Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சூடான நீரில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா..?
கோடை காலத்தில், சூரியன் சுட்டெரிக்கும் நாட்களில், சூடான குளியலா என்று நீங்கள் அதிர்ச்சியடையலாம். ஆனால், எல்லா காலத்திலும் சூடான நீரில் குளிப்பது உங்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும். குறிப்பாக, நீங்கள் நாள் முழுவதும் பிசியாக இருந்து, உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாமல் இருந்தால், சூடான நீரில் குளிப்பது மிகவும் அவசியமான ஒன்று. சூடான நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
நீங்கள் நன்றாக தூங்க உதவுகிறது : சூடான நீர் உங்கள் உடலை ரிலாக்ஸ் செய்கிறது. உங்களின் தசைகளை தளர்த்தி, உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது. உடலையும் மனதையும் அமைதிப்படுத்தி, நீங்கள் நன்றாக உறங்குவதற்கு தயார் செய்கிறது. உங்களுக்குத் தேவை, 20 நிமிட சூடான குளியல் மட்டுமே.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது : சூடான குளியல், உடலின் ஒவ்வொரு தசையையும் தளர்த்தி, நரம்புகளை விரிவுபடுத்தி, இதயம் முதல் அனைத்து பாகங்கள் மீதும், அழுத்தத்தை ஏற்படுத்தி, இதயத்துடிப்பை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது : நடப்பது அல்லது எந்த விதமான உடற்பயிற்சியும், உங்கள் உடலின் சர்க்கரை அளவைக் குறைக்கக் உதவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அனால், உங்களுக்கு நேரமில்லை என்னும் போது, சூடான நீரில் குளித்தால் போதும். உங்கள் சர்க்கரை அளவைக் குறைத்து, கலோரிகளையும் எரிக்க உதவும்.
கலோரிகளை கரைக்க உதவும் : லோபொரோஹ் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், ஒரு மணிநேரத்துக்கு சூடான நீரில் குளித்த 14 ஆண்கள், அரை மணி நேர நடைபயிற்சியில் எரிக்கக் கூடிய 140 கலோரிக்களை எரித்துள்ளார்கள் என்று கண்டறியப்பட்டது.
ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது : சூடான நீரில் குளிப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதய ரீதியான பாதிப்புகள் இருப்பவர்கள் கூட, சூடான குளியலால் பயன்பெறலாம். ஆனால், உங்களுக்கு தீவிரமான இதய பாதிப்பு இருந்தால், மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. சில நேரங்களில், சூடான நீரில் குளிப்பது, உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கும்.
உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது : சூடான நீரில் குளிப்பதால் ஏற்படும் மிகப்பெரிய நன்மை, உங்கள் சருமம் ஈரப்பசையோடு நீடித்திருக்கும். நீண்ட நேரம் தண்ணீரில் இருந்தால், சருமத்தில் சுருக்கம் உண்டாவதை கவனித்திருக்கிறீர்களா? அதற்குக் காரணம், வெப்பமான தண்ணீர் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரித்து, வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது.
தலைவலியைக் குறைக்கிறது : தலையில் இருக்கும் ரத்த நாளங்கள் சுருங்குவதால், தலைவலி ஏற்படும். சூடான நீரில் குளிப்பது, ரத்த நாளங்களில் விரிவுபடுத்தி, தலைவலிக்கு உடனடி நிவாரணம் அளிக்கும். வாரம் சில முறை அல்லது தினமும் ஒரு முறை சூடான நீரில் குளிப்பதால், பல்வேறு நன்மைகளைப் பெற முடியும்.காலையில் குளித்துவிட்டு வெளியில் சென்றாலும் மாலை வீடு வருவதற்குள் வெளியில் இருக்கும் அழுக்கு, தூசி, மாசுக்களால் நிச்சயம் உடலில் அழுக்குகள், கிருமிகள் சேரும்.
அதிகமாக அழுக்கு படிதலால் உடல் மற்றும் முகம் எண்ணெய் பிசுக்குத் தன்மையுடன் காணப்படும். தூசி உள்ள பகுதிக்கு செல்லாவிட்டாலும் காற்றில் மாசுக்கள் இருக்கும். அவை சருமத் துளைகளை அடைத்துக் கொள்ளும். அதனால் இரவில் வீட்டுக்கு வந்ததும் குளித்துவிட்டு தூங்குவது நல்லது.



Click it and Unblock the Notifications