For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் எந்த பொருளில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்-ன்னு தெரியுமா?

|

தற்போது கொரோனா வைரஸ் உலகில் பல பகுதிகளில் பரவி பலரது உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் இந்த கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்புடன் இருக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸ் குறித்த பல ஆய்வுகளும் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

என்ன தான் கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியாக மக்களிடையே பரவி வந்தாலும், இந்த கொடிய வைரஸ் மேற்பரப்புக்கள் மற்றும் தூசுப்படலங்களில் பல மணிநேரம் முதல் பல நாட்கள் வரை உயிருடன் இருப்பதால் புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

MOST READ: A வகை இரத்தப்பிரிவினரை அதிகம் குறி வைக்கும் கொரோனா வைரஸ்... O பிரிவினரை நெருங்காதாம்.. உண்மை என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசனில் வெளியிடப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸ் மக்களிடையே காற்றின் மூலுமாகவும், அசுத்தமான பொருட்களைத் தொட்ட பின்னரும் பரவலாம் என்பது தெரிய வந்துள்ளது.

MOST READ: கொரோனா வைரஸிற்கான முதல் தடுப்பூசி பரிசோதனையை தொடங்கியது அமெரிக்கா..!

வைரஸின் ஆயுட்காலம்

வைரஸின் ஆயுட்காலம்

கொடிய கொரோனா வைரஸ் தூசுப்படலங்களில் மூன்று மணி நேரம் வரையும், தாமிரம்/காப்பரில் நான்கு மணி நேரம் வரையும், அட்டைப்பெட்டியில் 24 மணி நேரம் வரையும், பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்/எஃகு பொருட்களின் மீது இரண்டு முதல் மூன்று நாட்கள் வரையும் உயிருடன் இருக்கக்கூடியது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

MOST READ: கொரோனா வைரஸ் உடலின் எந்த உறுப்புக்களை பாதித்து உயிரைப் பறிக்கிறது தெரியுமா?

ஆய்வின் இணைஆசிரியர் கூற்று..

ஆய்வின் இணைஆசிரியர் கூற்று..

"கொரோனா வைரஸ் பெரும்பாலும் சாதாரண தொடர்பு மூலம் பரவக்கூடியது, இந்த நோய்க்கிருமியைக் கொண்டிருப்பது என்பது மிகவும் கடினமானது" என்று ஆய்வின் இணை ஆசிரியரும் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியலின் யு.சி.எல்.ஏ பேராசிரியருமான ஜேம்ஸ் லாயிட்-ஸ்மித் கூறினார்.

MOST READ: 40 வயதிற்கு மேலானவர்களை அதிகம் குறி வைக்கும் கொரோனா வைரஸ்.. ஏன்? அதைத் தடுப்பது எப்படி?

கைகளைக் கழுவவும்

கைகளைக் கழுவவும்

மேலும் மற்றவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய பொருட்களை நீங்கள் தொட்டு பயன்படுத்துவதாக இருந்தால், முகம், வாய், மூக்கு பகுதியைத் தொடுவதற்கு முன் மற்றும் உணவுகளை உண்ணும் முன் மறக்காமல் கைகளை சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி கழுவுங்கள் என்று ஸ்மித் கூறினார்.

MOST READ: கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்புடன் இருக்க சீனர்கள் குடிக்கும் மூலிகை சூப்!

ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?

ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?

உதாரணமாக, இருமல் அல்லது தொடு பொருள்களின் மூலம் பாதிக்கப்பட்ட நபரால் கொரோனா வைரஸ் வீடு அல்லது மருத்துவமனையின் அன்றாட மேற்பரப்பில் வைக்கப்படுவதை இந்த ஆய்வு முயற்சித்தது. பின்னர் இந்த மேற்பரப்புகளில் வைரஸ் எவ்வளவு காலம் உயிருடன் இருந்தது என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

MOST READ: வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த உலகின் மிகவும் கொடூரமான தொற்றுநோய் எது தெரியுமா?

ஆய்வின் ஆசிரியர்கள்

ஆய்வின் ஆசிரியர்கள்

இந்த ஆய்வில் யு.சி.எல்.ஏ, தேசிய சுகாதார நிறுவனம், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக இருந்தனர். மேலும் இதில் லாயிட்-ஸ்மித்தின் ஆய்வகத்தில் உள்ள யு.சி.எல்.ஏ போஸ்ட்டாக்டோரல் ஆராய்ச்சியாளரான அமண்டின் கேம்பிள் அவர்களும் அடங்குவார்.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காம இருக்கணுமா? அப்ப நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதெல்லாம் சாப்பிடுங்க...

லாயிட்-ஸ்மித் கூற்று...

லாயிட்-ஸ்மித் கூற்று...

பிப்ரவரியில், லாயிட்-ஸ்மித் மற்றும் உடன் பணிபுரிவர்கள் ஈ லைஃப் இதழில் COVID-19-க்கான பயணிகளைத் திரையிடுவது மிகவும் பயனுள்ளதாக இல்லை என்று தெரிவித்தனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக SARS-CoV-2 என பெயரிடப்பட்டவர்கள். இவர்களுக்கு இந்த வைரஸ் இருப்பதை அறியாமலோ அல்லது அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவோ பரவி இருக்கலாம்.

லாயிட்-ஸ்மித், வைரஸின் உயிரியல் மற்றும் தொற்றுநோயியல் நோய்த்தொற்றை அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறிவது மிகவும் கடினம் என்று கூறினார். ஏனெனில் பெரும்பாலான கொரோனா வைரஸ் வழக்குகள் ஐந்து நாட்கள் அல்லது அதற்குப் பிறகும் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Coronavirus Can Remain Infectious For Days On Surfaces: Study

A study said that people may acquire the novel coronavirus through the air and after touching contaminated objects.