உங்களுக்கு அடிக்கடி இங்க வலிக்குதா? அப்ப இத படிங்க...

Posted By:
Subscribe to Boldsky

தசைகள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உடல் நலத்தின் உறுதுணையில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் வளர்சிதை மாற்றம், உடல் எடை கட்டுப்பாடு, எலும்பு வலிமை, மன அழுத்தம் மற்றும் நோய்க்கான பின்னடைவு ஆகியவற்றில் தசைகள் உதவுகின்றன. தசைகளின் அடர்த்தி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், நல்ல தரமான தூக்கத்தைப் பெறவும், மனநலத்தை மேம்படுத்தவும், காயங்களை சரிசெய்யவும் உதவுகிறது.

மனித உடலில் சுமார் 600 தசைகள் உள்ளன. மனித உடல் எடையில் சுமார் 40 சதவீதம் தசைகளின் எடையாகும். தசைகளின் அடர்த்தியை அன்றாட உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களின் மூலம் மேம்படுத்த முடியும். அனைத்து தசைகளுமே ஆயிரக்கணக்கான தசை நார்களால் ஆனது. ஒவ்வொரு தசை நார்களும், நரம்புகளுக்கு சமிஞ்கையை வழங்கை சுருங்கச் செய்யும்.

உடலிலேயே தசைகள் தான் சிக்கலான அமைப்பு. இத்தகைய தசைகள் ஒருவரது ஆரோக்கியம் குறித்து பல்வேறு விஷயங்களைக் கூறும். இக்கட்டுரையில் ஒருவரது தசைகள் உடலில் உள்ள பிரச்சனைகளை எப்படியெல்லாம் நமக்கு தெரியப்படுத்தும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போதுமான ஓய்வு

போதுமான ஓய்வு

ஒருவர் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டால், தசைகளில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். இப்படி அதிகளவு வலியை ஒருவர் சந்தித்தால், அது அவர்கள் போதுமான ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். உடற்பயிற்சியின் போது மிகச்சிறிய தசைகள் கிழிந்து, காயங்களை உண்டாக்கும். இந்நிலையில் ஒருவர் போதுமான அளவு ஓய்வு எடுத்தால், உடல் தானாக தசைகளில் உள்ள காயங்களை சரிசெய்து, தசைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

எனவே நீங்கள் அதிகளவு உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அதிக நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். அதோடு போதுமான அளவு நீரைக் குடிப்பதோடு, ஏரியோபின் உடற்பயிற்சிகளான வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றில் லேசாக ஈடுபட வேண்டும்.

அதிக நீர் அருந்தவும்

அதிக நீர் அருந்தவும்

நீங்கள் போதுமான அளவு நீரைக் குடிக்காமல் இருந்தால், அவர்களுக்கு அடிக்கடி தசைப் பிடிப்புக்கள் ஏற்படும். தசைத் திசுக்களாது 75 சதவீதம் நீரால் ஆனது மற்றும் இது தான் தசைகளுக்கு ரிலாக்ஸ் அளிக்கவும் செய்கிறது. ஆகவே உங்களுக்கு அடிக்கடி தசைப் பிடிப்புக்கள் ஏற்பட்டால், நீங்கள் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும் என்று அர்த்தம்.

ஏனெனில் உடலில் போதுமான அளவு நீர் இருந்தால், அது உடல் முழுவதும் ஊட்டச்சத்துக்களைக் கிடைக்கச் செய்யும். அப்படி ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத பட்சத்தில் தான் தசைகளில் பிடிப்புக்கள் ஏற்படுகின்றன.

மக்னீசிய அளவை சோதிக்கவும்

மக்னீசிய அளவை சோதிக்கவும்

வழக்கமான தசைப் பிடிப்புக்கள் மக்னீசிய குறைபாட்டிற்கான அறிகுறியாகும். தசைகளின் ஆரோக்கியத்திற்கு மக்னீசியம் முக்கியமானது. இது கால்சிய அளவைத் தூண்டி, பொட்டாசியத்தை உறிஞ்சுவதை அதிகரிக்கும். இந்த இரண்டினாலும், தசைகள் வலிமையாகும். மேலும் இந்த கனிமச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையை நீக்க உதவும் மற்றும் லாக்டிக் அமிலத்தை நீக்கி, உடற்பயிற்சியின் போது தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்.

பொட்டாசியம் உணவுகளை உண்ணவும்

பொட்டாசியம் உணவுகளை உண்ணவும்

உங்களுக்கு திடீரென்று தசைப் பிடிப்புக்கள் தீவிரமாக இருந்தால், உங்கள் உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. சொல்லப்போனால் பொட்டாசிய குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்று தசைப் பிடிப்புக்களாகும். பொட்டாசியம் திரவம் மற்றும் எலக்ட்ரோலைட்டுக்களின் அளவைப் பராமரிக்க உதவும். இது தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான செயல்பாட்டிற்கு முக்கியமான சத்தாகும்.

ஆகவே தசைகள் ஆரோக்கியமாக செயல்பட பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், பசலைக்கீரை, வெள்ளை பீன்ஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.

மது அருந்துவதைக் குறையுங்கள்

மது அருந்துவதைக் குறையுங்கள்

அளவுக்கு அதிகமாக மது அருந்துவது ஆரோக்கியத்திற்கு மற்றும் தசைகளுக்கு நல்லதல்ல. ஒருவர் அதிகளவு மதுவை அருந்தினால், அது நரம்புகளை பெரிதும் பாதித்து, நரம்பு பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவும் தசைப் பிடிப்புக்களால் அதிகம் அவஸ்தைப்படச் செய்யும். அளவுக்கு அதிகமாக ஒருவர் மது அருந்தினால், அது உடலில் லாக்டிக் அமிலத்தை அதிகரித்து, தசைகளில் வலி அல்லது பிடிப்புக்களை உண்டாக்கும். எனவே உடனே மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்கவும்

இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்கவும்

சர்க்கரை நோய் கூட கால் தசை பிடிப்புக்களை உண்டாக்கும். அதிலும் ஒருவரது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, நரம்பு பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். டயபெடிக் நியூரோபதி இருந்தால், கால் தசை வலி மற்றும் கால்கள் அடிக்கடி மரத்துப் போதல் போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்து, தசைப் பிடிப்புக்கள் அடிக்கடி ஏற்பட்டால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்

நீங்கள் அதிகமாக சிகரெட் பிடித்தால், பலவீனமான தசை மற்றும் அடிக்கடி தசை வலிகளை சந்திக்க நேரிடும். இப்படி தசை வலிகளை சந்தித்தால், நீங்கள் புகைப்பிடிப்பதை உடனே நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். சிகரெட்டில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் தசைகளை பெரிதும் பாதித்து, நாள்பட்ட மற்றும் தீவிரமான தசை வலியை சந்திக்கச் செய்யும். மேலும் புகைப்பிடித்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தைப் பாதித்து, தசைகளுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காமல், தசைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things that Your Muscles are Trying to Tell You

Here are some of the things that your muscles are trying to tell you. Read on to know more...