Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
10 நிமிடத்தில் சப்பாத்தி, சாதத்துக்கு ஏற்ற முட்டை சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Egg Salna Recipe In Tamil: இன்று இரவு சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா?
உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா? அப்படியானால் அந்த முட்டையைக் கொண்டு சால்னாவை செய்யுங்கள். இந்த முட்டை சால்னா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* முட்டை - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* கல்பாசி - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* வெங்காயம் - 2
* தக்காளி - 2
* இஞ்சி - 1 இன்ச்
* தேங்காய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* புதினா இலைகள் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, மல்லி விதைகள், மிளகு,
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கசகசா, பொட்டுக்கடலை,
முந்திரி ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து தனியாக ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயில் வெங்காயம், தக்காளி, இஞ்சி,
பூண்டு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் புதினா இலைகளை சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மசாலா பொருட்கள் மற்றும் வெங்காயம்
தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள்
சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து 2 நிமிடம்
கிளறி, சால்னாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறி, மூடி வைத்து 5-6 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக அடித்து வைத்துள்ள முட்டையை சால்னாவில் ஊற்றி 4-5 நிமிடம்
வேக வைத்து இறக்கினால், சுவையான முட்டை சால்னா தயார்.
Image Courtesy: pravzkitchen



Click it and Unblock the Notifications