Latest Updates
-
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
ஆண்களே! வாரம் ஒருமுறை இத சாப்பிட்டா.. விந்தணுக்களின் உற்பத்தி சிறப்பா இருக்குமாம்.. மறக்காம சாப்பிடுங்க..
Leafy Greens Benefits In Tamil: பெண்களைப் போன்றே ஆண்களும் எப்போதுமே இளமையாக காட்சியளிக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதற்காக அவர்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் ஆய்வு ஒன்றில் ஃபிட்டாக இருக்க நினைக்கும் ஆண்கள் கீரைகள் போன்ற பச்சைஇலைக் காய்கறிகளை உணவில் சேர்ப்பதில்லை, மாறாக இறைச்சிகளை தான் அதிகம் எடுக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ஆம், ஃபிட்டாக இருக்க ஜிம் செல்லும் ஆண்கள், புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும். இந்த புரோட்டீன் முட்டை, இறைச்சிகள், பருப்பு வகைகள் போன்றவற்றில் அதிகம் காணப்படுகின்றன. அதற்காக கீரைகளை உணவில் சேர்க்க தவறுகிறார்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக முட்டை, இறைச்சி போன்ற புரோட்டீன் உணவுகளை உட்கொண்டால், அது உடலில் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?

நீங்கள் ஜிம் செல்பவராக இருந்தால், எவ்வளவு புரோட்டீன் உணவுகளை உட்கொள்கிறீர்களோ, அதற்கு இணையாக நார்ச்சத்துள்ள உணவுகளையும் உட்கொள்ள மறக்காதீர்கள். இப்படிப்பட்ட நார்ச்சத்து கீரைகள், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் தான் அதிகம் காணப்படுகின்றன. மேலும் இவற்றில் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன.
ஆகவே ஒவ்வொரு ஆணும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்க விரும்பினால், பச்சை இலைக் காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்து வர வேண்டும். இப்போது ஆண்கள் பச்சை இலை காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் நிறைந்திருப்பதால், இவை தினசரி உணவில் சேர்க்க வேண்டிய முக்கிய உணவுகளாக கருதப்படுகின்றன. ஏனெனில் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நோய்களை தடுக்கவும், நோயெர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மூளையின் ஆற்றலை மேம்படுத்தவும் உதவி புரிகின்றன. எனவே ஆண்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், இந்த வகை உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
2. டெஸ்டோஸ்டிரோன் மேம்படும்
கீரைகள், ப்ராக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் மக்னீசியம் அதிகளவில் உள்ளன. இந்த மக்னீசியம் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு மிகவும் முக்கியமான சத்தாகும். ஆண்களின் உடலில் மக்னீசியம் சிறப்பான அளவில் இருந்தால் தான், ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் வளமான அளவில் இருக்கும். அதோடு விந்தணுக்களின் உற்பத்தியும் அதிகரித்து, பாலியல் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும்.
3. உடல் பருமனை கட்டுப்படுத்தும்
பச்சை இலைக் காய்கறிகளில் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே நீங்கள் ஃபிட்டாக இருக்க வேண்டுமானால் அல்லது உடல் எடையைக் குறைக்க விரும்பினால், பச்சை இலைக் காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். ஒருவேளை உங்கள் இலக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டியது இல்லாவிட்டாலும், அடிக்கடி இவற்றை உட்கொண்டு வந்தால், உடல் எடை சீராக பராமரிக்கப்படும்.
4. இதய ஆரோக்கியம் மேம்படும்
தற்போது நிறைய ஆண்கள் மாரடைப்பால் இறக்கிறார்கள். இதைத் தடுக்க பச்சை இலைக் காய்கறிகள் உதவி புரியும். ஏனெனில் பச்சை இலை காய்கறிகளில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதோடு, இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் இவை சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.
5. செரிமான மண்டலம் மேம்படும்
பச்சை இலைக் காய்கறிகளல் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாக உட்கொண்டால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். நாம் உண்ணும் உணவுகள் முறையாக செரிமான மண்டலத்தால் ஜீரணிக்கப்பட்டால், அவற்றில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். மேலும் குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்படும்.
6. எலும்புகளின் ஆரோக்கியம்
பச்சை இலை காய்கறிகளில் மக்னீசியம், கால்சியம் போன்ற எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பராமரிக்கவும் தேவையான கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதோடு, இவற்றில் வைட்டமின் கே என்னும் எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய சத்து உள்ளது. முக்கியமாக இவற்றை உட்கொண்டு வந்தால், அது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
7. தசை வலியைக் குறைக்கும்
பச்சை இலைக் காய்கறிகளில் இருக்கும் நைட்ரேட் தசைகளில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்ற உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நைட்ரேட்டுகளானது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், தசைகளில் வலியை ஏற்படுத்தும் நச்சுக்களை அகற்றவும் உதவுகின்றன. எனவே நீங்கள் ஜிம் செல்பவரானால், தசைகளில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்றல் பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிடுங்கள். இதனால் தசை வலியும் குறையும் தசைகளில் உள்ள காயங்களும் விரைவில் குணமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications