Latest Updates
-
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
ஒரு துண்டு தேங்காயை தினமும் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Raw Coconut Benefits In Tamil: பழங்காலம் முதலாக நம் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் தேங்காய். இந்த தேங்காயானது சமையலில் மட்டுமின்றி, பல்வேறு வடிவங்களில் பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காயில் ஏராளமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இதனால் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.
முக்கியமாக தேங்காயில் காப்பர், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, செலினியம், ஜிங்க் போன்றவை அதிகமாக உள்ளன. மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. அதோடு ஃபோலேட், வைட்டமின் சி, தையமின் போன்றவைகளும் உள்ளன. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய தேங்காயை தினமும் ஒருவர் ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளின் அபாயத்தைத் தடுக்கலாம்.

சொல்லப்போனால் நம் முன்னோர்களின் வலுவான கட்டுடலுக்கும், நோயின்றி நீண்ட நாள் வாழ்ந்தமைக்கும் தேங்காயும் ஒரு காரணம் என்றே கூறலாம். இப்போது தினமும் ஒரு துண்டு தேங்காயை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. எடை இழப்புக்கு உதவும்
உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு தேங்காய் ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் என்றே கூறலாம். ஏனெனில் தேங்காயை சாப்பிடும் போது, அது பசியைக் கட்டுப்படுத்தி, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, எடை இழப்புக்கு உதவுகிறது. இது தவிர, இரது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
2. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
தேங்காயில் ஆன்டி-பாக்டீரயல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. எனவே தேங்காயை உட்கொள்ளும் போது, அது உடலை பாக்டிரியாக்கள், பூஞ்சைகளின் தாக்குதலைத் தடுத்து, உடலை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. நீங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை எளிய முறையில் வலிமையாக்க விரும்பினால், தேங்காய் துண்டுகளை தினமும் சாப்பிடுங்கள் போதும்.
3. இதய நோய் தடுக்கப்படும்
தேங்காயில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இவை உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றன. மேலும் இது உடலில் இரத்த கொலஸ்ட்ரால் அளவையும் மேம்படுத்த உதவுகிறது. உடலில் நல்ல கொலஸ்ட்ரால் சிறப்பான அளவில் இருந்தால், இதய நோயின் அபாயம் குறையும். சுருக்கமாக கூற வேண்டுமானால், தேங்காய் துண்டு சாப்பிட்டால் இதய நோய் வரும் அபாயம் குறையும்.
4. எலும்புகள் மற்றும் பற்கள் வலுபெறும்
தேங்காயை தினமும் சாப்பிடும் போது, அது கால்சியம் மற்றும் மக்னீசியத்தை அதிகமாக உறிஞ்ச உதவுகிறது. உடலில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சிறப்பான அளவில் இருந்தால், எலும்புகளும், பற்களும் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். எனவே உங்களுக்கு எலும்பு மற்றும் பற்கள் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில் தேங்காய் துண்டுகளை தினமும் சாப்பிடுங்கள் போதும்.
5. புற்றுநோயைத் தடுக்கும்
தேங்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், அது பல்வேறு வகையான புற்றுநோய்களின் அபாயத்தைத் தடுக்கும். எனவே புற்றுநோய் வரக்கூடாதெனில் தினமும் தேங்காய் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
6. சர்க்கரை நோய் கட்டுப்படும்
தேங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சொல்லப்போனால் சர்க்கரை நோயாளிகளின் சிறந்த ஸ்நாக்ஸாக தேங்காய் விளங்கும். ஏனெனில் தேங்காயானது உடலில் உள்ள ஹார்மோன்களில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனவே எளிய வழியில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் தேங்காயை சாப்பிடுங்கள்.
7. செரிமான ஆரோக்கியம் மேம்படும்
தேங்காய் தினமும் சாப்பிடுவதால், வயிற்று உப்புசம், மலச்சிக்கள் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணம் நார்ச்சத்துள்ள உணவுகளை குறைவாக உண்பது தான். ஆனால் தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இதை உட்கொள்ளும் போது குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படும் அபாயம் குறையும். நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனைகளை சந்திப்பவராயின், ஒரு துண்டு தேங்காயை தினமும் சாப்பிடுங்கள், செரிமான பிரச்சனைகளை நிச்சயம் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications