For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களை கச்சிதமான உடல் எடையுடன் வைத்து கொள்ளும் யோகா நிலைகள்..!

|

உணவு பிரியர்களுக்கு ஏற்படுகின்ற சில முக்கிய பிரச்சினைகளில் முதன்மையானது உடல் எடை கூடுதலே. இது பல வகையிலும் இன்னல்களை நமக்கு தரும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்க தான் செய்யும். இதற்காக ஏராளமான தவறான வழி முறைகளை நாம்பின்பற்றுவோம். இது கடைசியில் எந்த வித பலனும் நமக்கு தராது. அந்த காலத்தில் சித்தர்கள் ஒரு சில வழி முறைகளை, கச்சிதமான உடல் அமைப்பை வைத்து கொள்ள கடைபிடித்து வந்தனர்.

Yoga Poses for Weight Loss

இன்றும் அவற்றை நாம் பின்பற்றி வருகின்றோம். இது போன்ற பல இயற்கை வழி முறைகளை கையாண்டாலே நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என ஆய்வுகளும் சொல்கிறது. இந்த பதிவில் உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ள உதவும் எளிய முறைகளை பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவா..? பயிற்சியா..?

உணவா..? பயிற்சியா..?

நாம் சாப்பிடும் உணவையும் அன்றாடம் நாம் செய்யும் செயல்களையும் வைத்தே நம் உடல் ஆரோக்கியம் கணிக்கப்படுகிறது. உடலை மிகவும் இலகுவாகவும், வளையும் தன்மையுடனும் வைத்து கொள்ள வேண்டும். இது போன்ற உடல் அமைப்பை தான் சித்தர்களும், நம் முன்னோர்களும் வைத்திருந்தனர்.

வீரபத்ராசனம்

வீரபத்ராசனம்

ஆசனங்களில் சிறந்த ஆசனமாக கருதப்படுவது இந்த வீரபத்ராசனம். இதனை போர் வீரர்கள் தங்களது பயிற்சியின் போது பிரத்தியேகமாக பயன்படுத்துவர். இதனை போர் வீரர்களின் ஆசனம் என்றும் அழைப்பதுண்டு. இது உடல் எடையை அளவாக வைத்து கொள்ள பெரிதும் உதவும்.

ஆசன நிலை...

ஆசன நிலை...

வீரபத்ராசனம் செய்ய, முதலில் எழுத்து நிற்க வேண்டும். அடுத்து கால்களை நன்கு விரித்து கொண்டு, முதுகை குறுக்காமல் நேராக நிற்கவும. இப்போது கைகளை நேராக மேல தூக்கி நேரான நிலையில் இருக்கவும். இந்த நிலையில் மெல்ல மூச்சை இழுத்து விடவும். இது வயிற்று பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்புக்களை குறைக்க பயன்படும்.

புஜங்காசனம்

புஜங்காசனம்

இந்த பயிற்சி முறை பாம்பு படமெடுப்பது போன்றதாகும். ஆண்களின் பெரும்பாலான பிரச்சினைகளை விரைவில் தீர்க்க இந்த ஆசனம் பயன்படும். உடலின் தசைகளை இலகுவாக்கி உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ளும்.. மேலும், ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலுக்கு வலிமை தரும்.

MOST READ: புரட்டாசி மாதம் நான் வெஜ் சாப்பிடக்கூடாது ஏன்? - அறிவியல் பூர்வமான தகவல்கள்!!!

பயிற்சி முறை...

பயிற்சி முறை...

இந்த பயிற்சியை செய்வதற்கு முதலில் குப்புற படுத்து கொள்ளவும். அடுத்து இரண்டு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக வைத்து கொண்டு தலை மற்றும் மார்பு பகுதியையும் சேர்த்து மேலே தூக்கி மூச்சை இழுத்து விடவும். அதன் பின், இரு கால்களையும் மேலே தூக்கி மூச்சை இழுத்து விடவும். இவ்வாறு, செய்வதால் கொழுப்புகள் விரைவிலே குறைந்து விடும்.

திரிகோணாசனம்

திரிகோணாசனம்

இந்த ஆசன நிலையின் பெயரிலே இதற்கான அர்த்தம் புரிந்திருக்கும். அதாவது, முக்கோண வடிவில் இந்த ஆசன நிலையில் இருக்க வேண்டும். இது கால்களுக்கு அதிக வலுவை தந்து தொடை பகுதியில் உள்ள கொழுப்புகள் அனைத்தையும் கறைக்க உதவும்.

