For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இமாலய ஃபரன்: எண்ணிலடங்கா மருத்துவ நன்மைகள் கொண்ட சிறப்பான மூலிகை!

எண்ணற்ற தாவரங்கள் இமயமலைப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன, அவை எளிதில் மற்ற இடங்களில் கிடைக்காது. அவற்றுள் ஒரு மூலிகை ஃபரன். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு மூலிகை.

|

இமயமலையின் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மூலிகைகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சிறப்பான பண்புகள் மற்றும் எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளன. எண்ணற்ற தாவரங்கள் இமயமலைப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன, அவை எளிதில் மற்ற இடங்களில் கிடைக்காது. அவற்றுள் ஒரு மூலிகை ஃபரன். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு மூலிகை. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மூலிகை உத்தரகண்ட் மாநிலத்தின் ஆல்பைன் புல்வெளிகளில் காணப்படுகின்றன.

MOST READ: 30 வயதிலும் தமன்னா சிக்கென்று இருக்க இந்த பழக்கம் தான் காரணமாம்.. தெரியுமா?

இது மலைப்பாங்கான பகுதிகளில் உணவின் சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் மருத்துவ குணங்களையும் உணவில் இணைக்கிறது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களால் இந்த மூலிகை அழைக்கப்படுகிறது. இந்த மூலிகை ஜூன்-ஜூலை மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பயிரிடப்படுகிறது. பின்னர் அவை உலர வைக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு மீதமுள்ள மாதங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

MOST READ: மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

உத்தரகண்ட் மக்கள் இந்த மூலிகையை மற்ற மசாலாப் பொருட்களுடன் சேர்த்து தங்கள் உணவில் சிறந்த சுவை மற்றும் அதிக ஆரோக்கியத்திற்காக பயன்படுத்துகிறார்கள். காய்கறிகள் முதல் கறிக்கூட்டு வரை எல்லாவற்றிலும் இந்த மூலிகையை சேர்த்து உணவின் ஆரோக்கியத்தையும் சுவையையும் அதிகரிக்க முடியும். நீரிழிவு நோய்க்கு உதவுவது முதல் பித்த கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பது, இரத்தத்தை சுத்திகரிப்பது வரை, இந்த மூலிகையில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதனை உட்கொள்பவர்கள் மட்டுமே அதன் பலனை முற்றிலும் அடைய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Himalayan Faran: A Special Herb With Umpteen Medicinal Benefits

There are innumerable exotic plants that are found only in the Himalayan region and aren’t easily available. One such herb is ‘Faran’ which is incredible in terms of health benefits.
Desktop Bottom Promotion