Latest Updates
-
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது!
கொழுக்கட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Ganesh Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது. விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் பிறந்தநாள். இந்நன்னாளில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, மோதகம், லட்டு போன்ற பலகாரங்களை செய்து பிள்ளையாருக்கு படைத்து வழிபடுவோம்.
கொழுக்கட்டையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கார கொழுக்கட்டை மற்றொன்று இனிப்பு கொழுக்கட்டை. இதில் இனிப்பு கொழுக்கட்டையைத் தான் நிறைய பேர் விரும்பி சாப்பிடுவர். இந்த இனிப்பு கொழுக்கட்டையானது அரிசி மாவு, வெல்லம், தேங்காய், பருப்பு, நெய், ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று பாரம்பரியமாக செய்யப்படும் கொழுக்கட்டை ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியது என்பது தெரியுமா? ஆம், கொழுக்கட்டையில் புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகள், டயட்டரி நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. கொழுக்கட்டையை உட்கொண்டால், அதில் உள்ள உட்பொருட்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். இப்போது இனிப்பு கொழுக்கட்டையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
எந்த கொழுக்கட்டை சிறந்தது ஏன்?
கொழுக்கட்டைகளை வேக வைத்தோ அல்லது எண்ணெயில் போட்டு பொரித்தோ செய்யலாம். ஆனால் இவற்றில் வேக வைத்து தயாரிக்கப்படும் கொழுக்கட்டைகளே சத்தானது. ஏனெனில் ஆவியில் வேக வைக்கும் போது, அதில் உள்ள சத்துக்கள் அப்படியே தக்க வைக்கப்படுகின்றன. மேலும் ஆவியில் வேக வைக்கும் கொழுக்கட்டை சாப்பிடுவதற்கு மென்மையாக இருப்பதோடு, எளிதில் செரிமானமாகி, அதில் உள்ள சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும்.
நல்ல சுவையான இனிப்பு கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
வெளிப்புறத்திற்கு...
* கொழுக்கட்டை மாவு - 1 கப்
* எண்ணெய் - சிறிது
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
உள்ளே வைப்பதற்கு...
* வெல்லம் - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* குங்குமப்பூ - சிறிது
* ஏலக்காய் - சிறிது
கொழுக்கட்டை மாவு
கொழுக்கட்டை மாவு என்பது பச்சரிசி மாவு. இதில் மக்னீசியம் அதிகம் உள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் இது இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது மற்றும் இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. அதோடு இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருந்து, பசியுணர்வைக் குறைக்கிறது.
தேங்காய்
தேங்காய் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு உணவுப் பொருள். இது அசிடிட்டியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் இதயத்தை வலுப்படுத்துகிறது. கொழுக்கட்டை செய்யும் போது தேங்காயை சேர்ப்பதால், அது மன அழுத்தத்தை நீக்கி, செரிமான மண்டலத்திற்கு ஒருவித குளிர்ச்சியை அளிக்கிறது. அதோடு இது நச்சு நீக்கும் செயல்முறையை அதிகரிக்கிறது மற்றும் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
வெல்லம்
கொழுக்கட்டையில் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை சேர்ப்பது நல்லது. ஏனெனில் வெல்லத்தில் தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க், செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முக்கியமாக வெல்லம் குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலைத் தடுக்கும்.
நெய்
கொழுக்கட்டையில் நெய் சேர்க்கும் போது, அது அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. முக்கியமாக நெய் குடல் சுவரில் உள்ள காயங்களை குணப்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு ஊட்டமளிக்கிறது. முக்கியமாக இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
பாசிப்பருப்பு
பாசிப்பருப்பில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. அதோடு கொழுப்புக்கள் இழப்பதை ஊக்குவிக்கிறது மற்றும் இதய நோயைத் தடுக்கிறது.
இப்படி கொழுக்கட்டை செய்ய பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிப்பதால், இந்த விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை சாப்பிட யோசிக்காதீர்கள். ஆனால் எதையும் அளவாக சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
