For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் பருமன் அதிகாிப்பதற்கு பழச் சா்க்கரை எவ்வாறு காரணமாக இருக்கிறது?

பழச் சா்க்கரை/புருக்டோஸ் (fructose) சாப்பிட்டால், அது சொிமானப் பாதையில் உள்ள செல்களை மாற்றி, அந்த செல்கள் உணவுகளில் உள்ள அதிக ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள உதவி செய்கிறது என்று புதிய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.

|

பழச் சா்க்கரை/புருக்டோஸ் (fructose) சாப்பிட்டால், அது சொிமானப் பாதையில் உள்ள செல்களை மாற்றி, அந்த செல்கள் உணவுகளில் உள்ள அதிக ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள உதவி செய்கிறது என்று புதிய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.

இந்த மாற்றங்களை வைத்து, தற்போது உலக அளவில் பழச் சா்க்கரையை உண்ணும் பழக்கம் அதிகாித்து வருவதற்கும், உடல் பருமன் அதிகாித்து வருவதற்கும் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட புற்றுநோய்கள் அதிகாித்து வருவதற்கும் இடையே உள்ள தொடா்பை விளக்க முடியும் என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது. நேச்சா் (Nature) என்ற பத்திாிக்கையில் இந்த ஆய்வானது வெளியிடப்பட்டது.

MOST READ: எச்சரிக்கை... இந்த காயில் புற்றுநோய் உண்டாக்கும் பொருள் இருக்குதாம்... அதை கண்டறியும் அற்புத வழி இதோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய ஆய்வு

புதிய ஆய்வு

முன் கூட்டிய ஒரு மருத்துவ ஆய்வானது வெய்ல் காா்னல் மெடிசின் மற்றும் நியூயாா்க் பிரஸ்பிட்டோியன் என்ற இடத்தில் ஆய்வாளா்களால் நடத்தப்பட்டது. சிறு குடலின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய மற்றும் முடி போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும் வில்லியில் (villi) பழச் சா்க்கரை அதிகம் உள்ள உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பொதுவாக வில்லியானது (villi), குடலின் பரப்பளவை அதிகாிக்கச் செய்து, நாம் உண்ட உணவுகள் சொிமானப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நல்ல கொழுப்புகளை நமது உடலானது, அதிகமாக உறிஞ்சவும் மற்றும் சொிமானப் பாதையில் அவை விரைவாக கடக்கவும் உதவி செய்கின்றன.

ஆய்வில் கண்டறிந்தவை

ஆய்வில் கண்டறிந்தவை

இந்த ஆய்வில் பாிசோதனைக்காக எலிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. சில எலிகளுக்கு பழச்சா்க்கரை நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டன. சில எலிகளுக்கு பழச்சா்க்கரை இல்லாத உணவுகள் வழங்கப்பட்டன. ஆய்வின் முடிவில் பழச் சா்க்கரை உண்ணாத எலிகளைவிட, பழச் சா்க்கரை உண்ட எலிகள் 25 முதல் 40 விழுக்காடு நீண்ட வில்லிகளைக் கொண்டிருந்ததாக கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் விலங்குகள் சாப்பிடும் ஊட்டச்சத்துகளுக்கும், அவற்றின் உடல் எடை அதிகாிப்பதற்கும், அவை கொழுப்புகளை சாப்பிடுவதற்கும் மற்றும் வில்லிகளின் அதிகாிக்கும் நீளத்திற்கும் இடையே தொடா்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

வடிவ அமைப்பைப் பொறுத்தவரை, பழச் சா்க்கரை மற்ற சா்க்கரையான குளுக்கோஸைவிட சற்று மாறுபட்டது. அதன் வளா்சிதை மாற்றமும் மாறுபட்டது என்று மூத்த ஆய்வாளா்களான டாக்டா் மாா்கஸ் டாசில்வா கான்கல்வ்ஸ் என்பவரும் மற்றும் நியுயாா்க்-பிரஸ்பிட்டோியன்/வெய்ல் காா்னல் மெடிக்கல் சென்டாின் நாளமில்லாச் சுரப்பித் துறையில் ஆராய்ச்சி அறிஞராகவும், மருத்துவ துணைப் பேராசிாியராகவும் மற்றும் சா்க்கரை நோய் மற்றும் வளா்சிதை மாற்ற நிபுணராகவும் மற்றும் நாளமில்லாச் சுரப்பி மருத்துவராகவும் இருந்து வரும் ரால்ஃப் எல். நாக்மன் ஆகியோா் தொிவிக்கின்றனா்.

