For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழத்தில் எது ஆரோக்கியமானது..? எது ஆபத்தானது..? பச்சையா..? மஞ்சளா..? சிவப்பு நிறமா...?

|

ஒவ்வொரு பழத்திற்கு ஒரு தனி சிறப்பம்சமும் மகத்துவமும் உண்டு. பழங்களின் தன்மைக்கேற்ப அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும். எல்லா வகையான பழங்களும் நமக்கு நன்மை தரும் என சொல்ல முடியாது. ஒரு சில பழங்கள் மருத்துவ தன்மை வாய்ந்ததாக இருக்கும். வேறு சில பழங்கள் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த வரிசையில் தீமை தர கூடிய பழங்களும் உள்ளன. குறிப்பாக பழமானது சிறிது நிறம் மாறினாலே தீங்கை விளைவிக்குமாம்.

Which is the healthiest banana?

இதில் வாழை பழங்களும் அடங்கும். வாழை பழத்தில் பல வித வகைகள் உள்ளன. எனவே, இவற்றின் நிறம் மிக இன்றியமையாததாகும். மஞ்சள், பச்சை, சிவப்பு, பழுப்பு, புள்ளி புள்ளயாக... இப்படி பல்வேறு ரகங்களில் எது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்..? எது ஆபத்தை தரும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழமும் அதன் நிறங்களும்..!

வாழைப்பழமும் அதன் நிறங்களும்..!

பொதுவாகவே பழங்கள் என்றவுடன் அவற்றிற்கென்று தனி நிறங்கள் உள்ளது. அந்த வகையில் வாழைப்பழத்திற்கு வெவ்வேறு நிறங்கள் இருக்கின்றன. வாழைப்பழமானது மஞ்சள், பச்சை, சிவப்பு, பழுப்பு நிறங்களில் காணப்படுகிறது. இதில் எந்த நிறம் சிறந்தது என்பதை முதலில் அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.

வாழைப்பழத்தின் மகிமை...!

வாழைப்பழத்தின் மகிமை...!

எல்லா வகையான பழங்களை போன்றே இந்த வாழைப்பழத்தில் எண்ணற்ற நலன்கள் உள்ளன. குறிப்பாக இதனை சாப்பிடுவதால் பல ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு வந்தடைகின்றன.

வைட்டமின் எ

கால்சியம்

இரும்புசத்து

மெக்னீசியம்

பொட்டாசியம்

சோடியம்

செலினியம்

வைட்டமின் சி

பச்சை நிறம்

பச்சை நிறம்

பச்சை நிற பழமனது கண்ணை கவரும் விதத்தில் இருக்கும். இவை சற்றே கசப்பு தன்மை கொண்டதாக காணப்படும். இவற்றில் குறைந்த அளவே சர்க்கரை உள்ளதாம். மேலும், இது ஜீரண சக்தியை அதிகரிக்க பயன்படும். அத்துடன் குடலில் ஏற்பட கூடிய வீக்கங்களையும் பச்சை நிற வாழைப்பழங்கள் குணப்படுத்தும்.

புள்ளி உள்ள பழங்கள்

புள்ளி உள்ள பழங்கள்

இந்த பழங்கள் சற்றே ஆபத்தானதாம். அதாவது, அதிக புள்ளிகள் பழத்தில் இருந்தால் அதில் அதிக ஆபத்துகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. குறிப்பாக இந்த பழத்தில் நிறைய சர்க்கரை அளவு இருக்கிறதாம். எனவே, இந்த வகை வாழை பழங்களை தவிர்ப்பது நன்று. இல்லையேல் வேறு சில உடல் சார்ந்த பிரச்சினைகள் வரும்.

MOST READ: அடிவயிற்று கொழுப்பு மற்றும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த ஆயுர்வேத பானங்கள் போதும்..!

மஞ்சள் நிறம்

மஞ்சள் நிறம்

இவை தான் சரியான நிறத்தில் உள்ள பழங்கள். மிகவும் மென்மையாகவும், அதிக சுவை கொண்டதாகவும், இனிப்பாகவும் இந்த மஞ்சள் நிற பழங்கள் இருக்கும். குறிப்பாக இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதாம். அதே சமயத்தில், இதில் அதிக அளவில் கிளைசெமிக் இன்டெஸ் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்த்து விடவும்.

சிவப்பு நிறம்

சிவப்பு நிறம்

வாழை பழங்களில் இந்த சிவப்பு நிற பழங்கள் மிகவும் ருசியானதாம். இதனை சாப்பிட்டால் பல வகையான நன்மைகள் கிடைக்கும். இந்த வகை பழங்கள் மிகவும் உடலுக்கு நன்மை தரும். மேலும், இதில் பல வகையான சத்துக்கழும் உள்ளன. எனவே, இந்த வகை பழங்கள் உடலுக்கு நல்லது. ஆண்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான சில முக்கிய தாம்பத்திய பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

பழுப்பு நிறம்

பழுப்பு நிறம்

உங்கள் வீட்டில் உள்ள பழங்கள் பழுப்பு நிறமாக மாறி விட்டால், தயவு செய்து அதனை தவிர்த்து விடுங்கள். இது குறிப்பாக தவிர்க்க வேண்டிய பழங்களில் முக்கியமானதாகும். மேலும், இந்த பழத்தில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் இவை சர்க்கரையாக மாறி விடும். எனவே, இது ஆபத்தான நிறம் கொண்ட பழமாம்.

மஞ்சளா..? பச்சையா..? பழுப்பா..?

மஞ்சளா..? பச்சையா..? பழுப்பா..?

வாழைப்பழ நிறங்களில் ஒரு சில பழங்களே மிகவும் ஆபத்தானது. அதில் குறிப்பாக புள்ளி வைத்த பழங்களை சொல்லலாம். மேலும், வாழைப்பழம் அதிகமாக பழுத்து விட்டால் அதனை தவிர்ப்பது நல்லது.

பச்சை மற்றும் சிவப்பு, மஞ்சள் நிற பழங்களே இதில் சிறந்ததாம்.மேலும், பழங்களின் நிறத்தை எப்போதும் கருத்தில் வைத்து கொண்டே, நாம் பழங்களை உண்ண வேண்டும். இதுவே ஆரோக்கியமான உடல் நலத்தை வைத்து கொள்ள எளிமையான வழியாகும்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

MOST READ: உங்கள் ராசிப்படி எந்த ராசிக்காரை திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்கை நரகமாகும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Which is the healthiest banana?

One of the healthiest foods for our body is fruits. Along with being the healthiest, they are surrounded by many myths like when and how to eat them.
Desktop Bottom Promotion