For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் திருமணத்திற்கு முன் கட்டாயம் செய்யவேண்டிய 5 செயல்கள்

திருமணத்திற்கு முன் ஆண்கள் செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள்

By Saranraj
|

"ஹெல்த் இஸ் வெல்த்" என்று ஆங்கிலத்தில் பிரபலமான பழமொழி ஒன்று உள்ளது. ஆரோக்கியமாய் இருப்பதே ஒரு மனிதனின் அடிப்படை செல்வமாகும். குறிப்பாக ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் சமூகம் மற்றும் கலாச்சார மாற்றங்களினால் ஆண்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு தீய பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை யை அதிகம் பாதிப்பதோடு சமூகத்தில் அவர்களின் நற்பெயரையும் சிதைக்கிறது.

Health

திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு அவர்களின் திருமண வாழ்க்கை குறித்து பல கனவுகள் இருக்கும், ஆனால் அந்த கனவுகள் உங்களுடைய பழக்கவழக்கம் மற்றும் ஆரோக்கியத்தால் சிதைந்து விடக்கூடாது. இங்கே திருமணத்திற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்கவேண்டியவை பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. எடை குறைத்தல்

1. எடை குறைத்தல்

இப்போது உள்ள பிஸியான வாழ்க்கை முறையில் ஆண்கள் பெரும்பாலும் உணவு விஷயத்தில் அக்கறை செலுத்துவதில்லை. இதுவே அவர்களின் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாகும். சாப்பிடாவிட்டால் எடை குறையும் என்ற மூடநம்பிக்கையில் உணவை தவிர்க்காமல் சரியான நேரத்தில் அளவாக சத்தான உணவை சாப்பிடவேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி செய்வது மிக அவசியம். உடற்பயிற்சி உங்கள் எடையை மட்டும் குறைக்க உதவாமல் உங்களின் விலைமதிப்பில்லா ஆற்றலை சேமிக்கவும், புத்துணர்ச்சியாகவும் உணர செய்யும். திருமணத்திற்கு முன் எடையை குறைக்க வேண்டியது மிக மிக முக்கியமானது.

2. புகைப்பழக்கம்

2. புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் என்பது இன்றைய இளைஞர்களிடையே அதிகளவு காணப்படும் ஒரு தீயபழக்கமாகும். அனைவருமே நன்கு அறிவோம் புகைபிடித்தல் புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும், எனினும் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. புகைபிடிப்பது உங்கள் உடல்ரீதியாக மட்டுமல்ல பொருளாதாரரீதியாகவும் பெரிதும் பாதிக்கும். புகைபிடித்தல் புத்துணர்ச்சியை அளிக்கிறது என்று வாதாடுபவர்கள் அதனைவிட சிறந்த வழிகள் எவ்வளவோ இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். பெண்கள் திருமணத்திற்கு முன்பு கூட நீங்கள் புகைபிடிப்பதை சகித்துக் கொள்ளலாம், ஆனால் நிச்சயமாக திருமணத்திற்கு பின் நீங்கள் புகைபிடிப்பதை விரும்பமாட்டார்கள்.

3. உணவு முறை

3. உணவு முறை

நமது ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிப்பது நாம் உண்ணும் உணவுதான். எனவே நாம் என்ன சாப்பிடுகிறோம், எதற்காக சாப்பிடுகிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். திருமணத்திற்கு முன் மட்டுமல்லாமல், திருமணத்திற்குப் பிறகும் ஆரோக்கியமான உடல் மற்றும் சருமத்திற்கு தேவையான சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். முக்கிய சத்துக்களான கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை உங்கள் உணவில் இருக்க வேண்டியது அவசியம். மேலும் அதிகளவு நீர் குடிப்பது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும்.

4. மதுப்பழக்கம்

4. மதுப்பழக்கம்

மதுப்பழக்கம் இன்றைய தலைமுறையை அழித்து வரும் ஒரு கொடிய அரக்கன் ஆகும். திருமணத்திற்கு முன் உள்ள அதிகளவு குடிப்பழக்கம் மூளை செயல்திறன் குறைவு, நரம்பு தளர்ச்சி, ஆண்மைக்குறைவு என உங்கள் வாழ்க்கையே திசைமாற்றக் கூடியது. திருமணத்திற்கு முன் மட்டுமல்ல திருமணத்திற்க்கு பின்னான அதீத குடிப்பழக்கமும் உங்கள் வாழ்க்கையையும், உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியையும் சிதைக்கக்கூடும். சிலருக்கு மதுதான் வாழ்க்கையாக இருக்கும் அப்படிப்பட்டவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது.

5. மருத்துவ பரிசோதனை

5. மருத்துவ பரிசோதனை

திருமணத்திற்கு முன் உங்கள் உடலை முழு பரிசோதனை செய்வது அவசியம். உங்கள் இரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை என அனைத்து பரிசோதனைகளையும் செய்துக்கொள்ளுங்கள். ஏதேனும் குறை இருப்பின் அதை முன்கூட்டியே சரிசெய்து கொள்வது நமக்கு மட்டுமின்றி நம் வாழ்க்கைத்துணையாக வரப்போகிறவருக்கும் நல்லது. அனைத்து சோதனையிலும் தேறி ஆண்மகனவும், மணமகனாகவும் உங்களின் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 important things men should do before getting married

5 important things men should do before getting married
Story first published: Saturday, July 7, 2018, 11:59 [IST]
Desktop Bottom Promotion