For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவால தான் இருமல் வருதுன்னு எப்படி தெரிஞ்சுக்குறது? அப்ப இத படிங்க...

ஆரம்ப காலத்தில் கொரோனா வைரஸின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்றவை கூறப்பட்டன. பின் தினந்தோறும் ஒவ்வொரு அறிகுறிகளாக கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது ஒரு பெரிய பட்டியலே உள்ளன.

|

தற்போது எங்கும், எப்போதும் கொரோனா பற்றிய பேச்சாகத் தான் உள்ளது. அந்த அளவில் கொரோனா வைரஸ் உலகை கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த கொடிய கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணி விஞ்ஞானிகளால் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Coronavirus Symptoms: Can You Actually Recognise A COVID Cough?

அதோடு நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பற்றிய புதிய தகவல்களும் வெளிவந்தவாறு உள்ளன. இன்னும் விஞ்ஞானிகளால் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்கு முக்கியமாக காரணம், ஆரம்பத்தில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது மாற்றமடைந்திருப்பது மற்றும் இந்த வைரஸ் குறித்து முழுமையாக தெரியாமல் இருப்பதும் தான்.

MOST READ : சமீப காலமாக கொரோனாவால் நிறைய பேர் இறப்பதற்கு இதுதான் காரணமாம்! - உஷாரா இருங்க...

ஆரம்ப காலத்தில் கொரோனா வைரஸின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்றவை கூறப்பட்டன. பின் தினந்தோறும் ஒவ்வொரு அறிகுறிகளாக கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது ஒரு பெரிய பட்டியலே உள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸின் முக்கியமான ஆரம்ப அறிகுறியாக இருமல் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவாச வைரஸ்

சுவாச வைரஸ்

கோவிட் 19 என்னும் SARS-COV-2 ஒரு சுவாச வைரஸ் ஆகும், இது வெவ்வேறு நபர்களை வித்தியாசமாக தாக்குகிறது. இருந்தாலும் இந்த வைரஸ் தாக்கத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு ஆரம்ப கால முதன்மையான அறிகுறியாக வறட்டு இருமல் என்னும் பிரபலமற்ற கோவிட் இருமல் கூறப்படுகிறது.

ஏன் இருமல் கூறப்படுகிறது?

ஏன் இருமல் கூறப்படுகிறது?

இருமல் என்பது எரிச்சலூட்டிளை வெளியேற்றுவதற்கான உடலின் ஒரு இயற்கை வழிமுறையாகும். ஒரு சாதாரண இருமலை கோவிட் இருமலில் இருந்து வேறுபடுத்துவதன் மூலம் சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 80% மக்கள் லேசான அறிகுறிகளான இருமல், சற்று அதிகமாக காய்ச்சல், தலைவலி அல்லது மூச்சுத் திணறல் போன்றவற்றை சந்திப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சுமார் 20% மக்கள் தான் கடுமையான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுகின்றனர். எனவே, லேசானது முதல் மிதமான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கவனத்தைச் செலுத்துவதன் மூலம் சிக்கல்களைத் தடுக்கலாம் மற்றும் நோய்த்தொற்றில் இருந்து வேகமாக குணமடைய உதவும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், அனைத்து லேசான அறிகுறிகளிலும், கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்ட பெரும்பாலானோருக்கு ஆரம்ப நாட்களில் கரடுமுரடான, வறட்டு இருமல் ஒரு முக்கிய அறிகுறியாக பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா இருமலை கண்டறிவது எப்படி?

கொரோனா இருமலை கண்டறிவது எப்படி?

பொதுவாக வறட்டு இருமல் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகளில் வகைப்படுத்தப்படும் போது, இது கொரோனாவுக்கு தனித்துவமானது அல்ல. வறட்டு இருமல் என்பது கபம் அல்லது சளி இல்லாமல் வருவது. இது உடலில் எவ்விதமான சளியையும் உற்பத்தி செய்யாததால், இது ஒரு 'உற்பத்தி செய்யாத' இருமலாக கருதப்படுகிறது.

வறட்டு இருமல் தொண்டையின் பின்புறத்தில் ஒரு நிலையான கூச்சத்தைப் போல உணர்கிறது. இதுவே இருமலைத் தூண்டிவிடுகிறது மற்றும் பேசும் போது தொண்டையில் கரகரப்பை உருவாக்கி, ஒருவித ஒலியை வரச்செய்கிறது. அதோடு வறட்டு இருமல் ஒருவருக்கு தொந்தரவையும், கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாகவும் இருக்கும். ஆனால் இத்தகைய வறட்டு இருமல் சில வகை அழற்சி மற்றும் தொற்றுக்களான மூச்சுக்குழாய் அழற்சி அல்லது ஜலதோஷம் போன்றவற்றாலும் ஏற்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

கொரோனா ஏன் வறட்டு இருமலை உண்டாக்குகிறது?

