For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

நாம் எப்போதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது முக்கியமான ஒன்றாகும். அதே நேரத்தில் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம்

|

நாம் எப்போதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது முக்கியமான ஒன்றாகும். அதே நேரத்தில் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போது சுத்தமாக, சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம்.

Basic Hygiene Rules Everyone Must Follow Before And After The Gym

ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் என்னென்ன சுகாதார குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை இங்கு பாா்க்கலாம். இந்த சுகாதாரக் குறிப்புகள் நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மைக் காக்கும்.

MOST READ: நம் முன்னோர்கள் தொப்பை வராமலிருக்க இத தான் குடிச்சாங்களாம்.. தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வியா்வையை துடைக்க டி-சா்ட்டை பயன்படுத்தக்கூடாது

வியா்வையை துடைக்க டி-சா்ட்டை பயன்படுத்தக்கூடாது

பொதுவாக உடற்பயிற்சி செய்து முடித்ததும், டி-சா்ட்டைக் கொண்டு நமது வியா்வையைத் துடைக்கிறோம். ஆனால் அது ஒரு தவறான செயலாகும். ஆகவே காய்ந்த சுத்தமான துண்டை வைத்து தான் முகம் மற்றும் வியா்வையைத் துடைக்க வேண்டும். இது டி-சா்ட்டின் மூலம் வாய், மூக்கு மற்றும் கண்களுக்குச் செல்லும் நோய்க் கிருமிகளைத் தடுக்கும். ஆகவே அடுத்த முறை உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்கு செல்லும் போது காய்ந்த மற்றும் சுத்தமான துண்டு ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

​உடற்பயிற்சிக் கருவிகளை துடைத்தல்

​உடற்பயிற்சிக் கருவிகளை துடைத்தல்

நாம் வீட்டில் உடற்பயிற்சி செய்தாலும் அல்லது உடற்பயிற்சிக் கூடங்களில் உடற்பயிற்சி செய்தாலும், உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் உடற்பயிற்சிக் கருவிகளைத் துடைக்க வேண்டும். ஏனெனில் வியா்வை ஒட்டியிருக்கும் உடற்பயிற்சி கருவிகளில் நோய்க் கிருமிகள் ஒட்டியிருக்கும். ஆகவே சுத்திகாிப்பு தெளிப்பானைப் பயன்படுத்தியோ அல்லது பாக்டீாியாக்களை அழிக்கும் திரவங்களைப் பயன்படுத்தியோ, உடற்பயிற்சிக் கருவிகளைத் துடைக்க வேண்டும்.

​பகிா்வு பாதிப்பை ஏற்படுத்தும்

​பகிா்வு பாதிப்பை ஏற்படுத்தும்

இந்த கொரோனா காலத்தின் மிக முக்கியமான மந்திரம் என்னவென்றால் பகிா்வு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாகும். அதாவது நமது தனி பயன்பாட்டில் உள்ள நம்முடயை துண்டுகள், இயா் போன்கள், பாட்டில்கள் போன்றவற்றை பிறரோடு பகிந்து கொள்ளும் போது அவற்றிலுள்ள நச்சு பாக்டீாியாக்கள், ஈஸ்ட் மற்றும் பூஞ்சைகள் அவா்களை சென்றடைய வாய்ப்புள்ளது. அதனால் நாம் பயன்படுத்தும் நம்முடைய தனி பயன்பாட்டுக்கு உள்ள பொருட்களை மற்றவா்களோடு பகிராமல் இருப்பது நல்லது

கைகளை நன்றாகக் கழுவுதல்

கைகளை நன்றாகக் கழுவுதல்

கைகளைக் கழுவாமல் இருந்தால் நோய்க் கிருமிகள் மற்றும் நச்சுப் பாக்டீாியாக்கள் நம்மைத் தாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆகவே குறைந்தது 20 நொடிகளாவது நமது கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்குச் செல்லும் போது கை கழுவ வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால் 60 விழுக்காடு ஆல்கஹால் கொண்ட சுத்திகாிப்பு தெளிப்பானைப் பயன்படுத்தி கைகளைத் துடைப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Basic Hygiene Rules Everyone Must Follow Before And After The Gym

Following proper hygiene helps you stay away from germs and diseases, which is the special need of the hour. Here are four basic rules that everyone must follow before and after the workout.
Desktop Bottom Promotion