வரகரிசியை இப்படி கஞ்சி வெச்சு குடிச்சா.. இதய நோய் வராதாம்.. தொப்பையும் குறையுமாம்..

Varagarisi Benefits In Tamil: மனிதனால் உணவின்றி உயிர் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழ்வதற்கு பல வகையான உணவுகள் உலகில் உள்ளன. அதில் இந்தியர்களின் பிரதான உணவு தான் அரிசி.

இந்த அரிசியில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் வரகு அரிசி எனப்படும் வரகரிசி. இந்த வரகரிசி மிகவும் பழமையான சிறுதானியமாகும். இந்த வரகரிசி குறைவான நீர் மற்றும் குறைந்த வளமான மண்ணில் வளரக்கூடியது.

Varagarisi Benefits: Top Eight Health Benefits Of Eating Varagu Rice In Tamil

முந்தைய காலத்தில் இந்த மாதிரியான சிறுதானிய உணவுகளைத் தான் மக்கள் அதிகம் உட்கொண்டு வந்தார்கள். ஏனெனில் வரகரிசியில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இந்த வரகரிசியை அதிகம் உட்கொண்டதாலோ என்னவோ, நம் முன்னோர்கள் நீண்ட காலம் நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.

வரகரிசியைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை சமைத்து சாப்பிடலாம். ஆனால் இதை காலை வேளையில் கஞ்சியாக தயாரித்து குடித்து வந்தால், இன்னும் நல்லது. இப்போது வரகசிரி கஞ்சியை குடிப்பதால் என்னென்ன நன்மைகளை உடலுக்கு கிடைக்கும் என்பதைக் காண்போம்.

1. புரோட்டின் அதிகம்

வரகரிசியில் புரோட்டீன் ஏராளமான அளவில் உள்ளன. 100 கிராம் வரகரிசியில் 9.8 கிராம் புரோட்டீன் உள்ளது. ஆகவே சைவ உணவாளர்களுக்கு ஏற்ற சிறப்பான புரோட்டீன் உணவாக இருக்கும். புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் தசைகளில் ஏற்படும் காயங்களை விரைவில் சரிசெய்கிறது. ஆகவே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் வரகரிசி கஞ்சியைக் குடிப்பது நல்லது.

2. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்

வரகரிசியில் பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்களைக் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள பைடேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

3. நரம்பு மண்டலம் வலுபெறும்

வரகரிசியில் லெசித்தின் வளமான அளவில் உள்ளன. இது நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு இன்றியமையாத ஒன்றாகும். எனவே வரகரிசி கஞ்சியை அடிக்கடி குடித்து வந்தால், நரம்பு மண்டலம் வலுபெற்று, நரம்பு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

4. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

வரகரிசியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு. இது மெதுவாக உடலாக உறிஞ்சப்படுவதால், இரத்த சர்க்கரை அளவு சட்டென அதிகரிக்காது. இதனால் சர்க்கரை நோயாளிகள் வரகரிசியை தங்களின் உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது.

5. உடல் பருமனைத் தடுக்கும்

உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு வரகரிசி மிகச்சிறப்பான உணவுப் பொருள். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. இதை உட்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருப்பதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதோடு இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவற்றின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.

6. நச்சுக்களை வெளியேற்றும்

வரகரிசியைக் கொண்டு செய்யப்படும் கஞ்சியை குடிப்பதன் மூலம், ஒருவரது தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. முக்கியமாக இந்த கஞ்சியை அடிக்கடி குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் திறம்பட உடலில் இருந்து சிறுநீரகங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும் மற்றும் சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

7. மலச்சிக்கல் தடுக்கப்படும்

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் நார்ச்சத்து குறைவான உணவுகளை குறைவாக உட்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இந்நிலையில் வரகரிசி கஞ்சியை வாரத்திற்கு 2-3 முறை குடித்து வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுப்பதோடு, வயிற்றில் புண்கள் இருந்தாலும் அதையும் சரிசெய்யும்.

8. இதயத்திற்கு நல்லது

தற்போது நிறைய பேர் இதய நோயால் பாதிக்கப்படுவதோடு, மாரடைப்பால் இறக்கிறார்கள். ஆனால் வரகரிசியைக் கொண்டு அடிக்கடி கஞ்சி தயாரித்து குடித்து வந்தால், அதில் உள்ள சத்துக்கள் இதயத்தை வலிமையாக்குவதோடு, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

வரகு அரிசி கஞ்சி தயாரிப்பது எப்படி?

* முதலில் 1/4 கப் வரகரிசியை எடுத்து, நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதை கழுவி 1 1/2 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு சிறு வெள்ளை துணியை எடுத்து, அதில் 1/4 டீஸ்பூன் கருஞ்சீரகத்தை வைத்து சிறு மூட்டையாக கட்டி, கொதிக்கும் கஞ்சியில் சேர்க்க வேண்டும்.
* வரகரிசி நன்கு வெந்ததும், அந்த மூட்டையை எடுத்து விட வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion