Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
Palmistry Test: கைரேகை ஜோதிடத்தின் மூலம் ஒருவரது எதிர்காலத்தை தெரிந்து கொள்வது மட்டுமின்றி, தற்போது ஒருவர் எந்த வகையான கர்மத்தை சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது. அதற்கு நமது கையில் உள்ள கர்ம ரேகையை புரிந்து கொள்ள வேண்டும்.

கர்மத்தில் பொதுவாக 3 வகைகள் உள்ளன. அந்த மூன்று வகையான கர்மங்களாவன சஞ்சிதா (கடந்த காலம்), கிரியாமானம் (நிகழ்காலம்), அகாமி (எதிர்காலம்). இந்த மூன்று வகையான கர்மங்களும் நாம் எங்கிருந்து வந்துள்ளோம், எங்கு செல்கிறோம், எதை சுமந்து வாழ்கிறோம் என்பதைப் பற்றி தெரியப்படுத்துகின்றன.
அதுவும் நமது கையில் உள்ள ஒருசில அடையாளங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றன. உங்கள் உள்ளங்கையில் M, Y, அல்லது X என்ற எழுத்தைக் கண்டீர்களா? இது உங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை வெளிப்படுத்தக்கூடும். உங்க கையில் எந்த எழுத்து உள்ளது என்பதை பார்த்து, அதன் அர்த்தத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
"M" வடிவம்
உங்கள் உள்ளங்கையில் "M" வடிவம் தெரிந்தால், இது எதிர்கால கர்மத்தை குறிக்கிறது. அதாவது நீங்கள் தற்போது சிந்திக்கும் அல்லது திட்டமிடும் செயல்கள், எதிர்காலத்தில் பலனைத் தரும். அதாவது நீங்கள் உங்களுக்காக எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் நீங்கள் சிறந்து விளங்கி, நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். மேலும், நீங்கள் பண விஷயத்தில் புத்திசாலியாக இருப்பீர்கள், உங்கள் நிதிகளை எப்படிக் கையாள்வது என்பதும் உங்களுக்குத் துல்லியமாகத் தெரியும். மொத்தத்தில் நீங்கள் சுமந்து செல்வது உங்கள் கடந்த காலத்தை மட்டுமல்ல, உங்கள் ஆற்றலையும் கூட.
"Y" வடிவம்
உங்கள் கையில் "Y" வடிவம் இருந்தால், அது கடந்தகால கர்மத்தை குறிக்கிறது. அதாவது, இது உங்களின் ஒவ்வொரு முந்தைய பிறவியிலும் தீர்க்கப்படாமல் உள்ள அனைத்து கடந்தகால செயல்களை குறிக்கிறது. மேலும் இது நீங்கள் கடந்த காலத்தில் இருந்து, இந்த உலகிற்கு கொண்டு வந்த பரம்பரை குணங்களையும் மறைந்திருக்கும் ஆற்றலையும் இது குறிக்கிறது. இந்த வடிவம் கையில் இருந்தால், கடந்த காலத்திலிருந்து முழுமையாக மறையாத உணர்ச்சிகரமான நினைவுகள் மற்றும் பாடங்களை நீங்கள் சுமந்து கொண்டு இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒருசில விஷயங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதை கவனிக்கலாம் அல்லது காரணம் தெரியாமலேயே சில நபர்கள் மற்றும் சூழ்நிலைகளின்பால் ஈர்க்கப்படலாம்.
"X" வடிவம்
கையில் "X" வடிவம் இருந்தால், அது நிகழ்கால கர்மத்தைக் குறிக்கிறது. அதாவது இது தற்போதைய தருணத்தில் நாம் உருவாக்கும் கர்மாவின் அடையாளமாகும். மேலும் இதுவே நாம் முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே வகையான கர்மம் ஆகும். நீங்கள் பழைய கடன்களைத் தீர்த்தாலும் சரி, ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கினாலும் சரி, உங்கள் கடந்த காலத்தை உங்களால் மாற்ற முடியாது. ஆனால் உங்கள் தற்போதைய நடத்தையைச் செம்மைப்படுத்த, கர்ம கைரேகை மூலம் கிடைக்கும் நுண்ணறிவுகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
