For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் உடலில் கொலஸ்ட்ரால் என்ன செய்கிறது என்று தெரியுமா?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு இரசாயன கூறு. இது அணுக்கள் கட்டமைப்பு மற்றும் ஹார்மோன் உற்பத்தி ஆகியவற்றிக்கு உதவுகிறது . குறிப்பிட்ட அளவைக் கடக்கும் போது கொலஸ்ட்ரால் உடலில் பாதிப்பை உண்டாக்குகிறது.

|

இளம் வயதினர், நடுத்தர வயத்தனர், வயது முதிர்ந்தவர்கள் என்று அனவைரும் கொலஸ்ட்ரால் பாதிப்பு குறித்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடலில் கொலஸ்ட்ரால் பாதிப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் ஒருபோதும் நமக்கு தென்படுவதில்லை. ஒட்டுமொத்த உடலையும் பாதித்த பிறகே இந்த பாதிப்பு உடலில் இருப்பது நமக்கு தெரிய வருகிறது.

Heres What Cholesterol Does To Your Body

ஆனால் நமது உடலின் சீரான வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு கொலஸ்ட்ரால் தேவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால் என்பது ஒரு இரசாயன கூறு. இது அணுக்கள் கட்டமைப்பு மற்றும் ஹார்மோன் உற்பத்தி ஆகியவற்றிக்கு உதவுகிறது.

MOST READ: இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க நம் முன்னோர்கள் சாப்பிட்டது இந்த நாட்டு உணவுகளை தான்...

கொலஸ்ட்ரால் குறிப்பிட்ட அளவைக் கடக்கும் போது உடலில் பாதிப்பை உண்டாக்குகிறது. இதய நோய்க்கான அபாயம், மாரடைப்பு , தமனி நோய் போன்றவை உயர் கொலஸ்ட்ரால் அளவு காரணமாக உண்டாகும் நோய்களாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயர் கொலஸ்ட்ரால் அளவு இதய நோய்களுக்கு காரணமா?

உயர் கொலஸ்ட்ரால் அளவு இதய நோய்களுக்கு காரணமா?

அதிக அளவு கொழுப்பு வாஸ்குலர் நோய்க்கு வழிவகுக்கிறது. உடலில் உள்ள சில இரத்த நாளங்களான கரோனரி தமனிகள் மற்றும் கரோடிட் தமனிகள் போன்றவற்றில் எளிதாக கொழுப்பு படிகிறது. தமனிகளில் அதிக கொழுப்பு படிவதால் இந்த இடங்களில் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. கரோனரி தமனியில் அடைப்பு இருந்தால் இது ஆஞ்சினா அல்லது மாரடைப்புக்கு வழிவகுக்கும் மற்றும் கரோடிட் தமனிகள் பாதிக்கப்படுவதால், இது நிலையற்ற இஸ்கிமிக் தாக்குதல் அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும் உயர் கொலஸ்ட்ரால் அளவு மட்டுமே இதயத் துடிப்பை பாதிப்பதில்லை. ஆனால் ஒருமுறை இது இதய தமனிகளை பாதித்து மாரடைப்பிற்கு வழிவகுத்தால் இதய துடிப்பு அதிகரித்த விகிதத்திலேயே இருக்கும்.

கொலஸ்ட்ரால் அளவு, இதய நோய்க்கான ஒரு சிறந்த அறிகுறியா?

கொலஸ்ட்ரால் அளவு, இதய நோய்க்கான ஒரு சிறந்த அறிகுறியா?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு அபாய காரணியாகும். ஆனால் வயது, பாலினம், நீரிழிவு, இரத்த அழுத்தம், புகைப்பழக்கம், புகையிலை பழக்கம், உட்கார்ந்தபடியே வேலை பார்க்கும் பழக்கம் போன்ற இதர ஆரோக்கிய கோளாறுகள் ஒரு பகுதி அபாயத்தைக் கொண்டுள்ளன.

உயர் கொலஸ்ட்ரால் என்பது தமனி அடைப்பைக் குறிக்குமா?

