For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பால் குடிக்கும் முன் மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...

பால் குடிப்பவர்கள், அந்த பாலைக் குடிக்கும் முன் ஒருசில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பால் குடிக்கும் முன் ஒருசில உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

|

நமது தினசரி உணவில் இடம் பெறும் ஒரு முக்கியமான உணவுப் பொருள் தான் பால். பாலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன்கள், ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக பாலில் 9 வகையான அமினோ அமிலங்களைக் கொண்ட புரோட்டீன் வளமான அளவில் நிரம்பியுள்ளன. இது வயதான காலத்தில் ஏற்படும் தசை இழப்பின் அபாயத்தைக் குறைத்து, தசைகளின் வளர்ச்சிக்கும், அதில் உள்ள காயங்களை சரிசெய்யவும் உதவுகிறது.

Do Not Eat These Foods Before Drinking Milk In Tamil

பெரும்பாலானோர் காபி, டீயை குடிக்காமல், வெறும் பாலை மட்டுமே குடிப்பார்கள். இப்படி பால் குடிப்பவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் தினமும் பாலை குடித்து வந்தால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தையும் எளிதில் பெற முடியும்.

ஆனால் பால் குடிப்பவர்கள், அந்த பாலைக் குடிக்கும் முன் ஒருசில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பால் குடிக்கும் முன் ஒருசில உணவுகளை உட்கொள்ளக்கூடாது. தெளிவாக கூற வேண்டுமானால், ஒருசில உணவுகளை உட்கொண்டதும் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடலுக்கு நன்மை விளைவிப்பதை விட தீங்கையே உண்டாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது எந்த உணவுகளை உண்ட பின் பால் குடிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி

சிட்ரஸ் பழங்கள் புளிப்புச் சுவையைக் கொண்டிருக்கும். இந்த சிட்ரஸ் பழங்களை பால் குடிக்கும் முன் சாப்பிடக்கூடாது. ஒருவேளை சாப்பிட்டால், குமட்டலை சந்திக்க நேரிடும். எனவே சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் 2 மணிநேரம் கழித்து, பால் குடியுங்கள். ஏனெனில் இந்த பழங்களை உட்கொண்டதும் பாலை குடித்தால், பாலில் உள்ள கால்சியம் பழங்களில் உள்ள நொதிகளால் உறிஞ்சப்பட்டு, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கப் பெறாமல் போகும். இது தவிர, இது செரிமானத்தை பாதித்து, அஜீரண கோளாறை உண்டாக்கும்.

உளுத்தம் பருப்பால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

உளுத்தம் பருப்பால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

உளுத்தம் பருப்பால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொண்டதும் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை செரிமான செயல்முறையை பாழாக்கும். மேலும் இவை இரண்டையும் அடுத்தடுத்து உட்கொள்ளும் போது, மிகுந்த அசௌகரியத்தை உணரக்கூடும். குறிப்பாக அடிவயிற்று வலி, வாந்தி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனையால் அவதிப்பட நேரிடும்.

வெண்டைக்காய், பாகற்காய்

வெண்டைக்காய், பாகற்காய்

வெண்டைக்காய் மற்றும் பாகற்காய் உணவுகளை உட்கொண்டதும் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை இந்த காய்கறிகளை உட்கொண்ட பின் பால் குடித்தால், அது முகத்தில் மற்றும் சருமத்தில் கரும்புள்ளிகளை உண்டாக்கும்.

முள்ளங்கி மற்றும் பெர்ரி பழங்கள்

முள்ளங்கி மற்றும் பெர்ரி பழங்கள்

நீங்கள் முள்ளங்கி சாம்பார் மற்றும் பெர்ரி பழங்களை சாப்பிட்டிருந்தால், உடனே பால் குடித்துவிடாதீர்கள். ஏனெனில் இந்த இரண்டையும் உட்கொண்டதும் பால் குடித்தால், அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக இப்படி செய்தால், சரும அரிப்புகள் மற்றும் சரும சுருக்கங்கள் போன்ற சருமம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

மீன்

மீன்

அடிக்கடி உணவில் மீன் சேர்ப்பது மிகவும் நல்லது. முக்கியமாக மீனை அடிக்கடி சாப்பிடும் போது, சருமமும், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இந்த மீன் சாப்பிட்டதும் பால் குடிக்கக்கூடாது. இவ்வாறு குடிக்கும் போது, அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீரழித்து, ஃபுட் பாய்சன், அடிவயிற்று வலி மற்றும் சருமத்தில் வெள்ளைப்புள்ளிகள் போன்றவற்றை ஏற்படுத்தும். ஏனெனில் மீனானது வெப்ப விளைவைக் கொண்டது. பால் குளிர்ச்சியான விளைவைக் கொண்டது. இவை இரண்டும் அடுத்தடுத்து உடலினுள் செல்லும் போது, உடலில் ஒருவித சமநிலையின்மையை உருவாக்கி, உடலினுள் பிரச்சனையை உண்டாக்கும். எனவே இந்த தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Should Never Eat Before Drinking Milk In Tamil

Here are some foods that you should not eat before drinking milk. Read on to know more...
Desktop Bottom Promotion