட நேரம் இதில் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நேர பயிற்சி காயங்களுக்கு வழிவகுக்கலாம்.

நீச்சல் பயிற்சி
உடலுக்கு மிதமான அளவு செயல்பாட்டைத் தரும் நீச்சல் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம். இது உடலுக்கு நெகிழ்வைத் தரும். நீச்சல் தவிர மற்றொரு வகை தண்ணீர் பயிற்சியும் உண்டு. அது இடுப்பளவு தண்ணீரில் நடப்பது. இடுப்பளவு தண்ணீரில் நடப்பதால் மூட்டு தசைகள் லேசாகி, எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலிமையையும் அதிகரிக்கிறது. இப்படி செய்வதால் இடுப்பு வலி குறைகிறது. மூட்டு தொடர்பான வலிகளுக்கு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு, பாதிக்கப்பட்ட இடத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் பாதிப்பை சரிசெய்வதற்கு தண்ணீர் பயிற்சி நல்ல வகையில் உதவுகிறது. தண்ணீர் பயிற்சியால் ஏற்படும் நல்ல பலன்களை முழுவதும் பெறுவதற்கு, நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெறலாம்.

யோகா
மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, தசை வலிமையை மேம்படுத்தி, வலியைக் குறைக்க யோகா உதவுகிறது. தினமும் காலையில் யோகா பயிற்சி செய்வதால் உங்கள் மூட்டுகள் திறக்கப்பட்டு, உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, ஆரோக்கியமான உடல் எடை நிர்வகிக்கப்படுகிறது. கீல்வாதம் உள்ளவர்கள் தங்கள் எடையை கட்டுப்பாட்டில். வைத்திருக்க வேண்டும் என்பதால், யோகா செய்து உங்கள் உடல் எடையை பராமரிக்கலாம்.

தாய் சி
தாய் சி-யின் மெதுவான மற்றும் திரவ இயக்கங்கள் உங்களை வலியிலிருந்து விடுவிப்பதை உணர வைக்கும். உடலின் சமநிலை மேம்பட இது உதவும். இது ஒரு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான முறையில் மனஅழுத்தத்தைப் போக்க உதவும் பயிற்சி. குறிப்பாக கீல்வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த பலன் கொடுக்கும். திரவ இயக்கங்கள் எடுத்துக் கொள்ளும் போது சரியான பராமரிப்பு தேவை, இல்லையேல் ஆழமான காயம் ஏற்படும் அபாயம் உண்டு.



Click it and Unblock the Notifications











