For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களால் புஷ்-அப் செய்ய முடியலையா? அப்ப அதுக்கு காரணம் இதுதாங்க...

தண்டால் உடற்பயிற்சி நமது உடலுக்கு ஏராளமான நன்மைகளைத் தருவதோடு, நமது உடலை செதுக்கி நம்மை திடகாத்திரமாக வைத்திருக்கிறது. ஆனால் நாம் தொடர்ந்து தண்டால் செய்து வந்தாலும், சில நேரங்களில் ஆர்வம் குறைகிறது அல்லது வேறுசில பிரச்சினைகள் ஏற்படுகிறது.

|

ஒரு சிலர் எந்தவித சிரமமின்றி மிக எளிதாக தண்டால் (புஷ்அப்) எடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம். தண்டால் உடற்பயிற்சி நமது உடலுக்கு ஏராளமான நன்மைகளைத் தருவதோடு, நமது உடலை செதுக்கி நம்மை திடகாத்திரமாக வைத்திருக்கிறது. ஆனால் நாம் தொடர்ந்து தண்டால் பயற்சி செய்து வந்தாலும், சில நேரங்களில் அதில் ஒரு தொய்வு ஏற்படுகிறது அல்லது அதில் ஆர்வம் குறைகிறது அல்லது வேறுசில பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

Cant Do Push-ups? Here Are The 6 Culprits

அதனால் ஒரு சிலர் தண்டால் எடுப்பதை நிறுத்திவிடுகின்றனர். ஆகவே இவ்வாறான தொய்விற்கும் ஆர்வக் குறைவுக்கும் காரணமாக இருக்கும் 6 முக்கிய காரணிகளை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்டால் எடுப்பதற்கு தகுந்த வார்ம்அப் செய்யாமல் இருப்பது

தண்டால் எடுப்பதற்கு தகுந்த வார்ம்அப் செய்யாமல் இருப்பது

உடற்பயிற்சி செய்வதற்குமுன் அதற்கான வார்ம்அப் மிகவும் முக்கியமானதாகும். நாம் செய்யும் வார்ம்அப் இறுகிப்போன நமது தசைகளைத் தளர்த்தி மிக எளிதாக உடற்பயிற்சிகளைச் செய்ய உதவுகிறது. அதோடு நமது உடலை நெகிழ்வாக்கி, கடுமையான உடற்பயிற்சிகளையும் மிக எளிதாகச் செய்வதற்கு நமது உடலைத் தயார் செய்கிறது. ஆகவே முன் தயாரிப்பு இல்லாமல் தண்டால் போன்ற கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்தால், நாளடைவில் தண்டால் எடுப்பதில் பிரச்சினைகள் ஏற்படும். எனவே தண்டால் எடுப்பதற்கு முன்பாக 10 முதல் 20 நிமிடங்கள் வரை முன்தயாரிப்பு செய்வது நல்லது.

ஊட்டச்சத்து குறைவான உணவுகள்

ஊட்டச்சத்து குறைவான உணவுகள்

எரிபொருள் இல்லாமல் ஒரு கார் இயங்காது. அதுபோல் தகுந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் இல்லாமல் நமது உடல் நல்முறையில் இயங்காது. ஆகவே பலவீனமான தசைகளை வைத்துக் கொண்டு தண்டால் எடுத்தால் அது தசைகளில் மேலும் காயங்களை ஏற்படுத்தும். ஆகவே புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டு நமது தசைகளை வலுவாக வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் நன்றாக தண்டால் எடுப்பதைத் தொடரலாம்.

​பளு தூக்குவதைத் தவிர்த்து வருதல்

​பளு தூக்குவதைத் தவிர்த்து வருதல்

பளு தூக்குவது நமது தசைகளை வலுவாக்கி நமது உடல் சிறப்பாக இயங்குவதற்கு உதவி செய்கிறது. மேலும் தசைகளில் காயங்கள் ஏற்படுவதையும் பளு தூக்குதல் தடுக்கிறது. ஆகவே தண்டால் எடுப்பதற்கு முன்பாக நடைப்பயிற்சியில் ஈடுபடுவது மற்றும் பளுதூக்குவது போன்றவற்றின் மூலம் கால்கள், முதுகு மற்றும் தோள்கள் போன்றவற்றிற்கு வார்ம்அப் செய்வது நல்லது.

மிகுதியான உடற்களைப்பு

மிகுதியான உடற்களைப்பு

நமது தசைகள் களைப்பாக இருக்கும் போது எளிதாக தண்டால் செய்ய முடியாது. ஆகவே தொடர் உடற்பயிற்சிகளுக்கு நடுவே அவ்வப்போது விடுமுறை கொடுக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் நமது உடற்பயிற்சிகளுக்கு விடுமுறை கொடுத்தால், தொடர்ந்து புத்துணர்வுடன் உடற்பயிற்சி செய்ய முடியும்.

தவறான நிலையில் உடலை வைத்திருத்தல்

தவறான நிலையில் உடலை வைத்திருத்தல்

உடலை சரியான நிலையில் வைத்துக் கொண்டு உடற்பயிற்சிகளைச் செய்தால்தான் அது நல்ல பலனைத் தரும். நாம் எவ்வளவு பளு தூக்குகிறோம் அல்லது எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறோம் என்பது முக்கியமல்ல. மாறாக நமது உடலை சரியான நிலையில் வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தவறான நிலையில் உடலை வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்தால், நாம் செய்யும் உடற்பயிற்கள் நல்ல பலனைத் தராது. மேலும் அது உடலில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

தவறான உடல் நிலை மற்றும் தவறான உடற்பயிற்சி

தவறான உடல் நிலை மற்றும் தவறான உடற்பயிற்சி

உடலைச் சரியான நிலையில் வைத்துக் கொண்டு, சரியான முறையில் உடற்பயிற்சிகளைச் செய்வதுதான், உடற்பயிற்சியின் மிக முக்கியமான காரணிகள் ஆகும். ஆகவே தண்டால் எடுக்கும் போது நமது உள்ளங்கைகளை தரையில் சரியாக ஊன்றி வைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தோள்களுக்கிடையே சரியான இடைவெளியை வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது உடலின் நடுப்பகுதியை நேராக வைத்துக் கொண்டு தண்டால் எடுக்க வேண்டும். அவ்வாறு உடலை சரியான நிலையில் வைத்துக் கொண்டு சரியான முறையில் தண்டால் எடுக்கும் போது அது நல்ல பலனைத் தரும்.

தவறான சுவாசப் பழக்கம்

தவறான சுவாசப் பழக்கம்

உடற்பயிற்சி செய்யும் போது நாம் எவ்வாறு சுவாசிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. நாம் சரியாக சுவாசித்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யும் போது அதன் பலன் நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக இருக்கும். அதாவது சரியாக சுவாசித்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யும் போது அது நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. அவ்வாறு அதிகரிக்கும் ஆக்ஸிஜன், உடலில் உள்ள கலோரிகளை எரித்து, இதய துடிப்பை சீராக்குகிறது. மேலும் இரத்த ஓட்டத்தில் அதிகமாக ஆக்ஸிஜன் சேரும் போது, அது உடல் இயக்கத்திற்கு தேவையன அதிகமான சக்தியைத் தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can't Do Push-ups? Here Are The 6 Culprits

If you are unable to do push-ups despite practicing them regularly, here are six problems that may be hindering your push-ups.
Desktop Bottom Promotion