கொரோனா ஏன் வறட்டு இருமலை உண்டாக்குகிறது?

பெரும்பாலான கோவிட்-19 அறிகுறிகளானது அழற்சி மற்றும் நுரையீரலைத் தாக்கும் வைரஸ் உண்டாக்கும் சுவாச அறிகுறிகளாகும். SARS-COV-2 வைரஸ் சுவாச பாதையின் மேல் பகுதியில் உள்ள காற்றுப்பைகளில் பெருக்கமடைந்து தடையை உண்டாக்குவதால், இது நுரையீரலில் உள்ள திசுக்கள் மற்றும் சுவர் பகுதிகளில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இது நிகழும் போது, இருமல் உண்டாகிறது. அதிலும் கொரோனாவால் வறட்டு இருமல் ஏற்படுவதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். அதேப்போல் சளியுடனான இருமலையும் ஒருசில கொரோனா நோயாளிகள் சந்தித்துள்ளனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

தற்போது மழைக்காலம் என்பதால் பலரும் இருமல் அல்லது காய்ச்சல் வந்தால், அதை பருவ மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்து விட்டுவிடுவர். ஆனால் தற்போதைய சூழ்நிலை வேறு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒரு வாரத்திற்கும் அதிகமாக இருமல் இருந்தால், அவர் மருத்துவரை அணுக வேண்டும். அதிலும் இருமலுடன், காய்ச்சல், வயிற்றுப் போக்கு, சுவாசிப்பதில் சிரமம், தலை வலி, நெஞ்சு வலி போன்றவற்றை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்

எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்

உங்களுக்கு ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளான சுவாச பிரச்சனைகள் அல்லது குறைவான நோயெதிர்ப்பு சக்தி இருந்தால், அவர்கள் மருத்துவர்கள் அறிவுறுத்திய மருந்துகளை தவறாமல் எடுத்து வர வேண்டும். மேலும் தங்களின் ஆரோக்கிய நிலை சரியாக உள்ளதா என்பதை தொடர்ந்து கவனித்து வர வேண்டும்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கியும் சிலர் அறிகுறிகள் எதுவும் தெரியாமல் இருப்பதால், அத்தகையவர்கள் உடல் பிரச்சனையையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே கவனித்து மருத்துவரை அணுகி ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம்.

அறிகுறிகளைக் குறைக்க ஏதேனும் தீர்வுகள் உள்ளதா?

அறிகுறிகளைக் குறைக்க ஏதேனும் தீர்வுகள் உள்ளதா?

தற்போது கோவிட்-19-க்கு அல்லது அதற்கான அறிகுறிகளில் இருந்து விடுபட அங்கீகரிக்கப்பட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஓய்வு மற்றும் மீட்பு மட்டுமே இந்த தொற்றை எதிர்த்துப் போராட உதவும். இருப்பினும் சில வீட்டு வைத்தியங்கள் மற்றும் மாற்று சிகிச்சைகள் மூலம் வறட்டு இருமல் அல்லது தொண்டைப் புண் ஆகியவற்றில் இருந்து ஓரளவு நிவாரணம் பெறலாம்.

குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளிப்பது, இஞ்சி கசாயம், நீர் அதிகம் குடிப்பது அல்லது அதிமதுர வேர் போன்ற ஆயுர்வேத மூலிகைகள் உதவக்கூடும். அதோடு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் கசாயம் மற்றும் மூலிகை டீக்களைக் குடிப்பது போன்றவை விரைவில் குணமடைய உதவலாம். ஆனால் எந்த ஒரு அறிகுறியை சந்தித்தாலும், ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முடிவு

முடிவு

வீட்டில் தனிமையில் இருப்பது, போதுமான ஓய்வைப் பெறுவது, மாஸ்க் அணிவது, மேற்பரப்புக்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்வது, பொருட்களை பகிர்ந்து கொள்வதைத் தவிர்ப்பது, மிக முக்கியமாக கைகளை அவ்வப்போது சுத்தப்படுத்துவது போன்றவற்றை ஒருவர் மேற்கொள்வதே தற்போது நோய்த்தொற்றில் இருந்து விரைவில் நிவாரணம் பெறுவதற்கான சிறந்த வழி ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Symptoms: Can You Actually Recognise A COVID Cough?

Studies conducted in the recent months suggested that of all mild symptoms, most people diagnosed with COVID-19 recorded a hoarse, dry cough as a prominent symptom in the early days of infection.
Desktop Bottom Promotion