Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
ஆண்களின் பாலியல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சுக்கு பால் - எப்படி தயாரிப்பது? எப்போது குடிக்கணும்?
Sukku Milk Benefits In Tamil: தற்போதைய மன அழுத்தம் நிறைந்த மற்றும் அவசரமான உலகில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக திருமணமான தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்படுகிறது.
ஏனெனில் அதிக மன அழுத்தம் கொள்வதால் தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படுகிறது. பல ஆண்கள் பாலுணர்ச்சி குறைபாட்டை சந்திக்கிறார்கள். ஆண்களின் இந்த பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க நம் வீட்டு சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் வாய்ந்த பொருட்கள் உள்ளன.

அதில் ஒன்று தான் சுக்கு. இந்த சுக்கு என்பது வேறொன்றும் இல்லை காய்ந்த இஞ்சி. ஆயுர்வேதத்தில் சுக்கு பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுக்கு உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடியதாக ஆயுர்வேதம் கூறுகிறது.
இந்த சுக்கு பொடியை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, இது பாலியல் பிரச்சனைகளைப் போக்கி, தாம்பத்திய வாழ்க்கையை இனிமையாக்குகிறது. பாலை சூடாக குடிக்கும் போது, அது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். அதையே குளிர்ந்த நிலையில் குடிக்கும் போது குளிர்ச்சியாக்கும்.
பொதுவாக பால் ஜீரணமாக கடினமாக இருக்கும் மற்றும் இது உடலில் வாயுவை உற்பத்தி செய்யக்கூடியது. ஆயினும் பாலில் கால்சியம், புரோட்டீன் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், பால் ஆரோக்கியமான பானமாக திகழ்கிறது.
பாலியல் வாழ்க்கை சிறக்க எப்போது சுக்கு பாலை குடிக்க வேண்டும்?
பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள், தினமும் இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான சுக்கு பாலைக் குடிப்பது நல்லது. இப்படி குடிக்கும் போது ஆண்களின் பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, வாழ்க்கைத் துணையுடனான தாம்பத்திய உறவு நன்றாக இருக்கும். இப்போது சுக்கு பால் குடிப்பதால் பெறும் பிற நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
செரிமான பிரச்சனைகள்
சுக்கு பாலை ஒருவர் குடித்து வந்தால், அது செரிமான பிரச்சனைகளைத் தடுக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வாய்வு தொல்லையால் கடுமையான வயிற்று வலியை சந்திப்பவர்கள், அந்த வலியில் இருந்து விடுபடுவார்கள்.
மூட்டு வலி
மூட்டு வலியால் அவதிப்படுபவர்க சுக்கு பால் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சுக்கு பால் உடலில் உள்ள வாதத்தை நீக்கும். ஏனெனில் உடலில் வாதம் அதிகம் இருந்தால் தான் மூட்டு வலிகள் ஏற்படும். ஆகவே ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளை கொண்டவர்கள் சுக்கு பாலை குடித்தால், வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தொண்டை வலி மற்றும் காய்ச்சல்
தொண்டை வலி அல்லது தொண்டை கரகரப்புடன் காய்ச்சலால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் சுக்கு பாலைக் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் சுக்குவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது சளி, இருமல், மூக்கு ஒழுகல், தொண்டை வலி மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
நச்சுக்கள் நீங்கும்
உடலில் உள்ள நச்சுக்களை எளிய வழியில் வெளியேற்றி, உடலை சுத்தம் செய்ய விரும்பினால், சுக்கு பாலைக் குடிக்கலாம். ஏனென்றால், சுக்கு பால் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குவதோடு, உடலைக்கு வேண்டிய சத்துக்களையும் வழங்கி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
சுக்கு பால் தயாரிப்பது எப்படி?
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/4 டீஸ்பூன் சுக்கு பொடி மற்றும் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டினால், சுவையான சுக்கு பால் தயார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications