For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதாம் அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரக கோளாறு முதல் பல பயங்கர விளைவுகள் உடலில் ஏற்படுமாம்...!

|

தினமும் பாதாம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. பாதாம் எல்லா பருப்பு வகைகளை காட்டிலும் அதிக சத்துக்கள் கொண்டவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். கேக்குகளிலும், ஐஸ் கிரீம்களில், சாக்லேட்களிலும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

பாதாம் அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரக கோளாறு முதல் பல பயங்கர விளைவுகள் உடலில் ஏற்படுமாம்..!

இப்படி பாதாமிற்கு என்று ஒரு தனி வகையான தகவல்களை நாம் சொல்லி கொண்டே போகலாம். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பத்திற்கேற்ப அதிக அளவில் பாதாம் சாப்பிட்டால் எப்படிப்பட்ட பின் விளைவுகள் வரும் என்பதை இனி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சத்துக்கள் நிறைந்த பாதாம்..!

சத்துக்கள் நிறைந்த பாதாம்..!

நாம் சாப்பிட கூடிய ஆரோக்கியமான உணவில் இந்த பாதாமும் சேரும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது பொருட்களும் நிறைந்துள்ளன. ஆனால், இவற்றின் அளவில் கொஞ்சம் கூடினாலும் நச்சு தன்மையான ஆபத்துகள் நமது உடலுக்கு ஏற்படும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வயிற்று உப்பசம்

வயிற்று உப்பசம்

அதிக அளவு பாதாம் சாப்பிட்டால் உடலுக்கு நன்மை தர கூடும் என்ற எண்ணம் முற்றிலும் தவறானது. நீங்கள் அதிகமான பாதாமை எடுத்து கொண்டால், இவை நேரடியாக உங்களின் செரிமான மண்டலத்தை தாக்க கூடும். மேலும், வயிறு உப்பசம், மலச்சிக்கல், செரிமான பாதையில் சிக்கல் போன்ற பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்க கூடும்.

சிறுநீரக பிரச்சினைகள்

சிறுநீரக பிரச்சினைகள்

பாதாமில் அதிக அளவு ஆக்சலேட் உள்ளதால் இவை கிட்னிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த ஆக்ஸலேட்கள், கால்சியம் சத்தை கிட்னி எடுத்து கொள்ளாத வகையில் தடுக்க கூடியவை. எனவே, அதிக அளவில் பாதாம் சாப்பிட்டால் கிட்னியில் கற்கள் கூட உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ரத்த உறைதல்

ரத்த உறைதல்

உடலில் எந்த ஒரு ஊட்டசத்து அளவுக்கு அதிகமாக இருந்தால் பேராபத்தை ஏற்படுத்தும் தான். அந்த வகையில் பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு நாளைக்கு 25 முதல் 536 mg அளவே உடலில் இருக்க வேண்டும். மீறினால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்தம் உறைந்து விடும். இதனால், பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

MOST READ: ஆண்களே, உங்களின் தசைகளில் இந்த அறிகுறிகள் இருந்தால், நீங்கள் ஆபாயகரமான நிலையில் உள்ளீர்கள்..!

கசப்பு தன்மை கொண்டதா..?

கசப்பு தன்மை கொண்டதா..?

நீங்கள் சாப்பிடும் பாதாம் கசப்பு தன்மை கொண்டதாக இருந்தால் உடனே தூக்கி எறிந்து விடுங்கள். ஏனெனில், இவற்றில் hydrocyanic acid என்கிற விஷ தன்மை உள்ளதாம். கசப்பு கொண்ட பாதாமை சாப்பிட்டால் வயிற்று வலி, நரம்பு தளர்ச்சி, போன்ற பல வித பிரச்சினைகள் உங்களுக்கு உண்டாகும்.

உடல் எடை கூடுதல்

உடல் எடை கூடுதல்

பாதாம் அதிக அளவில் சாப்பிட்டால் இலவசமாக உங்களின் உடல் எடை கூட தொடங்கி விடுமாம். 1 அவுன்சு பாதாமில் 14 முதல் 163 கிராம் அளவு கலோரிகள் இருக்குமாம். இந்த அளவு அதிகரித்தால் கொழுப்புகளும் கூடி உடல் எடை அதிகரித்து விடும்.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம்

நீங்கள் பாதாமை அதிக அளவில் சாப்பிடுவதால் பல வித உடல் சார்ந்த மோசமான பிரச்சினைகள் வர தொடங்கும். பாதாமில் உள்ள மாக்னீஸ் அதிக அளவில் நமது உடலுக்கு சென்றால் ரத்தம் அழுத்தம் அதிகரிக்க கூடும். எனவே, இதனை அதிக அளவில் எடுத்து கொண்டால் ஆபத்து உங்களுக்கு தான்.

அல்ரஜி ஏற்படுதல்

அல்ரஜி ஏற்படுதல்

பாதாம் சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுமா..? என்கிற உங்களின் கேள்விக்கு பதில் ஆம்" என்பதுதான். பாதாம் அதிகமாக சாப்பிட்டால் மூச்சு திணறல், தோலில் அரிப்புகள், அலர்ஜிகள் உண்டாகும். மேலும் செரிமான கோளாறுகள், வயிற்றில் பகுதியில் பிரச்சினைகள் ஆகியவையும் ஏற்படும்.

MOST READ: உங்க கிட்னிய இப்படி சுத்தமா வெச்சுக்கணுமா? இந்த இலைய தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க போதும்...

பாக்டீரியா தொற்றுகள்

பாக்டீரியா தொற்றுகள்

பாதாமில் பாக்டீரியா தொற்றுகளின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறதாம். இவை வளரும் போதே இவற்றின் மீது நுண்கிருமிகள் இருக்க கூடும். எனவே, பாதாமை அப்படியே சாப்பிடாமல், கழுவியோ அல்லது சுத்தம் செய்த கடைகளில் விற்கப்படும் பாதாமை சாப்பிடுங்கள்.

எவ்வளவு தான் சாப்பிடணும்..?

எவ்வளவு தான் சாப்பிடணும்..?

உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு பாதாம் சாப்பிட வேண்டும் என்பதை கூறியுள்ளனர். அதாவது, 40 கிராம் அளவு மட்டுமே நம் ஒரு நாளைக்கு பாதாமை சாப்பிட வேண்டுமாம். இந்த அளவில் மாற்றம் ஏற்பட்டால் மேற்சொன்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும் நண்பர்களே.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால், உங்களின் அன்பிற்குரியவர்களுக்கும் பகிர்ந்து அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects Of Eating Too Many Almonds

Almond has enormous health benefits. But it has some side effects also.
Desktop Bottom Promotion