ஆசன நிலை...

ஆசன நிலை...

இந்த ஆசனத்தை செய்ய முதலில் கால்களை பக்கவாட்டில் மூன்று அடி விரித்து வைக்கவும். வலது கால்களை 90 டிகிரியில் வைத்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் மூச்சை இழுத்த படியே வலது கையை மேலே தூக்கி கீழே இடது காலை தொடும்படி செய்யவும். இப்போது மூச்சை வெளியே மெல்ல விடவும். இது போன்று இடது காலிலும் செய்ய வேண்டும். இந்த நிலையில் 30 நொடி முதல் 1 நிமிடம் வரை இருக்கலாம்.

மச்சியாசனம்

மச்சியாசனம்

மீனை போன்ற தோற்றம் கொண்டது இந்த பயிற்சி நிலையாகும். இந்த ஆசனத்தை தொடந்து செய்வதால் தொடை, இடுப்பு, மற்றும் அடிவயிற்று பகுதிகளால் சேர்ந்துள்ள கொழுப்புகளை முற்றிலுமாக குறைந்து விடுமாம். அத்துடன், அழகான உடல் அமைப்பையும் இது பெற்று தரும்.

MOST READ: கணவருடன் கலவுதலின் பொழுதே குழந்தையை பிரசவித்த பெண்ணின் கதை!

பயிற்சி முறை

பயிற்சி முறை

முதலில் பத்மாசனத்தில் அமர வேண்டும். அடுத்து, வலது காலை இடது தொடையிலும் இடது காலை வலது தொடையிலும் வைத்து கொள்ள வேண்டும். பின், முழங்கைகளை பின்னல் எடுத்து சென்று மேல் நோக்கி, படுத்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, உடம்பின் மேற்பகுதியை தூக்கி தலையின் உச்சியை தரையில் வைக்க வேண்டும். இறுதியாக பழைய நிலைக்கு வரவும்.

மயூராசனம்

மயூராசனம்

மயிலை போன்ற தோற்றத்தை தர கூடியது தான் மயிராசனம். குண்டாக இருப்பவர்கள் இந்த யோகா நிலையை செய்து வந்தால் நல்ல பலனை விரைவிலே அடையலாம். குறிப்பாக தொப்பை, அடி வயிற்று கொழுப்பு இவற்றால் அவதியப்படுவோருக்கு இந்த ஆசன நிலை நல்ல பலனை தரும்.

பயிற்சி முறை...

பயிற்சி முறை...

இந்த ஆசனத்தை செய்ய, முதலில் கால்களை நீட்டி உட்கார்ந்து கொள்ளவும். பிறகு முட்டி போடுவது போன்று செய்து, கைகளை பின்னோக்கி தரையில் படும்படி வைத்து கொள்ள வேண்டும். இப்பொது முழங்கைகளை மூட்டு இடத்தில் மடக்கவும். தொப்புளை முழங்கைகளின் நடுவில் வைக்கவும். பிறகு கால்களை பின்புறம் நீட்டிடவும். இப்போது உடம்பை மெல்ல மேலே எழும்படி செய்வும். மூச்சை மெதுவாக இழுத்து விடவும்.

நவ்காசனம்

நவ்காசனம்

இந்த ஆசனம் படகை போன்ற நிலையை குறிக்கும் ஆசன முறையாகும். இது வயிற்று பகுதியை பலப்படுத்தும் மிக முக்கிய பயிற்சியாம். உடல் எடையை குறைத்து அதிக வலிமையை உடலுக்கு தரும். அத்துடன் வயிற்று சம்மந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் இது குணப்படுத்தும்.

பயிற்சி முறை...

பயிற்சி முறை...

முதலில் மேல் நோக்கி படுத்து கொள்ள வேண்டும். அடுத்து, கால்களை மேலே தூக்கி கொள்ளவும். இந்த நிலையில் இரு கைகளாலும் இரு கால்களையும் பிடித்து படகை போன்று செய்ய வேண்டும். மூச்சை இறுக்கமாக பிடித்து கொள்ளாமல், இலகுவாக உடலை வைத்து கொள்ளவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இது போன்ற பயனுள்ள புதிய ஆசனங்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yoga Poses for Weight Loss

Yoga can help you to cure many health problems. It can enhance the blood flow to the entire body.
Desktop Bottom Promotion