இத ஒரு டம்ளர் குடிங்க... மூட்டு வலி, தைராய்டு பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லுங்க...

Posted By:
Subscribe to Boldsky

தற்போதைய நவீன சமூகம் தான், நம்மை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியத்தை அழிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாசடைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை மற்றும் வேலைப்பளு போன்றவற்றிற்கு தள்ளுகிறது. இதனால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் நோய்களால் அவஸ்தைப்பட நேரிடுகிறது.

அதில் ஆர்த்ரிடிஸ் என்னும் கீல்வாத வலி, நாள்பட்ட உடல் சோர்வு, தைராய்டு பிரச்சனைகள், வெர்டிகோ, லூபஸ், ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் பல குறிப்பிடத்தக்கவை. நம் மருத்துவ துறையில் உள்ள முன்னேற்றத்தால், நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளின் மூலம் தீர்வு கண்டு வருகிறோம். எவ்வளவு காலம் தான் மருந்து மாத்திரைகளை எடுத்து வருவீர்கள்.

முந்தைய காலத்தில் எல்லாம் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் தான் தீர்வு கண்டார்கள். உங்களுக்கும் இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண வேண்டுமானால், மூலிகைகளுள் ஒன்றான தைம் மூலிகையைப் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தைம்

தைம்

தைம் மிகவும் ஆற்றல் வாய்ந்த மற்றும் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் மூலிகையாகும். இதில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் இருப்பதுடன், இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றும் செயல்படுகிறது.

மருந்து தொழிற்சாலைகள்

மருந்து தொழிற்சாலைகள்

தைம் மூலிகையில் உள்ள மருத்துவ குணத்தால், இது மருந்து தொழிற்சாலைகளிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் ஸ்க்ளீரோசிஸ், லூபஸ், முடக்கு வாதம் மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா போன்றவற்றை சரிசெய்யும் மருந்துகளில் இந்த தைம் மூலிகை முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

எப்படி உட்கொள்வது?

எப்படி உட்கொள்வது?

இந்த தைம் மூலிகையை டீ வடிவில் தினமும் உட்கொள்வது மிகவும் நல்லது. இதனால் அதன் மருத்துவ பண்புகள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். இப்போது அந்த தைம் மூலிகையைக் கொண்டு எப்படி டீ தயாரிப்பது என்று காண்போம்.

தயாரிக்கத் தேவையான பொருட்கள்

தயாரிக்கத் தேவையான பொருட்கள்

தைம் டீ தயாரிப்பது மிகவும் எளிது. இந்த தைம் டீயைத் தயாரிக்கத் தேவையான பொருட்களாவன:

* உலர்ந்த தைம் மூலிகை - 1 கையளவு

* தண்ணீர் - 1 கப்

* தேன் - சுவைக்கேற்ப

செய்முறை:

செய்முறை:

* முதலில் தைம் மூலிகையை நீரில் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதை இறக்கி வடிகட்டி, ஓரளவு வெதுவெதுப்பான பின் சுவைக்கு தேன் கலந்து குடிக்க வேண்டும்.

உட்கொள்ளும் முறை:

உட்கொள்ளும் முறை:

தினமும் தைம் டீயைக் குடிப்பது மிகவும் நல்லது. அதிலும் காலையில் பால் டீ அல்லது காபி குடிப்பதற்கு பதிலாக, தைம் டீ குடித்து வந்தால், உடல் பிரச்சனைகள் நீங்கி மிகச்சிறப்பான பலன் கிடைக்கும்.

இப்போது தைம் டீ குடிப்பதால் கிடைக்கும் இதர நன்மைகளைக் காண்போம்.

நன்மை #1

நன்மை #1

தைம் டீயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆகவே இந்த டீயை உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் குடித்து வந்தால், இரத்த அழுத்தம் சீராகும்.

நன்மை #2

நன்மை #2

இரத்த சோகை உள்ளதா? அப்படியெனில் தைம் டீ குடியுங்கள். இதனால் அது உடலில் சிவப்பு இரத்த செல்களின் உருவாக்கத்திற்கு உதவி, எளிதில் இரத்த சோகையில் இருந்து விடுவிக்கும்.

நன்மை #3

நன்மை #3

அடிக்கடி சளி அல்லது ஜலதோஷம் பிடிக்கிறதா? மூச்சுக்குழாய் அழற்சி இருக்கிறதா? அப்படியென்றால் தினமும் ஒரு டம்ளர் தைம் டீ குடியுங்கள். இதனால் சளி மற்றும் உடலினுள் உள்ள அழற்சிகள் குறையும்.

நன்மை #4

நன்மை #4

பெண்கள் அதிகம் அவஸ்தைப்படும் தைராய்டு பிரச்சனைகளில் இருந்து தைம் டீ விடுவிக்கும். தைம்மில் உள்ள மருத்துவ குணங்கள், தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தியை சீராக்கி, தைராய்டு குறைபாட்டைத் தடுக்கும்.

நன்மை #5

நன்மை #5

தைம் மூலிகையில் கால்சியம் ஏராளமான அளவில் உள்ளது. இதனால் தைம் டீ குடிக்கும் போது, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான முடக்கு வாதம், கீல்வாதம், மூட்டு வலி போன்றவற்றில் இருந்து விரைவில் விடுபட முடியும்.

நன்மை #6

நன்மை #6

எப்போதும் மிகுந்த களைப்பை உணர்கிறீர்களா? இந்த களைப்பு நீங்கி, உடல் சுறுசுறுப்புடன் இருக்க, காலையில் ஒரு டம்ளர் தைம் டீ குடித்து வாருங்கள். இதனால் நாள் முழுவதும் சிறப்பாக களைப்பின்றி செல்லும்.

நன்மை #7

நன்மை #7

உங்களுக்கு தொண்டைப்புண் அடிக்கடி வருமா? இந்த தொண்டைப்புண் இருக்கும் போது, தைம் டீ குடித்தால், அதில் உள்ள மருத்துவ குணத்தால், தொண்டைப்புண் விரைவில் சரியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Say Goodbye To Arthritis, Chronic Fatigue, Thyroid Problems And Much More!

Thyme is extremely potent in improving overall health. Its medicinal properties are often used in the industry by pharmaceutical factories, in products for treating multiple sclerosis, lupus, rheumatoid arthritis, and fibromyalgia. Read on...
Story first published: Monday, January 1, 2018, 16:20 [IST]