தினமும் இரவு ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இதற்கு காரணம் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதற்காகத் தான். சுத்தமான மலைத் தேனில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதனால் தான் இயற்கை வைத்தியங்களில் தேன் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது மற்றும் காயங்களை சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன.

Reasons To Start Eating Honey Everyday

முக்கியமாக தேன் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றதும் கூட. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். மேலும் தேன் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும். இத்தகைய தேனை ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? இக்கட்டுரையில் இரவு தூங்கும் முன்பு ஒரு ஸ்பூன் தேனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, தினமும் தேனை சாப்பிட்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தம் குறையும்

இரத்த அழுத்தம் குறையும்

ஒருவர் தினமும் ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக மனிதன் மற்றும் எலி கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. எனவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள்.

நல்ல தூக்கம் கிடைக்கும்

நல்ல தூக்கம் கிடைக்கும்

இரவு தூங்கும் முன் 1 டீஸ்பூன் தேன் சாப்பிட்டால், இது இன்சுலின் அளவை சற்று அதிகரிக்கும். இன்சுலின் தூண்டப்பட்டால், அது முளையில் உள்ள ட்ரிப்டோஃபேனை வெளியிடச் செய்யும். ட்ரிப்டோஃபேன் பின்பு செரடோனின் என்னும் உடலை ரிலாக்ஸாக உணரச் செய்யும் மற்றும் நல்ல மனநிலையைத் தரும் ஹார்மோனாக மாற்றப்படும். முக்கியமாக இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறச் செய்யும்.

எடை குறைய உதவும்

எடை குறைய உதவும்

தேன் கல்லீரலுக்கு எரிப்பொருள் போன்று செயல்படும் மற்றும் கல்லீரலில் க்ளூக்கோஸ் உற்பத்திக்கு உதவும். ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால், உடல் கொழுப்புக்களை இரவு நேரத்தில் சற்று அதிகமாக எரிக்க ஆரம்பிக்கும். 1 கப் பச்சைத் தேனில் 64 கலாரிகள் உள்ளன மற்றும் இதை சாப்பிட்டல், இரவு நேரத்தில் பசி எடுக்காமலும் இருக்கும்.

வறட்டு இருமல் மருந்து

வறட்டு இருமல் மருந்து

தேன் சளி மற்றும் இருமலை சரிசெய்ய உவும். அதுவும் தேன் இரவு நேரத்தில் சந்திக்கும் வறட்டு இருமலில் இருந்து விடுவிக்கும் என்பது தெரியுமா? அதிலும் ஒருவர் இரவு தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் 2 டீஸ்பூன் தேனை சாப்பிட்டால், அது வறட்சி இருமலில் இருந்து விடுவிக்கும்.

சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும்

சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும்

ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால், இது சர்க்கரை நோயாளின் அபாயதைக் குறைக்குமாம். அதிலும் உங்களுக்கு ஏற்னவே சர்க்கரை நோய் இருந்தால், தினமும் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட வேண்டும். இது சர்க்கரை நோயை சரிசெய்ய உதவும். ஏனெனில் தேன் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

ஆரோக்கியமான கல்லீரல்

ஆரோக்கியமான கல்லீரல்

கல்லீரல் இரவு நேரத்தில் செயல்படுவதற்கு போதுமான எரிப்பொருள் தேவை. இந்த எரிப்பொருள் தேனில் இருந்து அதிகம் கிடைக்கும். ஏனெனில், தேன் கல்லீரலில் க்ளுக்கோஸை உற்பத்தி செய்யச் செய்து, கொழுப்பைக் கரைக்கும் பல ஹார்மோனின் வெளியீட்டிற்கு உதவும். மேலும் தேனில் புருக்டோஸ் மற்றும் க்ளுக்கோஸ் போன்ற இரவு நேரத்தில் கல்லீரலின் செயல்பாட்டிற்குத் தேவையானவை உள்ளன.

உடல் பருமன்

உடல் பருமன்

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் இது வயிற்றில் உள்ள கொழுப்புக்களை முற்றிலும் கரைத்து, கொழுப்பை உட்கொள்ளும் அளவைக் குறைக்கும். அதிலும் வெதுவெதுப்பான நீரால் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஜூஸ் வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

செரிமானத்தை மேம்படுத்தும்

தேனை வெதுவெதுப்பான நீருன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடித்தால், அது செரிமான மண்டலத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவும் பாதுகாப்பான வழிகளுள் ஒன்றாகும். மலைத் தேனில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழிக்க உதவும். ஆகவே உங்கள் செரிமானம் சிறப்பாக நடைபெற வேண்டுமேன ஆசைப்பட்டால், தினமும் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிடுங்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும். இதனால் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் பல்வேறு நோய்களின் தாக்குதல் தடுக்கப்படும். மேலும் தேனில் உள்ள பாலிபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதயம் சம்பந்தப்பட் நோய்கள் மற்றும் புற்றுநோயையும் தடுக்கும்.

கொலஸ்ட்ரால் மேம்படும்

கொலஸ்ட்ரால் மேம்படும்

தேன் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்றதும் அச்சம் கொள்ள வேண்டாம். தேன் நம் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே உங்கள் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க வேண்டுமானால், தேனை தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons To Start Eating Honey Everyday

Honey is an anti-diabetic agent, which is known to reduce blood glucose levels. Read this article to know more about the health benefits of having honey before bed.
Story first published: Saturday, March 31, 2018, 17:40 [IST]