For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலர் திராட்சையை தயிரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

குடலில் உள்ள நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய ஓர் அற்புதமான வீட்டு வைத்தியம் ஒன்று உள்ளது. அது தான் உலர் திராட்சையை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது.

|

ஒருவரது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நல்ல செரிமானத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியம், பாலியல் செயல்பாடு, ஆற்றல் அளவுகள் மற்றும் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. குடல் ஆரோக்கியம் சிறப்பாக இல்லாத போது, அது ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்துவதோடு, மனநிலையை எதிர்மறையாக பாதிக்கும். சொல்லப்போனால் நாள்பட்ட மற்றும் தன்னுடல் தாக்க நோய்கள் குடலில் உள்ள நுண்ணுயிர் ஏற்றத்தாழ்வுடன் இணைக்கப்பட்டுள்ளன.

​Benefits Of Having Curd With Raisins

உடலுழைப்பு இல்லாமை, உண்ணும் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கம் போன்ற பல விஷயங்கள் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவெனில், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்டால் இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் குடலில் உள்ள நுண்ணுயிர் விரைவாக மாறிவிடும். அப்படி குடலில் உள்ள நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய ஓர் அற்புதமான வீட்டு வைத்தியம் ஒன்று உள்ளது. அது தான் உலர் திராட்சையை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது. இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலர் திராட்சை மற்றும் தயிர்

உலர் திராட்சை மற்றும் தயிர்

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு குடல் பாக்டீரியாவை அதிகரிப்பது என்பது மிகவும் முக்கியம். குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க நல்ல பாக்டீரியாக்களான புரோபயோடிக்குகள் நிறைந்த உணவுகளான தயிர் மற்றும் யோகர்ட் போன்றவற்றை சாப்பிடுவதே சிறந்த வழி.

இது தவிர தயிர் மற்றும் உலர் திராட்சையை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதில் தயிர் ஒரு புரோபயோடிக் போன்றும், உலர் திராட்சையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து ப்ரீபயோடிக் போன்றும் செயல்படுகிறது. இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் என்னவென்பதைக் காண்போம்.

கெட்ட பாக்டீரியாவை அழிக்கும்

கெட்ட பாக்டீரியாவை அழிக்கும்

தயிருடன் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடும் போது, செரிமான மண்டலத்தில் இடையூறை உண்டாக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படும். அதோடு கெட்ட பாக்டீரியாக்கள் தான் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் காரணமும் கூட.

நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்

நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்

தயிருடன் உலர் திலாட்சையை சேர்த்து சாப்பிடும் போது, அது குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி, உள்ளுறுப்புக்களை சீராக செயல்பட வைக்கும்.

குடல் அழற்சியைக் குறைக்கும்

குடல் அழற்சியைக் குறைக்கும்

அதிக கொழுப்புள்ள மற்றும் காரமான உணவுகளை உண்பது பெரும்பாலும் குடலின் சுவர் பகுதியில் அழற்சியை ஏற்படுத்தும். உலர் திராட்சையை தயிருடன் சேர்த்து சாப்பிடும் போது, குடலில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவிபுரியும்.

ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகள்

ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகள்

குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அது வாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், மதியம் உணவு உண்ட பின் தயிரில் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடுங்கள்.

எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு நல்லது

எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு நல்லது

உலர் திராட்சை மற்றும் தயிர் இரண்டிலுமே கால்சியம் அதிகளவில் உள்ளது. இந்த ஊட்டச்சத்து எலும்புகளை வலுவாக்கவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவி புரியும்.

பிற நன்மைகள்

பிற நன்மைகள்

இது தவிர, தயிர் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கவும், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. அதோ மலச்சிக்கலை சந்திப்பவர்கள் உலர் திராட்சையை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

எப்படி தயாரிப்பது?

எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

* வெதுவெதுப்பான பால் - ஒரு பௌல்

* கருப்பு உலர் திராட்சை - சிறிது

* தயிர் அல்லது மோர் - அரை டீபூன்

செய்முறை:

ஒரு பௌல் வெதுவெதுப்பான பாலில் 4-5 உலர் திராட்சையைப் போட்டு, அதில் அரை டீபூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து குறைந்தது 8-12 மணிநேரம் ஊற வைக்கவும். அதன்பின் இதை சாப்பிடவும்.

தயிருடன் வேறு எதை சாப்பிடலாம்?

தயிருடன் வேறு எதை சாப்பிடலாம்?

உலர் திராட்சை ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. நீங்கள் கருத்தரிக்க விரும்புபவராக இருந்தால், உலர் திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

​Benefits Of Having Curd With Raisins

The combination of curd and raisins works on your gut in two ways. Curd acts as a probiotic and raisins with their high content of soluble fibre works as a prebiotic.
Story first published: Monday, January 18, 2021, 17:14 [IST]
Desktop Bottom Promotion