உயர் கொலஸ்ட்ரால் என்பது தமனி அடைப்பைக் குறிக்குமா?

ஆரோக்கியம் தொடர்பான கோளாறுகளை உடனடியாக குறித்த நேரத்தில் பரிசோதிக்க வேண்டும். உயர் கொலஸ்ட்ரால் அளவு, சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் தமனி அடைப்பு காலப்போக்கில் உருவாக்கக்கூடும். அதனால் இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும். ஆகவே இந்த நிலையைத் தடுக்க ஆரம்ப கட்டத்தில் இதனைத் தடுக்க வேண்டும்.

உயர் கொலஸ்ட்ரால் அளவிற்கான அறிகுறிகள் என்ன?

உயர் கொலஸ்ட்ரால் அளவிற்கான அறிகுறிகள் என்ன?

இரத்தத்தில் மிக அதிகமான கொழுப்பின் அளவு காரணமாக பெமிலியல் ஹோமோசைகஸ் ஹைப்பர் லிபிடெமியா ஏற்படலாம். இது ஒரு அரிய கோளாறு ஆகும். இந்த நிலையில் LDL கொலஸ்ட்ரால் அளவு 600 mg/d விட அதிகம் இருக்கும். வாழ்க்கையின் முதல் தசாப்தத்தில் தசைநாண்கள் மற்றும் கண்களில் கார்னியாவைச் சுற்றி லிப்பிட் படிவு இருக்கலாம். வாழ்க்கையின் முதல் அல்லது இரண்டாவது தசாப்தத்தில் நோயாளிகள் ஆஞ்சினா அல்லது மாரடைப்பால் பாதிக்கப்படலாம். ஹீட்டோரோசைகஸ் வகைகளில், தோல் மற்றும் கார்னியாவைச் சுற்றியுள்ள லிப்பிட் வைப்புக்கள் இளமைப் பருவத்தில் தோன்றுகின்றன. இந்த நிலையில் LDL கொழுப்பின் அளவு 250 mg/dl க்கு அதிகமாக இருக்கலாம்.

இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் தமனிகளில் கொழுப்பு படிவதால் இந்த அறிகுறிகள் குறிப்பாகத் தோன்றும். கரோனரி தமனிகள் பாதிக்கப்பட்டிருந்தால் ஆஞ்சினா அல்லது மாரடைப்பு உண்டாகலாம். கரோடிட் தமனிகளில் அடைப்பு இருந்தால் இஸ்கிமிக் பாதிப்பு அல்லது பக்கவாதம் உண்டாகலாம்.

கொலஸ்ட்ரால் அளவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்:

கொலஸ்ட்ரால் அளவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்:

உடலின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mg/dL-க்கு குறைவாக இருக்க வேண்டும். கெட்ட கொலஸ்ட்ரால் என்னும் LDL அளவு 100 mg/dL-க்கு குறைவாக இருக்க வேண்டும். HDL கொலஸ்ட்ரால் அளவு 40 mg/dL க்கு அதிகமாக இருக்க வேண்டும். கல்லீரலில் உள்ள நொதிகளால் கொலஸ்ட்ரால் முக்கியமாக ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த நொதிகள் எந்த அளவிற்கு செயல்பாட்டில் உள்ளது என்பதை மரபணு தீர்மானிக்கிறது. ஸ்டார்ட்டின் போன்ற மருந்துகள் உடலில் நொதிகள் ஒருங்கிணைப்பை தடுக்கிறது.

உயர் கொலஸ்ட்ராலுக்கான சிகிச்சை எவ்வாறு வழங்கப்படுகிறது?

உயர் கொலஸ்ட்ராலுக்கான சிகிச்சை எவ்வாறு வழங்கப்படுகிறது?

விலங்கு உணவுகளில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது. குறிப்பாக இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவை. எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும் . உடலில் கொலஸ்ட்ரால் ஒருங்கிணைப்பைத் தடுக்க ஸ்டார்ட்டின் போன்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Here's What Cholesterol Does To Your Body

Do you know what cholesterol does to your body? Read on to know more...
Desktop Bottom Promotion