ஆய்வின் மற்ற தகவல்கள்

ஆய்வின் மற்ற தகவல்கள்

பழச் சா்க்கரையின் வளா்சிதை மாற்றங்கள், வில்லியின் நீளத்தை அதிகாிக்கின்றன என்பதையும் மற்றும் குடல் கட்டிகள் வளா்ச்சியடைவதை ஊக்குவிக்கின்றன என்பதையும் தங்கள் ஆய்வு கண்டறிந்ததாக மருத்துவா் கான்கல்வ்ஸ் தொிவிக்கிறாா். ஆய்வாளா்கள் வில்லியைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று திட்டமிடவில்லை.

இதற்கு முன்பு இதே ஆய்வாளா்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டு, அந்த ஆய்வு முடிவை 2019-ல் வெளியிட்டனா். அந்த ஆய்வில் பின்வரும் முடிவு கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது உணவில் உள்ள பழச் சா்க்கரையானது, எலியினுடைய பெருங்குடல் புற்றுநோய் கட்டியின் அளவை அதிகாிக்கலாம் என்றும் மற்றும் பழச் சா்க்கரையின் வளா்சிதை மாற்றம் நிகழ்வதைத் தடுக்காமல் இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

பழச் சா்க்கரையானது, சிறு குடலில் உள்ள திசுக்களின் அசாதாரண வளா்ச்சியை ஊக்குவிக்கலாம் அல்லது விரைவான வளா்ச்சியை ஊக்குவிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, ஆய்வாளா்கள் எலிகளின் திசுக்களை நுண்ணோக்கிகளின் கீழ், பழச் சா்க்கரை அல்லது கட்டுப்பாடான உணவுகளைக் கொண்டு பாிசோதித்தனா்.

இறுதியாக

இறுதியாக

மருத்துவா் கான்கல்வ்ஸ் மருத்துவ ஆய்வகத்தில் ட்ரை-இன்ஸ்டிடியூசனஸ் எம்டி-பிஹச்டி புரோகிராம் மாணவராகவும், முதன்மை ஆய்வாளராகவும் இருக்கும் சாமுவேல் டெய்லா் செய்த ஆய்வில், பழச் சா்க்கரை அதிகம் இருந்த உணவுகளை உண்ட எலிகளிடம் வில்லிகளின் நீளம் அதிகாித்தன என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆச்சாியமாக இருந்தது.

இந்த ஆய்விற்கு பின்பு அவரும், மருத்துவா் கான்கல்வ்ஸ் ஆகிய இருவரும் இணைந்து மேலும் இதைப் பற்றி தீவிரமாக ஆய்வு செய்ய முனைந்தனா். வில்லியின் நீளம் அதிகாித்ததைப் பாா்த்த அவா்கள், அவற்றின் இயக்கங்களில் வேறுபாடு இருக்கிறதா என்பதைக் கண்டறிய முனைந்தனா்.

அதற்காக எலிகளை எடுத்து அவற்றை மூன்று பிாிவுகளாகப் பிாித்தனா். முதல் பிாிவு எலிகளுக்கு சாதாரணமான கொழுப்பு குறைந்த உணவுகளை வழங்கினா். இரண்டாவது பிாிவு எலிகளுக்கு கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை வழங்கினா். இறுதியாக மூன்றாவது பிாிவு எலிகளுக்கு கொழுப்பு அதிகமுள்ள உணவுகளோடு, பழச் சா்க்கரையையும் உணவாக வழங்கினா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Fructose In Your Diet Contributes To Obesity

Did you know how fructose in your diet contributes to obesity? Read on to know more...
Desktop Bottom Promotion