தாங்க முடியாத குதிகால் வலியா? அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று தான் குதிகால் வலி. இதனால் சாதாரண செயல்பாடுகளைக் கூட செய்ய முடியாமல் பெரும் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். குதிகால் வலி வருவதற்கு முக்கிய காரணம், குதிகால் எலும்புக்கு கீழே கால்சியம் படிகங்கள் தேங்குவதால் வருவதாகும். இது தாங்க முடியாத வலியாக இருக்கும்.

Natural Home Remedies For Heel Pain

குதிகால் வலி வருவதற்கு காயங்கள், பிடிப்புகள், எலும்பு முறிவு, உடல் பருமன் மற்றும் பொருந்தாத காலணிகளை அணிவது போன்றவைகளும் முக்கிய காரணங்களாகும். இதனால் குதிகால் பகுதி வீக்கத்துடனோ, எரிச்சலுடனோ, குதிகால் பலவீனமாகவோ இருக்கும். சில சமயங்களில் குதிகால் வலியானது கீல்வாதம், ஆர்த்ரிடிஸ் போன்றவற்றாலும் வரும். ஹை-ஹீல்ஸ் கூட குதிகால் வலியை உண்டாக்கும்.

இங்கு குதிகால் வலியில் இருந்து உடனடியாக விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி குதிகால் வலியில் இருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்சம் உப்பு

எப்சம் உப்பு

எப்சம் உப்பு குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். ஏனெனில் இதில் வலி, வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்க உதவும் மக்னீசியம் சல்பேட் நிறைந்துள்ளது. அதற்கு 3 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பை வெதுவெதுப்பான நீரில் போட்டு, பாதங்களை அந்நீரில் 20 நிமிடம் ஊற வையுங்கள். பின் பாதங்களை நன்கு உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி குதிகால் பகுதியை மசாஜ் செய்யுங்கள்.

மஞ்சள்

மஞ்சள்

குதிகால் வலிக்கு மஞ்சள் உடனடி நிவாரணம் கொடுக்கும். ஏனெனில் மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலியில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஒரு கப் பாலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, சிறிது தேன் சேர்த்து தினமும் 2 முறை குடித்து வர, குதிகால் வலி நீங்கும்.

ஸ்ட்ரெட்சிங் பயிற்சி

ஸ்ட்ரெட்சிங் பயிற்சி

ஸ்ட்ரெட்சிங் பயிற்சி வலியைக் குறைப்பதோடு, விரைவில் குணமாகவும் உதவும். மேலும் இப்பயிற்சி தசைகள் மற்றும் தசைநார்களை வலிமைப்படுத்தி, வலி வராமல் தடுக்கும். அதற்கு வெறும் காலில் சுவற்றின் முன் சற்று இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பின் இரண்டு கைகளையும் சுவற்றில் பதித்து, ஒரு காலை முன்புறம் எடுத்து வைத்து ஸ்ட்ரெட்ச் செய்யுங்கள். இப்படி 30 நொடிகள் செய்து, மறுகாலை மாற்றி 30 நொடிகள் செய்ய வேண்டும்.

மசாஜ்

மசாஜ்

குதிகாலை மசாஜ் செய்வதன் மூலமும், குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் மசாஜ் செய்யும் போது, அது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, குதிகாலில் உள்ள அழுத்தத்தைத் தடுத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதற்கு கடுகு எண்ணெய் கொண்டு குதிகால் பகுதியை மசாஜ் செய்யுங்கள்.

இஞ்சி

இஞ்சி

தசைப்பிடிப்புக்களாலும் குதிகால் வலி வரலாம். இதற்கு இஞ்சி நல்ல நிவாரணம் அளிக்கும். ஏனெனில் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வலி நிவாரண பண்புகள் உள்ளது. ஆகவே குதிகால் வலியால் கஷ்டப்படுபவர்கள், தினமும் இஞ்சி டீயைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள் அல்லது இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

குதிகால் வலிக்கு ஆப்பிள் சீடர் வினிகர் மற்றொரு சிறந்த நிவாரணி. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. எனவே ஒரு கப் நீரில் 1/4 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றிக் கொள்ளுங்கள். பின் ஒரு துணியை அந்நீரில் நனைத்து நீரைப் பிழிந்து வலியுள்ள பகுதியில் 15-20 நிமிடம் வைத்து எடுங்கள். இதனால் குதிகால் வலி சரியாகும்.

மிளகு

மிளகு

மிளகில் வலிமையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும் இதில் கேப்சைசின் எனும் வலி நிவாரண பண்புகள் உள்ளது. 1/4 கப் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலில் 1 டேபிள் ஸ்பூன் மிளகு சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.

ஆளிவிதை ஆயில்

ஆளிவிதை ஆயில்

ஆளி விதையில் ஆல்பா-லினோலினிக் அமிலம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அழற்சியை எதிர்க்கும் பொருட்கள் உள்ளது. இது குதிகால் வலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். அதற்கு சிறிது ஆளி விதை எண்ணெயி வெதுவெதுப்பாக சூடேற்றி, ஒரு துணியில் நனைத்து குதிகால் பகுதியைச் சுற்றி 1 மணிநேரம் ஊற வையுங்கள். இதனால் குதிகால் வலி சரியாகும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் ஏராளமான ஆரோக்கிய பண்புகள் உள்ளது. இது குதிகால் பகுதியில் தேங்கிய கால்சியம் படிகங்களை நேரடியாக கரைத்து, குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அதற்கு 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, குதிகால் பகுதியில் தடவுங்கள். இதன் மூலம் கடுமையான குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.

நறுமண எண்ணெய்கள்

நறுமண எண்ணெய்கள்

நறுமண எண்ணெய்களான ரோஸ்மேரி அல்லது லாவெண்டர் எண்ணெய்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், குதிகால் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு இந்த எண்ணெய்களுள் ஏதேனும் ஒன்றை வெதுவெதுப்பாக சூடேற்றி, குதிகால் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வலி வருவதை முற்றிலும் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Home Remedies For Heel Pain

Heel pain is a common ailment that can occur to anybody. The swelling and inflammation increases in the heels if not treated in time. Read here to know the natural home remedies for heel pain.
Story first published: Tuesday, January 16, 2018, 17:20 [IST]
Subscribe Newsletter